கதறி லாபாக்ஷ்சி நிலக்கடலை 1812 சாகுபடி

groundnut oil production variety Kadiri Lepakshi 1812




இந்த நிலக்கடலை ரகம் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் உள்ள விவசாய கல்லூரியில் கதறி என்கிற இடத்தில் உருவாக்கப்பட்ட ரகம் நிலக்கடலையில் பல ரகங்கள் இருந்தாலும் இந்த 1812 ரகம் தமிழ் நாட்டில் பெரும்பான்மையான விவசாயிகளால் பயிரிடப்படுகிறது . 


சிறப்பு தன்மை 


இந்த 1812 நிலக்கடலை ரகம் அணைத்து வகையான மண் வகைகளிலும்  மற்றும் கால நிலையிலும் மானாவாரியாக இருந்தாலும் சரி இரவையாக இருந்தாலும் சரி  பயிரிட ஏற்ற ரகம்.


இது சிறிய வகை ரோஸ் பருப்புகளை கொண்டது ஆங்கில எழுத்து b வடிவத்தில் இருக்கக்கூடியது . இரண்டு பருப்புகளை கொண்ட இந்த ராகத்தில் அதன் நுனி கூர்மையாக இருக்கும் .


அதிகமான என்னை அதாவது 51 % என்னை கொண்டது ஒரு ஏக்கரில் 500 கிலோ எண்ணெய் பிழிந்து எடுக்க முடியும் என்பது இதன் சிறப்பு .


இந்தியாவில் இருக்கற மற்ற கடலை ரகங்களை விட இந்த ரகத்தில் மானாவாரியில் இரவையிலும்   அதிகம் மகசூல் கிடைக்கும்  மானாவாரியில் அதிகபச்சமாக 1600 கிலோவும் இரவையில் அதிகபச்சமாக 2200 கிலோ வரையிலும் ஒரு ஏக்கருக்கு கிடைக்கிறது . இந்தளவு நீங்கள் மகசூல் எடுக்க வேண்டுமானால் பயிரை சரியான முறையில் இடு பொருட்கள் கொடுத்து பார்த்து கொள்ளவது அவசியம் . 


இந்த ரக நிலக்கடலை அதிகம் வேர்கள் விடக்கூடியது முக்கால் அடி வரை வளரக்கூடியது அதிக அளவு சின்ன சின்ன  இலைகள் கொண்ட அமைப்பாக இது இருக்கிறது . மற்ற ரக கடலைகளின் கலப்பு இருந்தால் கூட சுலபமாக கண்டுபுடிக்க முடியும் .


இயற்கை வழியில் சாகுபடி 


இந்த ரகம் 112 நாட்கள் வயது உடையது 
ஏக்கருக்கு  32 -34 கிலோ விதையளவு தேவைப்படும் 
நடவு இடைவெளி - வரிசைக்கு வரிசை 1 அடி x செடிக்கு செடி 1/2 அடி


அடி உரம் 


(வாய்ப்பு இருந்தால்) பலதானிய விதைப்பு செய்து மடக்கி உழுவது நல்ல பலன்கள் தரும். ஒரு வித்திலை, இரு வித்திலை,எண்ணெய் வித்து, நறுமணப் பயிர்கள், சணப்பை, தக்கைப்பூண்டு என 20-30 கிலோ வரை  கலந்து, விதைத்து,  40 ஆம் நாள் மடக்கி உழ வேண்டும். 


ஏக்கருக்கு 7 டிராக்டர் (7x800=5600kg) தொழு உரத்துடன் 
70 கிலோ சாம்பல், 
40 கிலோ எலும்பு உரம், 
10 கிலோ பாஸ்போ பாக்டீரியா ,
10கிலோ பொட்டாஷ் பாக்டீரியா  
1 கிலோ மெட்டாரைசியம்
கலந்து அடி உரமாக இட வேண்டும்.
ஊட்டமேற்றிய தொழு உரமாக கொடுப்பது நல்ல பலன்கள் கொடுக்கும். 


விதை நேர்த்தி செய்தல் 


 30கிலோ விதைக்கு 300 கிராம் /300 மில்லி சூடோமோனாஸ் இதனுடன் ரைசோபியம் முக்கால் கிலோ  போட்டு மெதுவாக பிரட்டலாம், இதனுடன் ஒரு டம்ளர் அரிசிக்கஞ்சி சேர்த்துக்கொண்டால் நன்றாக ஒட்டிக்கொள்ளும் 


நடவு -  2 - 4 செமீ ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். 


இடுபொருள் அட்டவணை


ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒரு முறை தரை வழி ஒரு இடுபொருள் கொடுக்க வேண்டும். 


 10 ஆம் நாள் - ஜீவாமிர்தம் -200 லி
 20 ஆம் நாள் மீன் அமிலம் - 2 லி
30 ஆம் நாள் மீன் அமிலம் 2 லி
40 ஆம் நாள் ஜீவாமிர்தம் 200 லி
50 ஆம் நாள்E.M கரைசல் -3 லி
60 ஆம் நாள் மீன் அமிலம் 2லி + ரைசோபியம் 10 கிலோ
70 ஆம் நாள் மீன் அமிலம் 2லி
80 ஆம் நாள் ஜீவாமிர்தம் 200 லி + ரைசோபியம் 10 கிலோ
90 ஆம் நாள் மீன் அமிலம் 2 லி
100 ஆம் நாள் EM கரைசல் 3 லி + ரைசொபியம் 10 
110 ஆம் நாள் மீன் அமிலம் 2 லி
(பஞ்ச காவியம் போன்ற வளர்ச்சி ஊக்கிகள் இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்)


20,40 ஆம் நாட்களில் ஏக்கருக்கு 4 -10 கிலோ vam மணலுடன் கலந்து தூவ வேண்டும் அல்லது பாசன நீரில் கலந்து விட வேண்டும்  அல்லது களி மண் அமைப்பாக இறுக்கத்துடன் இருந்தால் ஜிப்சம் 200 கிலோ வரை கொடுக்கலாம். 200 லி தண்ணீரில் 3 கிலோ சுண்ணாம்பு கலந்து தரைவழி 45, 60, 85 ஆம் நாளில் கொடுக்க வேண்டும். முடிந்தால் 60 ஆம் நாளில் மேலூரமாக தொழு உரத்துடன், சாம்பல் / பொட்டாஷ் பாக்டீரியா எலும்பு உரம் கலந்து கொடுக்கலாம்.20 , 40 ஆம் நாட்களில் களையெடுத்து மண் அணைக்கும் போது ரைசோபியம் 20 கிலோ 10 கிலோ vam கலந்து கொள்ள வேண்டும். 

இலைவழி தெளிப்பு


5,15,25,35,45,55,65,75,85,95 ஆம் நாட்களில் 
பஞ்ச காவியா 200 மிலி /10 லி நீர்
மீன் அமிலம் 100 மிலி / 10 லி நீர்
EM - 300 மிலி / 10 லி நீர்


தேமோர் கரைசல்


30, 37,44,51 ஆம் நாள் 500 மிலி /10 லி நீரில் கலந்து தெளிக்க வேண்டும். 


பூச்சி கட்டுப்பாடு 


மாதம் தோறும் சூடோ மோனாஷ் இலைவழி மற்றும் வேர்வழியாக கொடுக்க வேண்டும். இந்த ரகத்தை பொறுத்தவரை பூச்சிகள் தாக்கம் இருக்காது . இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக சாறு உறிஞ்சும் பூச்சிக்கு - வெர்டி சீலியம் லக்கானி புழுக்கள்  - பெவரியா பேசியானா போன்றவற்றை தயார்நிலையில் வைத்து கொள்ளவேண்டும் 
(75 மிலி /10 லி நீர்) 

மேலும் தெளிவான விவரங்களுக்கு  வீடியோ வை பாருங்கள்



G.M





Post a Comment

0 Comments