Skip to main content

Posts

விளக்கு பொறி மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி எது சிறப்பானது

Lamp Trap Yellow Sticky Trap Which is better விளக்கு பொறிகளையும், மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறிகளையும் ஒப்பிடும்பொழுது,  செயல்படும் தன்மையில் சிறப்பானது எந்த வகை பொறி  மஞ்சள் நிற ஒட்டும் பொறி மஞ்சள் நிற ஒட்டும் பொறி  பறக்ககூடிய தாய் பூச்சிகளை புடிக்கும் வகையிலான அட்டைகள் , பூச்சிகள் பறக்கும் பாதைகளில் அது இருந்தால் ஓட்டும். அதனால்தான் , இதை ஏக்கருக்கு குறைந்தது 20தாவது  வைக்கிறோம் அப்படி வைக்கும் பொழுது ஏதாவது ஒரு அட்டையில் அது மாட்டும் இதை பயிரோட தலை உயரத்திற்கு வைக்கவேண்டும் இதனால் புழுவை உருவாக்கக்கூடிய பூச்சிகள் ஓரளவுக்கு கட்டுப்படும்  விளக்கு பொறி சூரிய ஒளியில் உள்ள விளக்கு பொறியில்  இரவு நேரத்தில் புற ஊதாக்கதிர்களை அடிப்படையாக வைத்து தீமை செய்யக்கூடிய பூச்சிகள் சாயந்தரம் 6 மணியிலிருந்து 10 மணிக்குள் இரை தேடி அலையும் போது விளக்கில் கவர்ந்து விழும் . இந்த இரண்டிற்கும் உள்ள செயல்பாடுகள்  இந்த இரண்டிற்கும் உள்ள செயல்பாடுகள் வேறு வேறு ஆகும் ஆனால் இரண்டுமே தேவை . ஒரு பொருளோட பிரச்னை  என்று பார்த்தால் ஓட்டும் அட்டை வாழ்நாள் கம்மிதான் கவனமும் எடுத்துக்கொள...

வெள்ளாட்டை ஐந்து முறைகளில் வளர்க்கலாம்

Goats can be reared in five ways இந்தியாவில் 97 சதவீத கிராமங்களில் அவசியம் வெள்ளாடு இருக்கும். வெள்ளாடு வளர்ப்புக்கு குறைந்த முதலீடு போதுமானது. விரைவில் வருமானம் தரக்கூடியது. வெள்ளாட்டுக் கறி எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது.  வெள்ளாட்டை ஐந்து முறைகளில் வளர்க்கலாம் 1. தானே மேய்ந்து வரும் சுய மேய்ச்சல் ( *Uncontrolled Grazing* ) 2. கொட்டகையும் மேய்ச்சல் இணைந்த முறை ( *Semi Intensive* ) 3. கயிறு கட்டி மேய்ச்சல் ( *Tatnering* ) 4. கொட்டகை முறை வளர்ப்பு ( *Stall Fed System)*  5. ஆழ்கூள முறை வளர்ப்பு ( *Deep Litter System)* 1. சுய மேச்சல்   இதுதான் தமிழ்நாட்டில் இயல்புக்கு ஏற்ற வளர்ப்பு முறை அதிகமான ஆடுகளை இந்த முறையில்தான் வளர்க்கப்படுகின்றன. அதிகாலையில் பட்டியலில் இருந்து வெளியில் விடப்படும் ஆடுகள் காடு, மேடுகள் வயல்வெளிகளில் பரவலாக மேய்ச்சல் விடுபட்ட பட்டியில் அடைக்கபடும். 2. கொட்டகையும் மேய்ச்சல் இணைந்த முறை இந்த முறையில் பகல் நேரங்களில் மேய்ச்சல், இரவு நேரங்களில் கொட்டகையில் அடைத்து  புல், உலர் தீவனம், அடர் தீவனம் கொடுக்கப்படும். 3.கயிறு கட்டி மேய்ச்சல் குறைந்த எண்ணிக்...

எலுமிச்சை செடி வளர்ப்பதற்கான 10 ஆலோசனைகள்

10 Tips for Growing a Lemon plant  எல்லா பழங்களையும் சாப்பிடும் எலி இந்த ஒரு பழத்தை மட்டும் சாப்பிடமுடியாமல் மிச்சம் வைத்ததால் எலுமிச்சை  பெயர் வந்தது என ஒரு பேச்சு உண்டு . எலுமிச்சையில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது , இது மனித உடம்புக்கு தேவையான முக்கியமான சத்தாகும் . பி காம்ப்ளெக்ஸ் மற்றும் flavonoids சத்துக்கள் நிறைந்துள்ளது .நாட்டுப்புற மருத்துவத்தில், தேனுடன் கலந்த எலுமிச்சை சாறு குடிப்பது சளி நோய்க்கு நல்லது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் காணப்படும் முக்கிய எலுமிச்சை ஜெனோவா, இனிப்பு எலுமிச்சை, லிஸ்பன், பொமலோ. நிறைய இடங்களில் வீட்டிலும் மாடியிலும் கூட தற்பொழுது வளர்க்கின்றனர்நிறைய விவசாயிகள் எலுமிச்சை சரியாக காய்ப்பு இல்லை , எதிர்ப்பார்த்த மகசூல் எடுக்க முடிவதில்லை என சொல்கின்றனர் . எலுமிச்சை வளர்வதற்க்கு சரியான மண் தேர்வு , வெளிச்சம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் எந்தவொரு பெரிய முதலீடும் இல்லாமல் அதிக லாபம் எடுக்கலாம் . எலுமிச்சையில் அதிக காய்கள் வர  1) தேவையான அடி உரம் போட வேண்டும் தொழு உரம் மட்டும் போடுவது பலன் அளிக்காது உடன் தேவையான அடிஉரங்கள் போடவேண்...

பயிருக்கு தேவைப்படும் சத்துக்கள் மற்றும் சத்துக்களை கொடுக்கக்கூடிய தாவரங்கள்

Plants that can provide the nutrients and nutrients the crop needs பயிர்களின் வளர்ச்சிக்கு  16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படும் . பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள்  பேரூட்டச்சத்துக்கள் எனப்படும்.  பயிர் வளர்ச்சிக்கு குறைவாக தேவைப்படும் சத்துக்கள்  நுண்ணூட்டச்சத்துக்கள்  எனப்படும். A. பேரூட்டச்சத்துக்கள் தழைச்சத்து (N) மணிச்சத்து ((P) சாம்பல்சத்து (K) B. இரண்டாம் நிலை பேரூட்ட சத்து சுண்ணாம்புச்சத்து (Ca) கந்தகசத்து (Sulphur) மெக்னீசியம் சத்து(Mg) முதலியன அதிகளவில் தேவைப்படும் எனவே இவை *இரண்டாம் நிலை பேரூட்டச்சத்துக்கள்* எனப்படும்.  C. நுண்ணூட்டச்சத்து இரும்புச்சத்து (Fe) துத்தநாக சத்து (Zn) மாங்கனீசு சத்து (Mn) மாலிப்டின சத்து (Mo) தாமிர சத்து (Cu) போரான் சத்து (B) பயிர்களுக்கு குறைந்த அளவே  தேவைப்படுவதால் இவை நுண்ணூட்டச்சத்துக்கள்எனப்படும். D. பயிர் விளைவிக்கும் சத்துக்கள் குளோரின் சத்து சோடியம் சத்து அலுமினியம் சத்து சிலிகான்சத்து - வளர்ச்சிக்கு மிக மிகச் குறைந்த அளவே தேவைப்படும் இவை  பயிர் விளைவிக்கும் சத்துக்கள் எனப்படும் ...

2021 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கான சிறந்த விவசாய மொபைல் ஆப்கள் பற்றி பார்ப்போம்

 Let’s see about the best agricultural mobile apps for farmers in 2021 நமது கிராமத்தில்  உள்ள மக்கள் டிஜிட்டலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருககிறார்கள் . பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் நடத்திய  ஒருஆய்வின் படி 2020 குள் 48 சதவீதம் கிராம மக்கள்  டிஜிட்டலை நோக்கி செல்வது அதிகரித்துள்ளனர் என்று சொல்கிறார்கள்  . அதே சமயம் 58 % மக்கள் விவசாயத்தையே  தங்கள் வாழ்வாதாரம்மாக  நம்பி உள்ளனர் . விவசாய ஆஃப்கள்  வந்த பின்பு விவசாயிகளுக்கு வழிகாட்ட சுலபமான ஒரு ஊடகமாக அது மாறியுள்ளது  . பயிர் அல்லது காய்கறி, வேளாண்மை, பயிர் சாகுபடி, விதைத்தல் அல்லது அறுவடை செய்வதற்கான சரியான விஞ்ஞான வழியை இது வழங்குகிறது. பூச்சி மற்றும் நோய்களுக்கான பிரச்சனைகளையும்  மருந்துகளையும்  மற்றும் சரி செய்வதற்கான சரியான வழிமுறைகளை இந்த விவசாய ஆப்கள் தருகின்றன . இந்த விவசாய ஆஃப்கள்  விவசாயிகளுக்கு சிறந்த நண்பனாக விவசாயத்துக்கு உதவி செய்கிறது . நீங்கள் எந்த ஒரு பணமும் செலவு செய்யாமல் சுலபமாக கூகிள் PLAY STORE ல்  டவுன்லோட் செய்யலாம் . இந்தியாவின் சிறந்த விவசாய ஆஃப்களை...

வேளாண்மையில் உள்ள திட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோமா

Let us know about the Schemes in agriculture இந்தியா பெருமளவு அதன் பொருளாதாரத்திற்கு விவசாயத்தையே நம்பி இருக்கிறது.  கடந்த ஆண்டு உணவுதானியன்கள் உற்பத்தி மட்டும் 275 மில்லியனும் தோட்டக்கலை உற்பத்தி 300 மில்லியனையும் தாண்டியது . கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 99 வாட்டர் ப்ராஜெக்ட் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. பருப்பு வகைகள் மற்றும் என்னை வித்துக்களின் உற்பத்தி 38 சதவீதம் அதிகரித்துள்ளது . பால் பதப்படுத்தும் உள்கட்டமைப்புகாக 11000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது . இயற்கை மற்றும் அங்கக விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது . கடந்த பத்தாண்டுகளில் விவசாயம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 11.7 சதவீதத்திலிருந்து 13.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது . சோலார் பம்ப் திட்டம் PMKUSAM இருப்பது லச்சம் விவசாயிகளை சென்றடைந்திருகிறது . விவசாயிகளுக்கென கிசான் ரயில் திட்டம் , 2025 க்குள் பால் உற்பத்தியை இரண்டுமடங்காகுவது , பயிர் சேதத்தை தடுக்கும் திட்டம் என பல திட்டங்கள் இந்தியாவில் உள்ளன அவற்றை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்  PM KISAN MAAN DHAN YOJANA  விவசாயிகளுக்கு பென்ஷன் தருவதற்காக தொடங்கப்பட்ட திட...

pasumai vikatan 10-01-21 PDF

  பசுமை விகடன் 10-01-21 PDF Click Here Link  You have to wait 15 seconds. Download Timer JavaScript needs to be enabled in order to be able to download.

கொய்யா இயற்கை விவசாயம் - கொய்யா கன்று நடும் வழிமுறை

கொய்யா கன்று நடும்  வழிமுறை - Guava seedling planting method கொய்யா செடியின் ஆரம்பகால வேர்கள்   கொய்யா கன்று நடும்பொழுது கண்டிப்பாக 2*2*2 அடி குறைந்த பச்சமாக அதிகபச்சமாக 3*3*3 அடி எடுக்கலாம் சரளை மண்ணாக இருந்தால் அதிகமாக எடுப்பது நல்லது குழி ஆழமாக எடுப்பதும் நல்லது அப்படி எடுப்பதால் செடியின் ஆரம்பகால வேர்கள் நகர்ந்து போவதற்க்கு வசதியாக இருக்கும். குழி தோன்றிவிட்டு இரண்டு நாட்கள் வைத்திருந்து அந்த மண்ணை திருப்பி இழுத்து விடவேண்டும் ஒரு முக்கால் குழி மூட வேண்டும்  சூடோமோனஸ் 10 கிராம் இப்பொழுது கொய்யா நாற்றை நடுவில் வைத்துவிட்டு அந்த குழி 3*3*3 அடி இருக்கும் காய்ந்த நாடு மாட்டு சாணம் அதுகூட சூடோமோனஸ் 10 கிராம் அல்லது அசோஸ்பைரில்லும் 50 கிராம் பாஸ்போபாக்ட்ரியா 50 கிராம் 10 கிராம் சூடோமோனஸ் இத கலந்து குழியோட வெளி விளிம்புல சுத்திவர போட்டு இப்போ மண்ணை இழுத்துவிட்டு மண்ணை இறுக்கமாக அழுத்திவிடவேண்டும்  மிச்ச மண்ணை வைத்து  ஆறடி விட்டமுள்ள ஒரு வட்டப்பாத்தி போடலாம் . முடித்தவுடன் உயிர் தண்ணிர் கொடுக்க வேண்டும் மற்றும் மூணாவது நாளும் கொடுக்க வேண்டும் 

வேம் என்றால் என்ன - Vesicular - Arbuscular Mycorrhiza VAM

Vesicular - Arbuscular Mycorrhiza வேம் என்ன வேலை செய்யும் - VAM what works வேம் என்பது ஒரு பூஞ்சை ஆகும் இது பூமியில் உரக்க நிலையில் உள்ள மணிச்சத்தை உடைத்து வேர்களுக்கு கொடுப்பதால் வேர்கள் அதிகமாக பிரிந்து அதிகமாக வளர்ந்து பயிர்கள் பூமியிலிருந்து அதிக சத்துகளை எடுத்துக்கொள்ள உதவுகிறது. இதை கொடுத்தால் எந்த பயிரெல்லாம் பூமிக்குள் விளைகிறதோ உதாரணமாக கேரட் , நிலக்கடலை , உருளைக்கிழங்கு இந்த மாதிரி பூமிக்குள் விளைய கூடிய அனைத்துவித கிழங்கு வகைகள் மற்றும் தாவர வகைகளுக்கு உதவுகிறது . மணிச்சத்து மட்டும்மல்ல நுண்ணூட்ட சத்துக்களான துத்தநாக சத்து , தாமிர சத்து மற்றும் கால்சியம் சத்து இதையெல்லாம் பூமியில் இருந்து எடுத்து வேர்களுக்கு சுலபமான வழியில் கொடுக்கிறது  இந்த வேம் வேம்மை எங்கே  பார்க்கலாம் இந்த வேம்மை எங்கே அதிகமாக பார்க்கலாம் என்றால் சோளம் அல்லது வெள்ளை சோளம் போட்ட வயல்களில் அந்த பயிர்கள் முடிந்த பின்பு அடுத்த பயிர்களில் விளைச்சல் நன்றாக இருக்கும் அதற்கு காரணம் சோளதின் வேர்களில் உள்ள இயற்கையில் உருவாக கூடிய இந்த பூஞ்சைகள் பூமியில் தங்கி அடுத்து பயிருக்கு வேண்டிய ...

நேரடி களப் பயிற்சி களைக்கொல்லி இல்லா வேளாண் நுட்பங்கள்

Agricultural techniques without herbicides ஈஷா விவசாய இயக்கம் வழங்கும். *களை செலவு இல்லா விவசாயம் சாத்தியமே!* நேரடி களப் பயிற்சி. களைக்கொல்லி இல்லா வேளாண் நுட்பங்கள். இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள். நடவு முதல் அறுவடை வரை களை செலவு இல்லா வேளாண் நுட்பங்கள். களை மேலாண்மையின் மூலம் மண்ணை வளப்படுத்தும் சாத்தியம். நீர் தேவையை குறைக்கும் களை மேலாண்மை. மஞ்சள், வாழை, கரும்பு பயிர்களில் இந்த நுட்பங்களை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பண்ணையில் நேரடி களப் பயிற்சி. நாள்: 03-01-21 ஞாயிறு நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை. இடம்: வேளாண் சோலை, ஈஷா இயற்கை விவசாய பண்ணை, மேவானி கிராமம்,  கோபிசெட்டிபாளையம், ஈரோடு மாவட்டம். முன்பதிவு அவசியம். தொடர்புக்கு: 83000 93777. உணவு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக ரூபாய் 400 விதம் பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம். நஞ்சில்லா உணவிற்கும்.. நோயில்லா வாழ்விற்கும்..

இணையவழி நேரலை நிகழ்ச்சி - பலே பல பயிர் சாகுபடி

பலே பல பயிர் சாகுபடி முருகன், முன்னோடி விவசாயி, தஞ்சாவூர். தஞ்சாவூர் உச்சிமாஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். 3 ஏக்கர் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் இவர், வாழை, கரும்பு, காய்கறிகள் எனப் பல பயிர் சாகுபடி செய்து வருகிறார். தான் விளைவிக்கும் பொருள்களை மதிப்புக்கூட்டி இவரே நேரடியாக விற்பனை செய்து வருகிறார். அதன் மூலம் மாதம் 60,000 ரூபாய் லாபம் ஈட்டி வருகிறார். அவரது அனுபவங்களை, வாசகர்களோடு பகிர்ந்துக்கொள்ள இருக்கிறார். அவரது பண்ணை மற்றும் செயல்பாடுகளை வாசகர்கள் காணும் வகையில் நேரலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது பசுமை விகடன். LINK You have to wait 15 seconds. Download Timer JavaScript needs to be enabled in order to be able to download. நேரடி விற்பனையில் மாதம் 60,000 லாபம்...'பலே' பயிர் சாகுபடி' என்ற கட்டுரை இந்த இதழில் அட்டைப்பட கட்டுரையாக இடம்பெறுள்ளது. அந்தத் தோட்டத்தை வாசகர்கள் நேரலையில் பார்வையிடலாம். 10.01.2021 அன்று மாலை 03 மணியிலிருந்து 05 மணிவரை தோட்டத்திலிருந்து நேரலை நிகழ்ச்சி நடைபெறும். அதில் கலந்துகொண்டு உங்கள் சந்தேகங்களைச் சம்பந்த...