ரசாயனம் உரம் பயன்படுத்தாமல், மண் கரைசல் மூலம் மகசூல் கூட்டும் முறை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி, கூடப்பாக்கம் வேளாண் விஞ்ஞானி வெங்கடபதி மகளும், எல்.என்.டி.சி இணை நிறுவனருமான இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை: ஆந்திரா விவசாயி ஒருவர் ரசாயன உரம் பயன்படுத்தாமல், மண் மூலம் மகசூல் கூட்டும் முறையை கண்டுப்பிடித்துள்ளார். இதனை ஒய்.எஸ்.ஆர் பல்கலைக்கழகம் உறுதி செய்து, காப்புரிமை பெற்றுக்கொடுத்துள்ளது. நிலத்தின் மேல் மண் 15 கிலோ, 4 அடிக்கு கீழ் அடுக்கு மண் 15 கிலோ என இரண்டையும் சேர்த்து நிழலில் உலர்த்த வேண்டும். 15 தினங்களுக்கு பின், 200 லிட்டர் பேரல் தண்ணீரில் கலக்க வேண்டும். அந்த தண்ணீரை பி.பி.டி நெல் ரகத்திற்கு இலை வழி தெளிப்பு மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளித்து வர ஒரு ஹெக்டேரில் 4300 கிலோ மகசூல் கிடைத்தது 5 சாகுபடியிலும் ஒரே அளவான மகசூல் கிடைத்தது நெல், கோதுமை, சோளம், திராட்சை சாகுபடியில் பூச்சி, பூஞ்சனம், நோய் தாக்குதல் அறவே இல்லை. இந்த கரைசலில், கண்ணுக்கு புலப்படாத மண் துகள்கள் இலை மேல் ஒட்டி கொள்கிறது. பூச்சிகள் இ...