எந்தெந்த பயிரில் என்ன ஊடுபயிர்? நெல்லில் ஊடுபயிர்கள் வயல் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் தட்டை பயறு விதைக்க வேண்டும்.இந்த தட்டை பயறில் நெற்பயிரை தாக்காத அசுவினிகள் உற்பத்தியாகும். இதனால் ஏராளமான பொறிவண்டுகள் கவரப்படும்.இந்த பொறிவண்டுகள் நெற்பயிரை தாக்கும் பலவிதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது. நெற்பயிரில் ஊடுபயிராக மணிலா அகத்தி, பயறு வகைகள் (வரப்பு பயிர் ), வெண்டை கிளைரிசிடியா போன்றவற்றை பயிரிட்டு லாபம் பெறலாம். நிலக்கடலையில் ஊடுபயிர்கள் நிலக்கடலையில் ஆமணக்கு செடிகளை வயல் ஓரங்களில் 2 மீட்டருக்கு ஒரு செடி வீதம் நடவு செய்வதால் புரோடீனியா புழுக்களை கவர்ந்து அழிக்கலாம் . நிலக்கடலையோடு 250 கிராம் கம்பு சேர்த்து கலப்பு பயிராக விதைத்து நிலக்கடலையை தாக்கும் சுருள் பூச்சி , இலைப்பேன் மற்றும் அந்துப்பூச்சியின் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம். 10 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை என்ற அளவில் ஊடு பயிராக செய்து பொறிவண்டுகளின் பெருக்கத்தை அதிகரிக்கலாம் . எந்தெந்த பயிரில் என்ன ஊடுபயிர்? துவரையில் ஊடுபயிர்கள்: துவரை,பாச...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்