Skip to main content

Posts

காளான் வளர்ப்பில் பூச்சி கட்டுப்பாடு

காளான் வளர்ப்பு சைவ பிரியர்கள் மட்டும் விரும்பி உண்னும் உணவல்ல காளான் சில பூச்சிகளும் நாம் குடில்களில் வளர்க்கும் காளான்களை சாப்பிட கூடியது . பொதுவா காளான் என்பது ஒரு பூசண வகையை சார்ந்த நுண் உயிரி இதில் பல்வேறு சுற்றுப்புற சூழல்களால் பூச்சி நோய்கள் தோன்றி காளான்களை அழிக்கும் எனவே சுற்றுப்புறங்களை நாம் சுத்தமாக வைத்திருந்தாலே நாம் இவற்றை கட்டுப்படுத்திவிடலாம் நாம் இந்த கட்டுரையில் காளான்களை தாக்கும் பூச்சிகளை பற்றி பார்ப்போம்  காளான் ஈ  போரிட் மற்றும் சியாரிட்  என இரு வகையான ஈக்கள் மற்றும் அதன் புழுக்கள் காளான்களை  சேதப்படுத்தும். இதன் தாக்குதலோட அறிகுறி என்றுபார்த்தால் இதன் புழுக்கள் காலன் இலைகளை தின்று திட்டு திட்டாக காணப்படும் மேலும் துர்நாற்றம் அடிக்கும் புழுக்கள் வெண்மை நிறமாக காணப்படும் . சிலசமயங்களில் இந்த ஈக்கள் காளாண்பூசனங்களை எல்லா படுக்கைகளிலும் செல்லும்போது ட்ரைக்கோடெர்மா, பாக்டீரியா, போன்ற நுண்ணுயிரிகளை பரவச்செய்து காளான் விளைச்சளை குன்றச்செய்கிறது . குடிலுக்கு வெளிய உள்ள குப்பைகளில் இனப்பெருக்கம் செய்து நாம் படுகைகளில் இடும் துளைகள் வழிய...

மாடித்தோட்டமும் டீ தூளும்

மாடித்தோட்டத்தில் டீ தூளின் பயன்பாடு நம் வீட்டில் யாராவது ஒருத்தர் கட்டாயம் டீ குடிப்பவரா இருக்கலாம் அல்லது ஒரு வே ளையாவது டி குடிக்கலாம் . டீ தயாரித்து விட்டு பெரும்பாலும் அந்த டீத்தூளை நாம் வெளியே தூக்கி விட்டெறிந்து விடுவோம் . ஆனால் அதை தூக்கி எரியாமல் உங்கள் மாடித்தோட்டத்தில் பயன் படுத்தினால் என்ன நன்மைகள் என்று இந்த கட்டுரையில் பார்ப்போம் .  டீ பேக் முதலில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் டீ தூளை கொட்டும்போது மக்கிவிடும் அதே டீத்தூளை பேக் உடன் போடும்போது அது மக்குமா ? தாராளமாக 3 முதல் 4 மாதத்திற்குள் மக்கிவிடும் . பெரும்பாலும் இந்த பேக் Manila hemp எனப்படும் வாழை நாரிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது . இருந்தாலும் உங்கள் செடிக்கு போடுவதற்க்கு முன்பு டீ பேக் எதில் தயாரிக்கபட்டுள்ளது என்பதை பார்த்துவிட்டு பேக் உடன்பயன்படுத்தலாம்.   டீ இலைகளில் tannic acid மற்றும் இயற்கை சத்துக்கள் உள்ளன டீ தூளை தொட்டியில் போடும்பொழுது அது மக்கி செடிகளுக்கு தேவையான சத்துக்களை கொடுத்து ஆரோக்கியமாக வளர உதவுகிறது . வீட்டில் பயன்படுத்தும் காய்கறிக்கழிவுகளையோ மற்றும் டீ தூள் உரமாக பயன்பட...

மாடி தோட்டத்தில் ரோஜா செடி வளர்க்கும் போது கவனிக்க வேண்டியவை

மாடி தோட்டத்தில் ரோஜா செடி மாடி தோட்டத்தில் ரோஜா செடி வளர்க்கும் போது ஒரு சில சின்னச் சின்ன விஷயங்களை நீங்க கவனம் எடுத்து  செய்தால் செடியும் நல்லா வளரும் பூக்களும் வந்து நிறைய பூக்கும் பொதுவா மாடித்தோட்டத்தில் தொட்டியில் செடி வச்சிருக்கீங்க அப்படின்னா தண்ணீர்  அடிக்கடி கொடுக்கக்கூடாது ஒரு மூணு நாளைக்கு ஒரு தடவையோ அல்லது நாலு நாளுக்கு ஒரு தடவையோ டம்ளர்ல  தண்ணீர்   கொடுக்கணும் உங்களுக்கு ஒருவேளை தினசரி தண்ணீர்  கொடுக்கணும்  நினைச்சீங்கன்னா காலை வேளையில்  டம்ளரில் அரை டம்ளர் தண்ணீர் வந்து உங்களுடைய ரோஜா செடிக்கு  கொடுக்கலாம் . இதை மாலைவேளையில் செய்யக்கூடாது ஏன் எனில் காலைவேளையில் நீர் கொடுக்கும்போது செடி நீர் எடுத்து போக மீதம் ஆவியாக போய்விடும் . டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சை தொற்று மற்றும் செடிகளில் இருந்து இலைகள் வந்து படுகிறது போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கு சூடோமோனஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி. இதில் சூடோமோனஸ் ஒரு தொட்டிக்கு 20 கிராம் என்ற அளவில் 15 நாளைக்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ  தண்ணீரில் கலந்து வேர் பகுதிகள...

சுவையான தக்காளி செடி வளர்ப்பு

tomato cultivation methods தக்காளி , வெங்காயத்திற்கு அப்புறம் நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் காய்கறி . நம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் சுவை நன்றாக இருக்கவேண்டுமென்றால் கெமிக்கல் விவசாயத்தை தவிர்த்து இயற்கை விவசாயத்தை செய்யலாம் . நமக்கு தேவையான தக்காளியை நாமே நம் வீட்டின் பின்புறத்திலோ அல்லது மாடியில வளர்க்கலாம் . நாம் இந்த கட்டுரையில் சுவையான தக்காளி செடியை எப்படி வளர்க்கலாம் என்று பார்க்கலாம் . நல்ல தக்காளி கன்று மற்றும் ரகத்தை  தேர்ந்தெடுங்கள்  மிகவும் ஒல்லியான கன்றை தேர்ந்தெடுக்க வேண்டாம் , உயரமான தக்காளி கன்றை தவிர்த்து கொஞ்சம் சின்ன தக்காளி நாற்றுகளை தேர்வுசெய்யலாம் . அதிக வேர்கள் உள்ள செடியையும் தவிர்த்துவிடுங்கள்  . அல்லது விதைகள் வாங்கி நேரடியாக கூட விதைக்கலாம் . தக்காளியை பொறுத்தவரை நூறுக்கு மேற்பட்ட ரகங்கள் உள்ளன உங்கள் தேவைக்கேற்ப அதை தேர்ந்தெடுக்கலாம் வெளிச்சம்  நீங்கள் வீட்டுத்தோட்டத்தில் தக்காளி செடியை வளர்க்க குறைந்தது 6 மணி நேரம் சூரிய வெளிச்சம் உள்ள பகுதியை தேர்ந்தெடுங்கள் . இதனால் அதிக தக்காளி பழங்கள் வருவதோடு நல்ல சுவையாகவ...

காய்கறி தோட்டத்தில் எறும்பு கட்டுப்பாடு

ants control methods vegetable garden  விவசாயத்தை பொறுத்தவரை எறும்புகள் நல்லவனா இல்லை கெட்டவனா என்று கேள்வி கேட்டால் பதில் சில நேரங்களில் நல்லவன் சில நேரங்களில் கெட்டவன் என்றுதான் பதில் சொல்ல முடியும் . எறும்புகள் நல்லவன் என்பதற்கு உதாரணம் சொல்லணுமுனா , உங்களுக்கு ஜாதவ் பயேங் பற்றி தெரியுமா , அவர்தான் பிரம்மபுத்திரா நதி வறண்ட தீவுகளில் தனி ஒரு ஆளாக பெரிய காட்டை உருவாக்கியவர் . அந்த வரண்ட இறுகிய நில மண்ணை பண்படுத்த அவர் பயன்படுத்தியது சிவப்பு எறும்புகளைத்தான் , இதிலிருந்து புரிந்திருக்கும் ஒரு மண் வளமாக்க எறும்பு எவ்வளவு முக்கியம் என்று . சில சமயங்களில் எறும்புகள் சிறந்த பால்லினேட்டராகவும் செயல் படுகிறது . அப்ப எறும்புகளால் என்ன பாதிப்பு ? இப்ப ஒரு தேனியை எடுத்துக்கொண்டால் பறந்து சென்று மகரந்தத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடும் . அதுவே எறும்பு ஊர்ந்து சென்று எடுக்கும் அதன் கால்களில் ஓட்டும் தேன் செடிகளில் பரவி பூஞ்சை நோயை உருவாக்கும் . மண் பகுதியில் இருக்கும் போது செடிகளின் வேர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் , சில சமயம் பழங்களுக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தும். நாம் இந்த கட்டுரைய...

நம் வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய இயற்கை பூச்சி விரட்டிகள்.

natural pesticides ஒரு பூச்சி கொல்லி பயன்படுத்துவதால் தீமை செய்யும் பூச்சிகளை அழித்துவிட முடியுமென்றால் முற்றிலுமாக முடியாது , அதிலிருந்து தப்பும் பூச்சிகள் பூச்சிகளை அழிக்க நாம் மறுபடியும் தெளிக்க வேண்டிவரும் , இப்படியே செய்தால் பூச்சிகள் எதிர்ப்பு சக்தி உருவாக்கிக்கொண்டு அழிக்கமுடியதாகிவிடும் . இப்படி பூச்சிக்கொல்லிகளை அடிக்கடி தெளிப்பதால் , மண் மலடாகிவிடும் ,நன்மை செய்யும் உயிரினங்கள் இருக்காது, சுற்றுசூழல் பாதிக்கப்படும் , மேலும் அதில் விளைந்த காய்கறிகளை சாப்பிடும் நமக்கும் கேடு வரும் . இது வீட்டு  மற்றும் மாடி தோட்டத்திற்கும் பொருந்தும் . இதையெல்லாம் தவிப்பதற்கு நாம் இயற்கை விவசாயத்திற்கு மாறலாம் , இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம் . நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுலபமாக எப்படி பூச்சி விரட்டி தயாரிக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம் , வேப்ப இலை  இயற்கை பூச்சி விரட்டி என்றவுடன் முதலில் நமக்கு தோன்றுவது வேப்பமரம்தான் , இது மருத்துவரீதியாகவும் , பூச்சி மற்றும் புழுக்களை விரட்டவும் பயன்படுகிறது . இது விலங்குகள் , பறவைகள் , செடிகளுக்கு எந்த ஒரு ...

உலகின் மிக விலையுயர்ந்த 6 மலர்கள்

expensive flowers in the world இயற்கை  கொடுத்த பெரிய பரிசு தாவரங்கள் , அந்த தாவரங்கள் நமக்கு கொடுத்த பரிசு பூக்கள் , இந்த பூக்கள் அழகான வடிவமைப்பை கொண்டது , தாவரங்களை பொறுத்தவரை அதுதான் மறு உற்பத்தி செய்வதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது . ஆதி காலத்திலிருந்தே பூக்களின் அழகு, நிறம் , வாசணை , தோற்றத்திற்காக பயன்படுத்தப்படுகிறது . பூக்கள் எப்பொழுதுமே அன்பின் அடையாளம் , கடவுள் சார்ந்த நம்பிக்கை ஆக பார்க்கப்படுகிறது . இன்றய நாட்களில் காய்ந்த பூக்கள் கூட வருமானம் கொடுக்கிறது . பூக்கள் எதர்க்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது  பொக்கே செய்வதற்காக நாம் பூக்களை பயன்படுத்துகிறோம்  ( expensive flowers bouquet) நாம் வீட்டில் பூக்கள் நிறைந்த தோட்டத்தை பார்க்கும்போது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் , நம் வீட்டிற்கு பறவைகள் , பட்டாம்பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் . காய்ந்த மலர்களை வைத்து நம் வீட்டில் நீண்டநாள் வரும்படியான அலங்காரம் செய்யலாம் . வண்ண சாயங்கள் தயாரிப்பதற்கு பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன   பண்டைய காலத்திலிருந்தே பூக்கள் இருந்து மருந்துகள் தயாரிக்க படுகின்றன . சில ...

காய்கறி பயிர்களில் மூடாக்கு

mulching helps in vegetables crops  மூடாக்கு ஏன் அவசியம் - impotance of mulching  நம்மிடம் இருக்கும் பொருட்களை கொண்டு உதாரணமாக வைக்கோல் , இலை தலைகள் கொண்டு மண்ணை மூடி வைப்பதை மூடாக்கு என்போம் , தோட்டக்கலை பயிரிகளில் மரங்களை சுற்றி உயிர் மூடாகும் போடப்படுகிறது . நம் நாடு நான்கு விதமான பருவ நிலைகளை கொண்டது மழை காலங்களில் அதிகமான களைகள் வளரும் அதுவே வெயில் காலங்களில் வரட்சி ஏற்பட்டு அதிக படியான நீர் ஆவியாகும் , நீர் மட்டும் ஆவியாகாது அதனுடன் சேர்ந்து நாம் கொடுத்துள்ள உரங்களும் ஆவியாகி சென்றுவிடும் மண் புழு பூமிக்கு அடியில் சென்று விடும் , சரியான நுண்ணுயிர் பெருக்கம் இருக்காது . இதை எல்லாம் தவிர்க்கவே மூடாக்கு செய்யப்படுகிறது. நாம் இந்த கட்டுரையில் எந்த பொருட்களை பயன்படுத்தி காய்கறி பயிர்களில் முடக்கு போடலாம் என்று பார்க்கலாம்  வைக்கோல் மூடாக்கு - straw mulching  இந்த மூடாக்கு பொதுவா எல்லாரும் பயன்படுத்துவது . இது அதிக சூரிய வெளிச்சம் போகவிடாது . மண் நன்றாக வளப்படுத்தும் , நெல் அல்லது கோதுமையில் இருந்து பெறப்படும் வைக்கோல்களை பயன்படுத்தலாம் . ஆனால் இந்த வைக்க...