Ad Code

Ticker

6/recent/ticker-posts

இந்தியாவில் இயற்கை வேளாண்மையில் உள்ள திட்டங்கள்



2014 போது இயற்கை வேளாண்மை செய்யும் நிலத்தின் அளவு 11.84 லச்சம்  ஹெக்ட்ர் ஆறுவருடங்கள் கழித்து 2020 இல்  ஒன்றை மடங்காக உயர்ந்து  29.17 லச்சம்  ஹெக்ட்டராக உயர்ந்து இருக்கிறது . இதனாலேயே  மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் நிறைய சலுகைகள் செய்கின்றன. இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் , அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்பங்களை உருவாக்குதல் , இயற்கை விவசாய பொருட்களுக்கான சந்தை மேம்படுத்துதல் விலை முன்னறிவிப்பு  போன்றவற்றின் மூலம் 2024 குள் மேலும் 20 லச்சம்  ஹெக்ட்ர் மேலும் உருவாக்க முயற்சி செய்துள்ளது. இதற்காக இயற்கை வேளாண்மையில் முக்கிய திட்டங்களை கொடுத்துள்ளது அதை பற்றி பார்ப்போம்

பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா

இந்த திட்டம் ஒரு குழு அடிப்படையிலான இயற்கை விவசாயத்தை ஊக்குவிகிறது ( )  ஒரு இயற்கை விவசாய குழு உருவாக்குதல் , பயிற்சி அளித்தல் , சான்றிதழ் வாங்குவதற்க்கும் , சந்தைப்படுத்துதல் இந்த திட்டத்தின் கீழ் வருகிறது. ஒரு ஹெக்டேருக்கு / 3 வருடங்களுக்கு 50,000 வழங்கப்படுகிறது, அதில் 62 சதவீதம் (ரூ. 31,000) ஒரு விவசாயிக்கு கரிம உள்ளீடுகளுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில்  தற்போது தமிழகத்தில் 5,060 ஹெக்டேரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல, தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், மஞ்சள், வாழை, மிளகு, மா உள்ளிட்டவை 3,240 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு, இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி வழங்குவதுடன், முன்னோடி விவசாயிகளின் வயல்களை நேரடியாகப் பார்வையிட ஏற்பாடு செய்யப்படும். இதனால், சாகுபடி முறைகள், விற்பனை விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

மேலும், உள்ளூர் குழுவை `பிஜிஎஸ்`என்கிற இணையதளத்தில் பதிவு செய்தல், பதிவு அலுவலகத்தில் சங்கமாக பதிவு செய்தல், வங்கிக் கணக்கு தொடங்குதல், மண் மாதிரி எடுத்தல், பகுப்பாய்வு, மண்புழு தயாரித்தல், உள்ளூர் திறனாளிக்கு பயிற்சியளித்தல் உள்ளிட்டவற்றுடன், அங்கக பொருட்காட்சியும் நடத்தப்படும். இந்த திட்டத்தில் 3 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

முதல் ஆண்டில் நவதானியம், வேஸ்ட் டி-கம்போசர், வேப்பம் புண்ணாக்கு, திரவ உயிர் உரங்கள், திரவ உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள், தெளிப்பான், டிரம் வாங்கவும், நிலத்தை சீரமைக்கவும் ஏக்கருக்கு ரூ.4,858, இரண்டாமாண்டில் ரூ.4,000, 3-ம் ஆண்டில் ரூ.3,644 மானியம் வழங்கப்படுகிறது.

மேலும், விளை பொருட்களை மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றும் இயந்திரங்கள் வாங்கவும், பொருட்களை எடுத்துச் செல்ல வாகனம் வாங்கவும், பேக்கிங் செய்யவும், விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு இரண்டாம் ஆண்டில் ரூ.10 லட்சம் வரை நிதி வழங்கப்படுகிறது. 20 ஹெக்டேர் கொண்ட உள்ளூர் குழுவுக்கு 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.14.95 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

இயற்கை விவசாயிகளின் விவரங்களை `பிஜிஎஸ்` இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம், இடுபொருட்கள், மகசூல் உள்ளிட்டவற்றைப் பதிவு செய்து, `ஸ்கோப்` சான்றிதழை விவசாயிகளே பதிவிறக்கம் செய்து, விளை பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யலாம்.

வடகிழக்கு பிராந்தியத்திற்கான மிஷன் ஆர்கானிக் மதிப்பு சங்கிலி ( ) மேம்பாடு

இந்த திட்டம் வட கிழக்கு பிராந்தியங்களுக்குகானது , குறிப்பாக உழவர் உற்பதியாளர் நிறுவனங்களுக்கான ஏற்றுமதியை கவனிப்பது ஆகும். இயற்கை  உரம் மற்றும் உயிர் உரங்கள் உள்ளிட்ட இயற்கை  உள்ளீடுகளுக்கு விவசாயிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ .25,000 உதவி வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில் எஃப்.பி.ஓக்கள், திறன் மேம்பாடு, அறுவடைக்கு பிந்தைய உள்கட்டமைப்பு  போன்றவற்றுக்கு 2 கோடி வரை இந்த திட்டத்தின் கீழ்  வழங்கப்படுகிறது.

மண் சுகாதார மேலாண்மை திட்டத்தின் கீழ் மூலதன முதலீட்டு மானிய திட்டம் (சிஐஎஸ்எஸ்)

இந்தத் திட்டத்தின் கீழ்,  பழம் மற்றும் காய்கறி சந்தை கழிவுகளை கொண்டு கழிவு  உரங்கள் செய்ய இயந்திரங்கள் வாங்க  மாநில அரசு நிதி தருவதாகும் , அரசு நிறுவனங்கள், வேளாண் கழிவு உரம் உற்பத்தி பிரிவு அதிகபட்சமாக யூனிட்டுக்கு ரூ .190 லட்சம் வரை (ஆண்டுக்கு 3000 மொத்தம் டிபிஏ திறன்) . இதேபோல், மூலதன முதலீடு வழங்கப்படுவதால் தனிநபர்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் செலவு வரம்பில் 33 சதவீதம் வரை யூனிட்டுக்கு ரூ .63 லட்சம் வரை உதவி செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments