Skip to main content

Posts

கால்நடை வேளாண்மை டிசம்பர் மாத இதழ் PDF வடிவில்

கால்நடை வேளாண்மை டிசம்பர் மாத இதழ் PDF  வடிவில்  You have to wait 15 seconds. Download Timer JavaScript needs to be enabled in order to be able to download.

கொய்யா இயற்கை விவசாயம் - கொய்யா வளர்ப்பு உர மேலாண்மையும்

Guava Organic Agriculture Cultivation - Guava Cultivation organic Fertilizer Management கொய்யா செடி வளர்ப்பு முறை - Guava cultivation method கொய்யா செடியில் இலைகள் படத்தில் காட்டியது போல் இலைகள் மொற மொற என இருந்தால் நீர் பற்றாக்குறையாக இருக்கிறது  . அதாவது மண்ணிற்கு ஏற்றார்போல நீர் இல்லை  என்று அர்த்தம் . உணவு தயாரிக்கும் பொழுது வேரில் நீர் இல்லையென்றால் இப்படி கொய்யாவின் இலைகள் இப்படி தெரியும் . ஒருவேளை நீர் அதிகமாக கொடுத்தால் இலையை தொடும்பொழுது தோல் போன்று மெதுவாக இருக்கும் . எனவே கொய்யாவுக்கு தண்ணீர் தேவையான அளவு பார்த்து கொடுக்கவேண்டும். தழைச்சத்து அல்லது சாம்பல் சத்து அளவு -  Amount of nitrogen or ash கொய்யாவின் இலைகள் மஞ்சளாக இருந்தால் , தழைச்சத்து அல்லது சாம்பல் சத்து அளவு குறைவாக இருந்தால் அப்படி தோன்றும்  அதைக்கேற்றார் போல் இயற்கை விவசாய  இடுபொருட்கள் கொடுக்க வேண்டும் அப்டி கொடுத்தாலே சரியாகிவிடும் . ஒரு மரத்திற்கு இரண்டு லிட்டர் ஜீவாமிர்தம் . மேலும் 20 மில்லி மீன் அமிலம் , பஞ்சகாவிய , எது முடியுமோ அதை கொடுக்கலாம் . தெளிச்சு பத்து நாளைக்கு ஒரு முறை...

வெண்டைக்காய் இயற்கை விவசாயம் - வெண்டைக்காய் பூச்சி கட்டுப்பாடு

Bhindi organic agriculture - Bhindi organic pest control  பூச்சி கட்டுப்பாடு வெண்டைக்காயில் பூச்சி கட்டுப்படுத்த பொதுவாக இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கரைசல் இதோடு வசம்பு கரைசல் கொடுக்கலாம் அக்னி அஸ்திரம் ,கற்பூரக்கரைசலும் தெளிக்கலாம்  ஒரு இடத்தில் இருந்து விரட்டி விட்டால்  மற்ற இடங்களுக்கும் செல்ல வாய்ப்பிருக்ககிறது அதே சமயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கரைசல் கொஞ்சம் செலவு அதிகமானதாகும் எனவே பாதிக்கப்பட்ட இடத்திற்கும் மட்டும் இதை அடித்துவிட்டு மற்ற இடங்களுக்கு எது விலை கம்மியாக இருக்கோ அதை நிலம் முழுவது அடுச்சுவிடலாம் . இதை மூணாவது மற்றும் யாராவது நாள் மறுபடியும் செய்ய வேண்டும் 

இணைய வழி கருத்தரங்கு - கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு கருத்தரங்கு

Internet Seminar - Livestock and Poultry Seminar அனைவருக்கும் வணக்கம் கோழி வளர்ப்பு - Click Here காஞ்சிபுரம் மாவட்ட உழவர் பயிற்சி மையம், ஏனாத்தூர்  நடத்தும் இணையவழி கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு கருத்தரங்கு நாள் : 22.12.2020 முதல் 24.12.2020 வரை பயிற்சி கட்டணம் : 100 ரூபாய் பதிவு செய்ய கடைசி நாள் : 21.12.2020 நேரம் : தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை முன்பதிவு கட்டாயம்   தொடர்புக்கு முனைவர்.சி.சௌந்தரராஜன்  பேராசிரியர் மற்றும் தலைவர், உழவர் பயிற்சி மையம், ஏனாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம். 9500563853 மற்றும் +918825784259 மருத்துவர்.ரா.கோபி உதவி பேராசிரியர், உழவர் பயிற்சி மையம், ஏனாத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம். 7530052315 (பதிவு செய்தவர்களுக்கு இணையவழி இணைப்பு பின்னர் வழங்கப்படும்) மேலும் பயிற்சி விவரங்களுக்கு brochure டவுன்லோட் செய்யவும்  You have to wait 15 seconds. Download Timer JavaScript needs to be enabled in order to be able to download.

வேளாண் பண்ணை கழிவுகளை மறுசுழற்சி செய்தல்

Recycling of agricultural waste இணையவழி கலந்துரையாடல்  வீட்டுக்கழிவுகளை பயன்படுத்தி காய்கறி தோட்டம் அமைத்தல்  பண்ணை கழிவுகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரித்தல்  வேளாண் கழிவுகள் மூலம் காளான் உற்பத்தி  பார்த்தீனியம் கலைகளை கொண்டு மட்கு உரம் தயாரித்தல்  zoom ID மற்றும் PASSWORD க்கு மேலும்  விவரங்களுக்கு   கிழே  டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும்  You have to wait 15 seconds. Download Timer JavaScript needs to be enabled in order to be able to download.

இயற்கை முறையில் தர்பூசணி சாகுபடியில் கவனிக்க வேண்டியவை

Things to look out for in watermelon cultivation Organically  தர்பூசணி - Watermelon தர்பூசணி ஊடுபயிராக 10 டன்னும் அதுவே தனிப்பயிராக 15 டன்னும் மகசூல் வரும் நிறைவான வருமானத்தை கொடுக்கக்கூடியது . கோடையில் அறுவடைக்கு வருவதுபோல் பயிரிட்டால் மேலும் நாள் வருமானம் கிடைக்கும் . தர்பூசணி ரகங்கள் -  Varieties of watermelon தர்பூசணி ரகங்கள் என்றுபார்த்தால் பூசா பேதனா, அம்ருத் அர்கா, மானிக், நியூ ஹாம்ப்ஷைர், மிட்ஜெட், சுகர் பேபி, அஷாஹ ஜயமாடோ, அர்கா ராஜஹன்ஸ், துர்காபுரா மீதா, கேசர், அர்கா போன்ற ரகங்கள் உள்ளன  தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரிய குளம் தர்பூசணி ரகம் உள்ளது இதை PKM -1 ரகம் என்றும் அழைக்கப்படுகிறது இது ஒரு அதிக மகசூல் தரக்கூடிய ரகமாகும்  இயற்கை முறையில் தர்பூசணி சாகுபடி 1. டிசம்பர் மாதம் கடைசி வாரம் முதல் ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை நடவு செய்யலாம். நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 1.75 கிலோ விதைகள் தேவைப்படும். அந்த விதைகளை ஒரு கிலோவிற்கு 10 கிராம் சூடோமோனாஸ் மற்றும் 30 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் அரிசி வடிகட்டிய கஞ்சியுடன் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து நடவு செய்யலாம். 2.நடவு வ...

இயற்கை முறை மிளகாய் சாகுபடி - தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து பற்றாக்குறை

The leaves turn yellow and repair the chilli plant. What is the solution for this?  இந்த மிளகாய் செடிக்கு இலை மஞ்சளாகி பழுத்து கொட்டுகிறது.இதற்கு தீர்வு என்ன? Chilli Cultivation - Nutrient and ash deficiency தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து  பற்றாக்குறை  இதற்க்கு போதுமான அளவு தழைச்சத்தும் , சாம்பல் சத்தும் கொடுக்கவேண்டும். ஒரு மாசம்ன்னு எடுத்துக்கொண்டால் ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஒண்ணாம் மற்றும் பதினைந்தாம் தேதி என இரண்டு தடவை கொடுக்கலாம். மீன் அமிலம் ஐந்து மற்றும் இருபதாம் தேதிகளில் ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர்  அல்லது பதினைந்து   மற்றும்  இருபத்தைந்தாம் தேதியும் ஈ . எம் கரைசல் குறைந்த பாசம் இரண்டு லிட்டர் தரைவழி கொடுக்கலாம். இதேபோல் தெளிப்புல 10 நாளைக்கு ஒருமுறை 10 லிட்டருக்கு 300 மில்லினு பஞ்சகாவியா அல்லது  ஈ . எம் கரைசல் தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு குறைந்தபச்சம் 25 கிலோ சாம்பல் கிடைத்தால் பாசனம் செய்த பின்பு தூவிவிடலாம். அல்லது பொட்டாஷ் மொபலைசிங் பாக்ட்ரியா ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் வாங்கி தரை வழி கொடுக்கலாம் 

ஆடு வளர்ப்பு கேள்வி - பதில்

Goat breeding question and answer ஆட்டின் காலில் புண் உள்ளது? செருமல் இருக்கிறது தீர்வு என்ன? பதில் : புண் உள்ள காலில் மஞ்சள், வேப்பிலையை அரைத்து தடவவும். ஈக்கள் உட்காராதவாறு புண்ணை சுற்றி வேப்பண்ணெயை தடவவும். இருமல் இருப்பதற்கு குடற்புழு நீக்கம் செய்வது நல்லது. குடற்புழு நீக்கம் செய்ய அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை அணுகி மருத்துவரின் அறிவுரைபடி குடற்புழு நீக்கம் செய்யுங்கள். கேள்வி  தலச்சேரி ஆடுகள் எங்கே கிடைக்கும்? பதில்  கேரளாவில் உள்ள தலச்சேரி என்னும் இடத்தில் இந்த இன ஆடுகள் கிடைக்கும் மற்றும் சென்னையில் உள்ள காட்டான் குளத்து¡ர் கால்நடை பண்ணையில் கிடைக்கும். முகவரி : கிருஷி விக்யான் கேந்திர (KVK), காட்டுப்பாக்கம் – 603 203, காஞ்சிபுரம் மாவட்டம், தொலைபேசி எண்: 044-27452371 கேள்வி  ஆட்டிற்கு நாக்கில் கொப்பளம் போல் உள்ளது, காய்ச்சல் மற்றும் தீனி எடுக்கவில்லை? பதில்  ஆட்டின் உதட்டில் கொப்பளம் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். அது அம்மை நோயா என்று கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெற்று கொள்ளவும். மேலும் நாக்கில் கொப்பளம் இருப்பின் போரிக் ஆஸிட் பவுடர்யைய...

ஒருங்கிணைந்த பண்ணையம் என்றால் என்ன Integrated Farm

ஒருங்கிணைந்த பண்ணையம் - Integrated Farm விவசாயத்துக்கான நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே வருகிறது. எனவே விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும் பொருட்டு முற்றிலும் ஒரு புதிய அணுகு முறை தேவைப்படுகிறது. அதாவது, பண்ணையத்தின் மொத்த வருமானத்தை அதிகரித்தல், ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருமானத்துக்கு வழி ஏற்படுத்துதல், விவசாயத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளித்தல், பண்ணைப் பொருட்கள், பண்ணைக் கழிவுகளை சிறிய முறையில் சுழற்சி செய்தல், பண்ணையிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மீண்டும் வயலில் இட்டு நிலத்தின் வளம், மகசூலைப் பெருக்குவதோடு, உரச் செலவுகளைக் குறைப்பது போன்றவை. இப்புதிய அணுகுமுறையே ஒருங்கிணைந்த பண்ணையமாகும். பண்ணைத் திட்டம்  ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பண்ணைத் திட்டம் வகுக்கும்போது நிலங்களுக்கு ஏற்ற பயிர்த் திட்டத்தை அமைத்தல் வேண்டும். பின்பு அந்தப் பயிர்த் திட்டத்துக்கு ஏற்ப பொருளாதார ரீதியில் பலன் தரக்கூடிய ஒன்று அல்லது இரண்டு உபதொழில்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்து எடுக்கும் உபதொழில்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டும். அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட...

காய்கறியில் அசுவினி தாக்குதலுக்கு, பிரண்டை கசாயம்

 காய்கறியில்   அசுவினி  இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள்  இலையின் அடிப்பாகத்திலும் குருத்துப் பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். பெரும்பாலும் ஆண்டு முழுவதும் காணப்படும் இப்பூச்சி,  மஞ்சள்  கலந்த பச்சை நிறமாகக் காணப்படும். இளம் தாவரங்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். இவை இலைச் சாற்றை உறிஞ்சுவதால் தாக்கப்பட்ட இளங்குருத்து மற்றும் இலைகள்  சிறுத்தும், சுருங்கியும், தடித்தும் வளைந்தும்  காணப்படும். பூச்சிகளின் வயிற்றுப் பகுதியிலிருந்து சுரக்கும் தேன் போன்ற திரவத்தால் இலைகளின் மேல் பரப்பில்  மேல் கரும்பூசண வளர்ச்சி தென்படும். இதனால் எறும்புகளின் நடமாட்டம் தாக்கப்பட்ட செடிகளில்  அதிகமாகக் காணப்படும். இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை முறையில் பிரண்டை  கசாயம் மூலம் கட்டுப்படுத்தலாம் அதை எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம்   *தேவையான பொருட்கள்* பிரண்டை - 3 கிலோ சோற்றுக் கற்றாழை- 3 கிலோ  புகையிலை -1/2 கிலோ. கோமியம்     -10 லிட்டர்  *செய்முறை* மேற்கண்ட அளவுகளில் இந்த மூன்றையும் உரலில் ந...

கொய்யா இயற்கை விவசாயம் தைவான் பிங்க் கொய்யா பூச்சி கட்டுப்பாடு

Guava Natural Agriculture Taiwan Pink Guava Pest Control படத்தில் காட்டியது போல் பிரவுன் கலர் மற்றும் சைஸ் இல்லாமலும் உள்ளது. இயற்கை விவசாயமாக இருந்தாலும் செயற்கை விவசாயமாக இருந்தாலும் சரி பூச்சிகளை எதிர்த்து நம்மால் விவசாயம் செய்வது கடினமே . பூச்சி தாக்குதலுக்கு முன்பு சில  அடிப்படை விஷயங்களை செய்ய வேண்டும்  1) கருவாட்டு பொறி வாங்கி வைக்கவேண்டும் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 20 எண்ணிக்கையிலாவது கட்டி தொங்க விடவேண்டும். 2) சூரிய ஒளியில் இயங்கக்கூடிய விளக்கு பொறி வைக்க வேண்டும்  3) பழ ஈ கான  பொறிகள் வைக்கவேண்டும்   தாக்கிய பின்பு   1) கற்பூரக்கரைசல் அல்லது அக்னி அஸ்திரம் அல்லது வேப்பெண்ணை கரைசல் அல்லது பொன்னீம் கரைசல்  ஏதாவது ஒன்றை தெளிக்கவேண்டும்  2) பவேரியா பேசியானா தெளிக்கணும்  ஒருதடவை தெளித்தால் 7 மற்றும் 14 நாள் மீண்டும் ஒரு முறை கட்டாயம் தெளிக்க வேண்டும்  3) இதை தவிர்த்து சூடோமோனஸ் கொடுக்கவேண்டும்  இதெல்லாம் செய்யும்போது கொய்யா எந்தவித குறைபாடும் இல்லாமல் விற்பனைக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கு Smart Vivasayi