Skip to main content

Posts

மரமும் மரம் சார்ந்த பயனும்

மரங்கள் மனிதன்  தோன்றுவதற்கு முன்னால் இருந்தது , தற்பொழுது  மனிதனோடு இருக்கிறது , மரம் மனிதனை கடந்தும் இருக்கும் . இன்று எல்லாம் நவீனமயம் ஆக்கப்பட்டாலும் ஒருகாலத்தில் மரங்கள் நமக்கு எல்லாம்முமாக இருந்தன .நாம் சமையலுக்கான எரிபொருளாக , வீடு கட்டுவதற்கான சட்டங்களாக , ஜன்னல்களாக , உணவுக்காக , கால்நடை தீவனங்களாக தேவைப்பட்டன . அவ்வளவு ஏன் , நாம்  பிறந்து தொட்டிலில் போடுவது முதல் நாம் இறந்து எரிக்கும் வரை மரங்கள் தேவைப்பட்டன. ஆனால் இப்பொழுது அப்படியல்ல பல்வேறு வகையான தொழிற்சாலைகளுக்காக  மரங்களை வேளாண் காடுகள் மூலமாக உற்பத்தி செய்கிறோம் .  விவசயிகளுக்கு பொருளாதார ரிதியாக பயனளிக்க கூடிய மரங்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு 30 லிருந்து 40  சதவீதம்  மரங்கள் இருக்கும் . காகிதம் தயாரிப்பதற்கான மரங்கள் , எரிசக்திக்கான மரங்கள் , தடிமரங்கள் எண்ணெய் வித்து மரங்கள் ( வேப்பமரம், புங்கமரம் ) ஒட்டு பலகை . இவைகள்  அனைத்தும் வணிகம் சார்ந்த தொழில்களாகும் இதற்காக வளர்க்கப்படும் காடுகளை . தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் என்கிறோம் நாம் இந்த பகுதியில் தடி மரங்கள் மற்றும் அத...

மரம் வளர்த்தால் பணம் விளையும்

மரங்கள்... நிழல் தரும், பூ தரும், காய் தரும், கனி தரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்று சர்வதேச சந்தையில் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் தொழில் ஆதாரமாகவும் மரங்கள் திகழ்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒருகாலத்தில் இந்தியாவிலிருந்துதான் மரங்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. முதுமலைத் தேக்கு, டாப்ஸ்லிப் தேக்கு, தஞ்சாவூர் தேக்கு என நம் மண்ணில் செழிப்பாக விளைந்த பல வகையான தேக்கு மரங்கள் உலகின் பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. ஆனால், இன்றைய நிலைமை என்ன தெரியுமா? கடந்த பத்து ஆண்டுகளாக, மர வேலைப் பாடுகளுக்கான மரங்கள், வெளிநாடு களிலிருந்துதான் இந்தியாவுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்போது உலகச் சந்தைகளில் நம்முடைய பாரம்பர்ய தேக்கு மரங்களைக் காண்ப தென்பது மிகவும் அரிதாகி வருகிறது. கானா தேக்கு, நைஜீரியா தேக்கு, கொலம்பியன் தேக்குகள்தான் அதிகம் கிடைக்கின்றன. இதன் காரணமாக மர வேலைப்பாடுகளுக்கான மரங்களின் விலை சகட்டுமேனிக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. மரங்களின் தேவை ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில்தான் மர வேலைப்பாடு...

Why should the palm tree grow

பனை மரம்  பனை மரம் என்று சொன்னவுடன் நமக்கு ஞாபகம்  வருவது கோடை காலத்தில் சாப்பிடும் நுங்கு சிலருக்கு சிறுவயதில் பனை மரம் ஏறியது  ஞாபகம் வரலாம் , சிலருக்கு அதன் மருத்துவ குணம் ஞாபகம் வரலாம் , சிலருக்கு தெய்வமாய் வழிபட்டது ஞாபகம் வரலாம் 90 - குழந்தைகளுக்கு ஒற்றை பனையில்  முனி பேய் இருந்தது ஞாபகம் வரலாம்  சிலருக்கு பனை விசிறி ஞாபகம் வரலாம் , சிலருக்கு பனை வெள்ளம் , சிலருக்கு பனை ஓலையில் செய்யப்பட்ட கொட்டான் கூட ஞாபகம் வரலாம் , ஏன் , பல நூற்றாண்டுகளாக நாம் பனை ஓலைகளில்தான் செய்திகளை பரிமாறி உள்ளோம் . அந்த அளவிற்கு  பனை நம் வாழ்வில் ஒன்றாக பின்னி பிணைந்தது , இந்த பனை மரத்தை பற்றி நாம் இந்த கட்டுரையில் பாப்போம் . பனை மனிதனோடு பயணம்  தமிழ் நாட்டின் மாநில மரமாக பனை இருக்கிறது , பனை பற்றி சற்று கூர்ந்து கவனித்தால் அது மனிதனின் வாழ்விட பகுதியை சுற்றியே காணப்படும் . தென்னையை போன்று காட்டு பகுதி அல்லது தீவு பகுதிகளிலோ இருக்காது அதே சமயம் இது பயிரிட படுவதில்லை , இயற்கையாகவே வளரக்கூடியது . ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட பனை ,அங்கு வாழ்ந்த ஆதி மனிதர்களால் பன...

You can easily set up a vegetable pandal in the terrace

மாடித்தோட்டத்தில் சுலபமாக காய்கறி பந்தல் அமைக்கலாம் . மாடித்தோட்டத்தில் நமக்கு , நமக்கு தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் விளைவித்து கொள்ளலாம் . மாடித்தோட்டத்தை பொறுத்தவரை கத்தரி , வெண்டை ,தக்காளி போன்ற செடி வகை பயிர்களையோ அல்லது கேரட் ,உருளை ,முள்ளங்கி போன்ற மண்ணுக்குள் அடியில் விளையும் பயிர்களைத்தான் அதிகம் பயிர் செய்வோம் . ஆனால் அவரை ,புடலை , பீர்க்கன் போன்ற கொடிவகை பயிர்களை நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை . இதற்கு பெரும்பாலும் பணம் அதிகம் செலவாகும் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் நம்மால் குறைந்த செலவில் பந்தல் அமைத்து நம்மால் அதிகம் காய்கறிகள் எடுக்க முடியும் அதேசமயம் நமக்கு செடி வகை காய்கறிகளுக்கு பயிர் செய்ய இடம் கிடைக்கும் . நாம் இந்த கட்டுரையில் குறைந்த செலவில் எப்படி பந்தல் அமைக்கலாம் என்று பார்க்கலாம் . குறைந்த செலவில் பந்தல்  மாடி தோட்டமாக இருந்தாலும் சரி அல்லது வீட்டில் பின்புறமாக இருந்தாலும் சரி இரண்டு வகைகளில் நாம் காய்கறி பந்தல் அமைக்கலாம் . ஓன்று மூங்கில்  மற்றும் மண் பைகளை வைத்து தாற்காலிகமாக காய்கறி பந்தல் அமைக்கலாம் அல்லது இரும்பு பைப் (L...

மருதாணி சாகுபடி சில ஆலோசனைகள்

மருதாணி சாகுபடி  மருதாணி நம் கைகளுக்கு அழகான சிகப்பு வண்ணத்தை கொடுக்க கூடியவை . கல்யாண வீடாக இருந்தாலும் சரி தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களாக இருந்தாலும் சரி நம் கைகளில் தவறாமல் இடம்பெற்றுவிடும் இந்த மருதாணி .  முக்கியமாக மருத்துவத்திற்கு மருதாணி பயன்படுத்தப்படுகிறது . உடலில் ஏற்படும் கருந்தேமல்லை குறைக்கும் , உடல் வெப்பத்தை குறைக்கும் , நகங்களில் எந்தவித நோயும் வராமல் தடுக்கும். முடிகளுக்கு டை அடிக்க மற்றும் வாசனை திரவியம் தயாரிக்க மருதாணி பயன்படுத்தப்படுகிறது . நாம் இந்த கட்டுரையில் மருதாணி சாகுபடி பற்றி பார்ப்போம் . ரகங்கள்  மருதாணியை பொறுத்தவரை அணைத்து வகையான நிலங்களிலும் வளரக்கூடியது . இந்தியாவை பொறுத்தவரை குஜராத் , மத்தியப்பிரதேஷ் , பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் அதிகம் வியாபாரரீதியாக   வளர்க்கப்படுகின்றன . MH 1,MH 2 போன்ற மருதாணி ரகங்கள் அதிகம் வளர்க்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்படுகின்றன . ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை வியாபாரத்திற்காக வளர்ப்பது மிக குறைவு . அதேசமயம் தமிழ்நாட்டில் 100க்கு 20 முதல் 30 வீடுகளில் மருத...

காளான் வளர்ப்பில் பூச்சி கட்டுப்பாடு

காளான் வளர்ப்பு சைவ பிரியர்கள் மட்டும் விரும்பி உண்னும் உணவல்ல காளான் சில பூச்சிகளும் நாம் குடில்களில் வளர்க்கும் காளான்களை சாப்பிட கூடியது . பொதுவா காளான் என்பது ஒரு பூசண வகையை சார்ந்த நுண் உயிரி இதில் பல்வேறு சுற்றுப்புற சூழல்களால் பூச்சி நோய்கள் தோன்றி காளான்களை அழிக்கும் எனவே சுற்றுப்புறங்களை நாம் சுத்தமாக வைத்திருந்தாலே நாம் இவற்றை கட்டுப்படுத்திவிடலாம் நாம் இந்த கட்டுரையில் காளான்களை தாக்கும் பூச்சிகளை பற்றி பார்ப்போம்  காளான் ஈ  போரிட் மற்றும் சியாரிட்  என இரு வகையான ஈக்கள் மற்றும் அதன் புழுக்கள் காளான்களை  சேதப்படுத்தும். இதன் தாக்குதலோட அறிகுறி என்றுபார்த்தால் இதன் புழுக்கள் காலன் இலைகளை தின்று திட்டு திட்டாக காணப்படும் மேலும் துர்நாற்றம் அடிக்கும் புழுக்கள் வெண்மை நிறமாக காணப்படும் . சிலசமயங்களில் இந்த ஈக்கள் காளாண்பூசனங்களை எல்லா படுக்கைகளிலும் செல்லும்போது ட்ரைக்கோடெர்மா, பாக்டீரியா, போன்ற நுண்ணுயிரிகளை பரவச்செய்து காளான் விளைச்சளை குன்றச்செய்கிறது . குடிலுக்கு வெளிய உள்ள குப்பைகளில் இனப்பெருக்கம் செய்து நாம் படுகைகளில் இடும் துளைகள் வழிய...

மாடித்தோட்டமும் டீ தூளும்

மாடித்தோட்டத்தில் டீ தூளின் பயன்பாடு நம் வீட்டில் யாராவது ஒருத்தர் கட்டாயம் டீ குடிப்பவரா இருக்கலாம் அல்லது ஒரு வே ளையாவது டி குடிக்கலாம் . டீ தயாரித்து விட்டு பெரும்பாலும் அந்த டீத்தூளை நாம் வெளியே தூக்கி விட்டெறிந்து விடுவோம் . ஆனால் அதை தூக்கி எரியாமல் உங்கள் மாடித்தோட்டத்தில் பயன் படுத்தினால் என்ன நன்மைகள் என்று இந்த கட்டுரையில் பார்ப்போம் .  டீ பேக் முதலில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் டீ தூளை கொட்டும்போது மக்கிவிடும் அதே டீத்தூளை பேக் உடன் போடும்போது அது மக்குமா ? தாராளமாக 3 முதல் 4 மாதத்திற்குள் மக்கிவிடும் . பெரும்பாலும் இந்த பேக் Manila hemp எனப்படும் வாழை நாரிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது . இருந்தாலும் உங்கள் செடிக்கு போடுவதற்க்கு முன்பு டீ பேக் எதில் தயாரிக்கபட்டுள்ளது என்பதை பார்த்துவிட்டு பேக் உடன்பயன்படுத்தலாம்.   டீ இலைகளில் tannic acid மற்றும் இயற்கை சத்துக்கள் உள்ளன டீ தூளை தொட்டியில் போடும்பொழுது அது மக்கி செடிகளுக்கு தேவையான சத்துக்களை கொடுத்து ஆரோக்கியமாக வளர உதவுகிறது . வீட்டில் பயன்படுத்தும் காய்கறிக்கழிவுகளையோ மற்றும் டீ தூள் உரமாக பயன்பட...

மாடி தோட்டத்தில் ரோஜா செடி வளர்க்கும் போது கவனிக்க வேண்டியவை

மாடி தோட்டத்தில் ரோஜா செடி மாடி தோட்டத்தில் ரோஜா செடி வளர்க்கும் போது ஒரு சில சின்னச் சின்ன விஷயங்களை நீங்க கவனம் எடுத்து  செய்தால் செடியும் நல்லா வளரும் பூக்களும் வந்து நிறைய பூக்கும் பொதுவா மாடித்தோட்டத்தில் தொட்டியில் செடி வச்சிருக்கீங்க அப்படின்னா தண்ணீர்  அடிக்கடி கொடுக்கக்கூடாது ஒரு மூணு நாளைக்கு ஒரு தடவையோ அல்லது நாலு நாளுக்கு ஒரு தடவையோ டம்ளர்ல  தண்ணீர்   கொடுக்கணும் உங்களுக்கு ஒருவேளை தினசரி தண்ணீர்  கொடுக்கணும்  நினைச்சீங்கன்னா காலை வேளையில்  டம்ளரில் அரை டம்ளர் தண்ணீர் வந்து உங்களுடைய ரோஜா செடிக்கு  கொடுக்கலாம் . இதை மாலைவேளையில் செய்யக்கூடாது ஏன் எனில் காலைவேளையில் நீர் கொடுக்கும்போது செடி நீர் எடுத்து போக மீதம் ஆவியாக போய்விடும் . டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சை தொற்று மற்றும் செடிகளில் இருந்து இலைகள் வந்து படுகிறது போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கு சூடோமோனஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி. இதில் சூடோமோனஸ் ஒரு தொட்டிக்கு 20 கிராம் என்ற அளவில் 15 நாளைக்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ  தண்ணீரில் கலந்து வேர் பகுதிகள...

சுவையான தக்காளி செடி வளர்ப்பு

tomato cultivation methods தக்காளி , வெங்காயத்திற்கு அப்புறம் நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் காய்கறி . நம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் சுவை நன்றாக இருக்கவேண்டுமென்றால் கெமிக்கல் விவசாயத்தை தவிர்த்து இயற்கை விவசாயத்தை செய்யலாம் . நமக்கு தேவையான தக்காளியை நாமே நம் வீட்டின் பின்புறத்திலோ அல்லது மாடியில வளர்க்கலாம் . நாம் இந்த கட்டுரையில் சுவையான தக்காளி செடியை எப்படி வளர்க்கலாம் என்று பார்க்கலாம் . நல்ல தக்காளி கன்று மற்றும் ரகத்தை  தேர்ந்தெடுங்கள்  மிகவும் ஒல்லியான கன்றை தேர்ந்தெடுக்க வேண்டாம் , உயரமான தக்காளி கன்றை தவிர்த்து கொஞ்சம் சின்ன தக்காளி நாற்றுகளை தேர்வுசெய்யலாம் . அதிக வேர்கள் உள்ள செடியையும் தவிர்த்துவிடுங்கள்  . அல்லது விதைகள் வாங்கி நேரடியாக கூட விதைக்கலாம் . தக்காளியை பொறுத்தவரை நூறுக்கு மேற்பட்ட ரகங்கள் உள்ளன உங்கள் தேவைக்கேற்ப அதை தேர்ந்தெடுக்கலாம் வெளிச்சம்  நீங்கள் வீட்டுத்தோட்டத்தில் தக்காளி செடியை வளர்க்க குறைந்தது 6 மணி நேரம் சூரிய வெளிச்சம் உள்ள பகுதியை தேர்ந்தெடுங்கள் . இதனால் அதிக தக்காளி பழங்கள் வருவதோடு நல்ல சுவையாகவ...

காய்கறி தோட்டத்தில் எறும்பு கட்டுப்பாடு

ants control methods vegetable garden  விவசாயத்தை பொறுத்தவரை எறும்புகள் நல்லவனா இல்லை கெட்டவனா என்று கேள்வி கேட்டால் பதில் சில நேரங்களில் நல்லவன் சில நேரங்களில் கெட்டவன் என்றுதான் பதில் சொல்ல முடியும் . எறும்புகள் நல்லவன் என்பதற்கு உதாரணம் சொல்லணுமுனா , உங்களுக்கு ஜாதவ் பயேங் பற்றி தெரியுமா , அவர்தான் பிரம்மபுத்திரா நதி வறண்ட தீவுகளில் தனி ஒரு ஆளாக பெரிய காட்டை உருவாக்கியவர் . அந்த வரண்ட இறுகிய நில மண்ணை பண்படுத்த அவர் பயன்படுத்தியது சிவப்பு எறும்புகளைத்தான் , இதிலிருந்து புரிந்திருக்கும் ஒரு மண் வளமாக்க எறும்பு எவ்வளவு முக்கியம் என்று . சில சமயங்களில் எறும்புகள் சிறந்த பால்லினேட்டராகவும் செயல் படுகிறது . அப்ப எறும்புகளால் என்ன பாதிப்பு ? இப்ப ஒரு தேனியை எடுத்துக்கொண்டால் பறந்து சென்று மகரந்தத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடும் . அதுவே எறும்பு ஊர்ந்து சென்று எடுக்கும் அதன் கால்களில் ஓட்டும் தேன் செடிகளில் பரவி பூஞ்சை நோயை உருவாக்கும் . மண் பகுதியில் இருக்கும் போது செடிகளின் வேர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் , சில சமயம் பழங்களுக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தும். நாம் இந்த கட்டுரைய...

நம் வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய இயற்கை பூச்சி விரட்டிகள்.

natural pesticides ஒரு பூச்சி கொல்லி பயன்படுத்துவதால் தீமை செய்யும் பூச்சிகளை அழித்துவிட முடியுமென்றால் முற்றிலுமாக முடியாது , அதிலிருந்து தப்பும் பூச்சிகள் பூச்சிகளை அழிக்க நாம் மறுபடியும் தெளிக்க வேண்டிவரும் , இப்படியே செய்தால் பூச்சிகள் எதிர்ப்பு சக்தி உருவாக்கிக்கொண்டு அழிக்கமுடியதாகிவிடும் . இப்படி பூச்சிக்கொல்லிகளை அடிக்கடி தெளிப்பதால் , மண் மலடாகிவிடும் ,நன்மை செய்யும் உயிரினங்கள் இருக்காது, சுற்றுசூழல் பாதிக்கப்படும் , மேலும் அதில் விளைந்த காய்கறிகளை சாப்பிடும் நமக்கும் கேடு வரும் . இது வீட்டு  மற்றும் மாடி தோட்டத்திற்கும் பொருந்தும் . இதையெல்லாம் தவிப்பதற்கு நாம் இயற்கை விவசாயத்திற்கு மாறலாம் , இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம் . நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுலபமாக எப்படி பூச்சி விரட்டி தயாரிக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம் , வேப்ப இலை  இயற்கை பூச்சி விரட்டி என்றவுடன் முதலில் நமக்கு தோன்றுவது வேப்பமரம்தான் , இது மருத்துவரீதியாகவும் , பூச்சி மற்றும் புழுக்களை விரட்டவும் பயன்படுகிறது . இது விலங்குகள் , பறவைகள் , செடிகளுக்கு எந்த ஒரு ...