Skip to main content

Posts

Showing posts from April, 2021

Featured Post

மாடித்தோட்டத்துக்கு ஏற்ற மாம்பழ ரகங்கள் எவை, வளர்ப்பது எப்படி?

மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்துக்கு மக்களிடத்தில் எப்போதும் தாளாத ஈர்ப்பு உண்டு. இதோ, இந்த சீசனுக்கு வழக்கம்போல மாந்தோப்புகளில் மாம்பூக்கள், பிஞ்சுகளாக மாறி, காய்களாக உருவெடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், எல்லோருக்குமே தோட்டத்தில் மாம்பழங்களை விளைவித்துச் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால், சிலர் மாடித்தோட்டங்களில் மாம்பழங்களை விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் வளர்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில், மாடித்தோட்டங்களில் என்ன விதமான மாம்பழங்களை விளைவிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் . இந்த ரகங்கள் எல்லாம் சிறப்பு! ``இந்தியாவில் கிட்டத்தட்ட 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. இவற்றில் வணிக ரீதியாக 20 ரகங்கள் மட்டுமே அதிகமாக வளர்க்கப்படுகின்றன. வட இந்தியாவில் தஷேஹரி, லாங்கரா, பாம்பே கிரீன் வகைகள்; தென் இந்தியாவில் பங்கனப்பள்ளி, நீலம், காலாபாடி, ருமானி மற்றும் மல்கோவா வகைகள்; மேற்கு இந்தியாவில் அல்போன்சா, கேசர், மான்குராட், வன்ரான், லாங்க்ரா வகைகள்; கிழக்கு இந்தியாவில் சர்தாலு, சௌசா, மால்டா போன்ற வகைகள் வ

இயற்கை வேளாண்மையில் வெற்றி பெற இந்த தாரக மந்திரத்தை பயன்படுத்துங்கள் .

How to start profitable organic farming  திட்டமிடல்   ஒரு இயற்கை விவசாயத்தின் முதன்மை மற்றும் அடிப்படை இதை தொடர்ந்த வெற்றி அனைத்துமே இந்த திட்டமிடலில்தான் உள்ளது . இன்றய காலகட்டத்தில் இயற்கை விவசாயத்தின் மேல் ஆர்வம் கொண்டு ஒரு பகுதி நேரமாவது விவசாயம் செய்ய வேண்டும் என்று உள்ளனர் . இவர்கள்தான் திட்டமிடல் பற்றி முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் . இயற்கை விவசாயத்தை பொறுத்தவரை சின்ன சின்ன விசயங்களில் கவனம் செலுத்தினாலே நம்மால் பெரிய அளவு ஜெயிக்க முடியும் . கொசு ,பூச்சிகளை விரட்டும் மற்றும் உண்ணும் தாவரங்கள் பற்றி தெரியுமா நுண்ணுயிர்கள்    நீங்கள் எவ்வளவுதான் இயற்கை உரங்கள் போட்டாலும் இந்த நுண்ணுயிரிகள் இருந்தால்தான் பயிர்களுக்கு ஏற்ற வடிவத்தில் தங்களுக்கான சத்தை எடுத்துக்கொள்ள முடியும் . நுண்ணுயிரிகளை அதிகரிக்க தொழு உரங்களை போடலாம் , அசோஸ்பைரில்லம் ,பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றை இடலாம் . நிலவளம்  இயற்கை விவசாயத்தின் முதல் தேவை நிலவளம் . இந்த நிலவளத்தை மேம்படுத்த தொழு உரம் போடலாம் , கோடை உளவு செய்து நிலத்தை பண்படுத்தலாம் , பசுந்தாள் உரப்பயிர்கள் , எண்ணெய்வித்து பயிர்கள் , நறுமணம் மற்ற

கொசு ,பூச்சிகளை விரட்டும் மற்றும் உண்ணும் தாவரங்கள் பற்றி தெரியுமா

mosquito repellent plants indoor India இந்த உலகத்தை ஆள்வது மனிதன்தான் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையில் இந்த உலகத்தை ஆள்வது பூச்சி இனங்களே . இந்த பூமியில் நாம் இதுவரை கண்டுபிடித்திருப்பது வெறும் 20 % பூச்சிகளே மீதி 80 % அப்படியே கண்டுபிடிக்கப்படாமல் இன்னும் இருக்கிறது.  இவ்வளவு இருந்தாலும் நம் வீட்டிற்குள் புகுந்து நம்மை மிகவும் தொல்லை படுத்துவது சில பூச்சி இனங்களே அதில் முதல் இரண்டு என்று பார்த்தால் ஓன்று கொசு மற்றொன்று ஈ . அப்ப அப்ப  கரப்பான் பூச்சியும் வந்து நம்மை பயமுறுத்தும். நாம் மனிதனாக இருந்து நிறைய விலங்கினத்தை அழித்திருக்கிறோம் நம்முடன் வாழ்ந்த  நிறைய பறவையினங்களை கூட நாம் அழித்துவிட்டோம் ஆனால் இந்த கொசுவை மட்டும் நம்மால் அளிக்க முடியவில்லை என்பதிலிருந்தே  பூச்சி இனங்களின் ஆளுமைத்தன்மை நமக்கு புரியும் . இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில் ஒரு 20 அல்லது 30 வருடங்களுக்கு முன்னாடி கொசு அல்லது ஈக்கள்  நம்மை தொந்தரவு செய்ததா என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் வரும் ஏன் என்றால் ஓரு சிறந்த சுற்றுசூழல் கட்டுப்பாடு இருந்தது அத

தமிழ்நாடு வேளாண் கூட்டுறவு சங்கத்தில் எப்படி உறுப்பினராகலாம்

How to become a member of Tamil Nadu Agricultural Co-operative Society தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 4000 மேற்பட்ட  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளது. இந்தியாவில்… ஏன் உலக அளவில் கூட ஒரு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்றால் அந்த சங்கத்தின் செயல் எல்லையில் வசிப்பவராக இருக்க வேண்டும். இல்லையெனில்  அந்த கூட்டுறவு சங்கத்தின் அன்றாட செயல்கள் தொடர்பான செயல்களை நீங்கள்  அந்த செயல் எல்லையில் நடத்துபவராக இருக்க வேண்டும். உதாரணமாக மேலே உள்ள தலைப்பில் உள்ளவாறு நீங்கள் ஒரு தொடக்க வேளாண்மை சங்கத்தின் உறுப்பினராக வேண்டுமெனில் அந்த சங்கம் செயல்படும் ஒரு வருவாய் கிராமத்தில் உங்களுக்கு வேளாண் நிலம் இருக்க வேண்டும். அதுவே வேறு வேறு கிராமங்களில் உங்களுக்கு  நிலம் இருந்து   நீங்கள் அந்த சங்கத்திலும் உறுப்பினராக வேண்டும் என்றால் முதலில் சேர்ந்த சங்கத்தில் இருந்து தடையின்மை சான்று (No objection certificate) வாங்கி  சமர்ப்பிக்க வேண்டும். அதே சமயம்  ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே செயல்பாடு தொடர்பான சங்கத்தில் நீங்கள் உறுப்பினராக இருந்தால் ஏதேனும் ஒரு சங்கத்தில் மட்டுமே வாக்களிக்கும் தகுதி பெற முடியும

மாடித்தோட்டமும் மண் கலவை வகைகளும்

Terrace and soil mix types மாடி தோட்டத்தை பொறுத்தவரை ஒரு மண் கலவை தேர்ந்தெடுத்தல் என்பது உங்கள் மாடித்தோட்டத்தை எவ்வளவு காலம் சரியாக கொண்டு செல்விர்கள் என்பதை முடிவு செய்யக்கூடியது . எனவே மாடித்தோட்டத்தில் சரியான மண் கலவை என்பது  உங்கள் விதையை விரைவாக முளைக்க செய்யும் , நன்றாக வளர செய்யும் , பூக்க செய்யும் , காய்க்க செய்யும் . நாம் இந்த கட்டுரையில் மண் கலவையில் உள்ள நன்மைகளும் மற்றும் என்ன வகையான மண் கலவைகள் பயன்படுத்தலாம் என்பதை நாம் பார்ப்போம் .   1) சிறந்த மாடி தோட்ட மண் கலவையென்பது களைகள் இன்றி இருப்பது . ஆனால் மண் , மணல் பயன்படுத்தும் போது களைகள் அதிகம் வரலாம் இதற்கு நீங்கள் மண் கலவையை தொட்டி அல்லது பையில் போட்டு மூன்று நாள் தொடர்ந்து தண்ணீர் விடுங்கள் களை விதைகள் இருந்தாள் முளைத்துவிடும் பின்பு நீங்கள் விதைகளை தூவலாம் . 2) மண் கலவைகள் மட்டுமே பயன் படுத்தும் போது சில விதமான பிரச்சனைகள் ஏற்படலாம் .   A ) ஆரம்பத்தில் மண்கலவை நன்றாக இருந்தாலும் போக போக மண் இறுகி போய்விடும் செடிகளால் சரியாக சுவாசிக்க முடியாது . வெண்டை , கத்தரி , முள்ளங்கி போன்ற ஒருபருவ பயிர்களுக்கு பயன்படுத்தல

சதுப்புநில மரங்கள் பற்றிய 7 விஷயங்கள்

7 things about mangrove trees நாம் கிட்டத்தட்ட எல்லாவகையான மரங்களையும் ரசிப்போம் , இளைப்பாறுவோம் அவ்வளவு ஏன் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது விளையாட கூட செய்திருப்போம் . ஆனால் இந்த மரங்களை எல்லாம் தவிர்த்து நமக்கு தனித்துவமாக இருப்பவை இந்த சதுப்பு நில காடுகள் . இந்த சதுப்பு நில  காடுகளை புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் கடற்கரை ஓரங்களில் உப்பு தண்ணீரில் அடர்த்தியாக வளரக்கூடிய பெரிய மரங்களாகும் . இவை பெரும்பாலும் வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில்தான் இருக்கும் . தமிழ் நாட்டில் பிச்சாவர கடற்கரையில் காணலாம் . 1) சதுப்பு நில மரங்கள் மட்டுமே உப்பு தண்ணீரில் வாழும் தன்மையை பெற்றுள்ளன . சதுப்பு நில மரங்களுக்கு அனைத்திற்குமே இந்த உப்ப தண்ணீரிலும் தாங்கியும் வளரும் தன்மை கொண்டுள்ளது . 2) சதுப்பு நில காடுகள் புயல் சுனாமி போன்றவற்றை இயற்கை அரணாக இருந்து தடுப்பதோடு வேர்கள் அடி ஆழம் வரை பரவி மண் அரிப்பையும் பெருமளவு தடுக்கிறது . 3) 2016 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கிரீன்ஹவுஸ் வாயுவான கார்பன் டை ஆக்சைடை கிரகிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது . துரதிஷ்ட வசமாக சதுப்பு நில காடுகளை அழிப்பதால் 122 ட

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) மீன் வளர்ப்பு  - Click Here   2) தேனீ வளர்ப்பு  - Click Here  3) தேனீ வளர்ப்பு 1 -  Click Here   4)    தேனீ வளர்ப்பு 2 - Click Here  5) தேனீ வளர்ப்பு 3 - Click Here   6) இந்திய நாட்டு கோழி இனங்கள்  - Click Here  7) இலவங்கப்பட்டை சாகுபடிக்கேற்ற  தொழில்நுட்பங்கள்   - Click Here   8) கரும்பில் வறட்சியை தாங்கும் பாசன முறைகள் - Click Here 9) கறவை மாடுகளின் இனப்பெருக்க மேலாண்மை Click Here 10) கொத்தவரங்காய் சாகுபடி - Click Here  11) கோவக்காய் சாகுபடி   - Click Here  12) சமவெளிப் பகுதியில் மிளகு சாகுபடி - Click Here 13) சிறு தானியங்களின் மதிப்பு கூட்டு பொருட்கள் - Click Here 14)  சோயா மதிப்பு கூட்டு பொருட்கள் - Click Here 15)    டிராகன் பழ சாகுபடி - Click Here  16) நாட்டு கோழிகளுக்கான தீவனம் - Click Here 17)  நிலத்தடி நீரை கண்டுபிடிப்பது எப்படி - Click Here   18) நெல் சாகுபடியில் விதை முதல் விதை வரை இயந்திரமயமாக்குதல் - Click Here 19) பசுந்தாள் உரப்பயிர் சணப்பையின் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் சாகுபடி - click Here  20) பசுமைக்கூடார தொழ

நன்னீர் மீன் வளர்ப்பில் நீர் மற்றும் மண் மேலாண்மை

Water and soil management in freshwater aquaculture மீன் வளர்ப்பில் , மீன் இருப்பு செய்யப் பட்டுள்ள குளத்தின் நீர் மற்றும் மண்ணின் தன்மை முக்கிய பங்கு வகிக்கின்றன . நீர் மற்றும் மண் ஆகியவற்றில் ஏற்படும் இயற்வேதியல் மாற்றங்கள் பலவகை களில் மீன் வளர்ச்சியினைப் பாதிப்பதாக அமைந்து விடுகின்றன . மீன்களின் வளர்ச்சிக்கும் , பிழைப்புத் திறனுக்கும் , குளத்தின் நீர் மற்றும் மண்ணின் தரத்தை பராமரிப்பது மிகவும் அவசியமானதாகும் . எனவே , மீன் வளர்ப்புக் குளத்தில் நீர் மற்றும் மண்ணின் தரத்தை அறிவது மிக முக்கியமானதாகும் .  குளத்து நீரின் தரம்:  வெப்பநிலை : மீன்கள் குளிர் இரத்த பிராணிகளாகும் . வெப்ப இரத்த பிராணிகளைப் போல் அல்லாமல் இவைகள் சூழ்நிலைக்கேற்ப தன் உடல் வெப்ப நிலையை மாற்றிக் கொள்ள முடியும் . மீன்களுக்கு 28 செ . முதல் 30 செ . வரை உள்ள வெப்பநிலையில் இருப்பது ஏற்றதாகும் . வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களை மேற்கொள்ள கீழ்க்காணும் யுத்திகளைக் கையாளலாம் .  1.தண்ணீரின் நிறத்தின் தரத்தைப் பராமரித்தல் 2. தண்ணீரின் ஆழத்தைக் கூட்டுவதற்கு நீரின் கொள்ளளவை அதிகப்படுத்துதல். 3.காற்றுப் புகுத்திகளை பயன்ப

கறவை மாடுகளில் ஏற்படும் கருச் சிதைவு நோய் - ஒரு கண்ணோட்டம்

Miscarriage in dairy cows - an overview கன்று ஈனும் தேதிக்கு முன்பாகவே முழுமையாக வளர்ச்சியடையாத இறந்துப்போன அல்லது உயிரோடிருக்கும் கன்றினை வீசிவிடுதல் . முதல் மற்றும் இரண்டாவது மாதம் கர்ப்பகாலத்தில் உண்டாகும் கருச்சிதைவு பெரும்பாலும் கண்டறியப்படுவதில்லை . மாடுகள் வழக்கம் போல் வலும்புக்கான அறிகுறிகளை வெளிப்படுத்த தொடங்கிவிடும் . ஆதலால் 120 நாட்கள் முதல் 270 நாட்களுக்குள் ஏற்படும் கருச்சிதைவு அல்லது கன்று வீச்சு பொதுவாக அனைவராலும் எளிதில் கண்டறிப்படுகிறது . மாட்டுப் பண்ணைகளில் ஒன்று , முதல் இரண்டு சதவிகிதக் கருச்சிதைவு பெரும்பாலும் பெரிதாக எந்தவித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை . ஆனால் , அதுவே ஐந்து விகிதத்திற்கு மேல் உண்டாகுமேயானால் எச்சரிக்கைக்கான அறிகுறி கருதி தகுந்த பாதுகாப்பு மற்றும் தடுப்பு வழிமுறைகளை உடனடியாக தகுந்த கால்நடை மருத்துவம் மூலம் செயல்படுத்துவது மிக முக்கியமாகும் .  நோய்க் காரணிகள்:   கருச்சிதைவு காரணிகள் இருவகைப் படும் . ஒன்று தொற்று காரணிகள் , மற்ரொண்டு தொற்று அல்லது காரணிகள் . தொற்று காரணிகளால் ஏற்படும் கருச்சிதைவு இது என பத்து சதவிகிததிற்கு மேல் கருச்சிதைவு புயல்க

ஆடுகளின் பல்வேறு பருவங்களில் தீவனம் அளிக்கும் முறைகள்

Methods of feeding goats in different seasons ஆடு வளர்ப்பு தொழில் நிலமற்றவர்களில் தொடங்கி பெரிய பண்ணையாளர்கள் வரை மேற்கொள்ளக் கூடிய ஓர் எளிய தொழிலாகும் . ஆடு வளர்ப்பில் இலாபம் அதிகரிக்க தீவன மேலாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது . உற்பத்தி செலவில் 65 - 70 சதவீதம் தீவனத்திற்காக மட்டும் செலவிட நேரிடுகிறது . ஆகையால் , தீவனத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் . ஆடுகளின் வயது , உற்பத்தித் திறன் , அதன் பல்வேறு பருவங்களின் வளர்ச்சி வீதம் போன்றவைகளை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்துகளின் தேவைக்கேற்ப தீவனத்தில் மாற்றம் செய்து சரிவிகித தீவனம் அளிக்கும் பொழுது உற்பத்தி செலவு குறைந்து ஆடு வளர்பினால் இலாபம் அடையலாம் .  ஆடுகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்:   ஆடுகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு எரிசக்தி , புரதச்சத்து , நார்ச்சத்து , கொழுப்புச்சத்து , உயிர்ச்சத்து , தாது உப்புக்கள் மற்றும் தண்ணீர் மிக முக்கியமானவையாகும் . ஆடுகளின் வளர்ப்பு முறைக்கேற்ப அதன் வளர்ச்சி மற்றும் உற்பத்தி வேறுபடுகிறது . உதாரணமாக , மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு தேவையான அளவிற்கு புரதச் சத்துக்கள் , தாது உப்புக

களர் நிலத்தை எப்படி மாற்றலாம்

Sodic Soil change to Good soil  களர்மன் என்பது மண்ணிலேயே அதிக உப்பு தன்மை சேர்ந்திருக்கும் நிலம் . ஒரு கல்லு உப்பு வாயில போட்டா  எப்படி இருக்கும் அதுவே ஒரு கைப்பிடி போட்டா எப்படி இருக்கும் அதுபோல்தான் பயிர்களுக்கு இந்த களர்மன் இருக்கும்  ஒரு கைப்பிடி மண் எடுத்தால் அதில் ஒரு கைப்பிடி உப்பு இருக்குனு அர்த்தம் அதாவது இரண்டும் கலந்தால் எப்படி இருக்குமோ அப்படினு அர்த்தம் . மண்ணில் உள்ள உப்பை எடுக்க வேண்டும் முதலில் களர் வகை மண்ணில் உள்ள உப்பை கரைக்கனும் மற்றும்  கடத்தவேண்டும் . உப்பை கரைக்க வேண்டுமென்றால் அதை மழை பெய்யும் பொழுது மழை  நீர் கரைக்கும் , அதுவே கடத்த வேண்டுமென்றால் நீரை தேக்கி வைக்க வேண்டும் , அப்படி செய்யவில்லை எனில் மேல் உள்ள உப்பு போய் விடும் அடி மண்ணில் உப்பு அப்படியே இருக்கும் . இதை தடுக்க நிலத்தில் முறையான முழங்கால் உயரம் அல்லது இரண்டரை அடி கரைகள்  போட வேண்டும்  கரைகள் போட்ட பின்பு நிலத்தை நன்கு உழவேண்டும் ஒன்னேகால் அடி மண் வெளியே தெரியும்படி உழ வேண்டும். இப்படி செய்வதற்கு வேளாண்மை பொறியல் துறையில் இறகு வார்ப்பு கலப்பை இருக்கும் அதை கொண்டு வந்து உழ வேண்டும் ஒரு மணி

காய்ந்த பூக்களில் எப்படி வருமானம் பார்க்கலாம்

Dried flower business ideas நம் வாழ்க்கையில் உணர்வுகளுக்கோ அல்லது உணர்ச்சிகளுக்கோ பூக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ளது . நம்முடைய காதலை வெளிப்பதுதலாகட்டும் , நம்முடைய நன்றியை வெளிப்படுவதாகட்டும் , சந்தோசம், துக்கம் அனைத்தையும் வெளிப்படுத்துவதற்கு உதவுவது பூக்களே . நம்முடைய வாழ்க்கையில் பூக்கள் அனைத்திற்குமே தேவைப்படுகிறது , காலையில் கடவுளுக்கு பூ வைப்பதிலிருந்து அணைத்து மத திருவிழாக்களுக்கு , கல்யாணம் இப்படி பூக்கள் இந்தியாவை வருடத்திற்கு 800 டன் பூக்கள் பயன்படுத்தப்படுகிறது  அக்ரி பிசினஸ் பற்றிய மற்ற கட்டுரைகள் Click here ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 8 லச்சம் பூக்கள் வீணாக்கப்படுகிறது . இப்படி காய்ந்து போன பூக்களையோ அல்லது வீணாக கொட்டப்படும் பூக்களை வைத்து என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். Dry Flowers Arrangement சிலவகையான பூக்கள் காய்ந்தாலும் அழகாக இருக்கும் அதன் நிறமும் மாறாமல் இருக்கும். Helichrysum, Delphinium, Helipterum, Amaranthus, Nigella, Carathmus, Gypsophilla போன்ற பூக்களை பயன்படுத்தி தயாரிக்கலாம் . இதை வீட்டை அலங்கரிக்கவும் , முக்கியமான

வாழையில் இலை சாகுபடிக்கு என்ன இயற்கை உரங்கள் கொடுக்கலாம்

Organic fertilizer for leaf banana cultivation வாழை பொறுத்தவரை காய்கள் மற்றும் பழங்கள் மட்டும் வருமானத்தை கொடுப்பதில்லை சரியாக திட்ட மிட்டால் இலையும் நல்ல வருமானத்தை கொடுக்கும் . இலைக்காக  பயிரிட படும் ரகங்கள் என்று பார்த்தால் பூவன் சிறந்தது அடுத்ததாக கற்பூரவள்ளி மற்றும் மொந்தன் வாழை ரகங்களை இலைக்காக பயிர்செய்யலாம் . வாழை பற்றிய மற்ற கட்டுரைகள் Click Here  வாழை இலைக்காக பயிர் செய்யும் போது மூன்று விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். காற்று இலையையோ அல்லது மரத்தையோ சுலபமாக சாய்க்க கூடியது . முடிந்த அளவு அதிக கற்று அடிக்கும் பகுதிகளில் தவிர்ப்பது நல்லது . காற்று தடுப்பாக வரப்பு ஓரங்களில் உள்வரிசையில்  அகத்தி , கிளரிசிடியா போன்ற மரங்களையும் வெளி வரிசையில் சவுக்கு , யூக்கலிப்டஸ் மரங்களை நடலாம் . இடைவெளி  இலைகள் நன்றாக விரிவடைந்து வளர சூரிய ஒளி முக்கியம் எனவே வாழையை நெருக்கமாக நடாமல் தேவையான இடைவெளி விட்டு நடலாம்  இயற்கை உரங்கள்  இலைக்காகத்தான் நாம் வாழை பயிர் செய்கிறோம் என்றால் தழை சத்துதான் மிக முக்கியம் மற்றும் இலை நன்றாக பிடித்து வளர வேண்டுமென்றால் கால்சியம் சத்து வேண்டும் . மேலும் இலை கி

நெற்பயிரில் பாக்டீரியல் குலை நோய்

 paddy pest and diseases - Bacterial blight இந்த நோயோட தாக்கம் முதலில் எங்கிருந்து வரும் என்றால் நாம் நெல் விதையை விதைநேர்த்தி சரியாக  செய்யாமல் விதைத்தால் வரும் . அல்லது சரியாக பண்படாத அல்லது சரியாக முளைக்காத விதை நெல்லாக இருந்தால் அதிலிருந்து வரும் . இதை சரி செய்வதற்கு விதைப்பதற்கு முன்பு நெல் விதையை தரையில் பரப்பி சரியில்லாத விதைகள் பூஞ்சை பிடித்த விதைகள் போன்றவற்றை நீக்கி விடவேண்டும்  நெல் விதை நேர்த்தி ஒருகிலோ விதை நெல்லுக்கு பவுடராக இருந்தால் 10 கிராம் திரவமாக இருந்தால் 6 மில்லி சூடோமோனஸ் அல்லது விரிடி அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ மற்றும் 30 கிராம் அசோஸ் பயிரிலும் உடன் கலந்துசெய்யலாம்  நெல் பற்றிய மற்ற கட்டுரைகள் - Click Here   முதலில் விதை நெல்லை தண்ணீரில் கலந்து அழுக்கை நீக்கிவிடவேண்டும். அடுத்து சூடோமோனஸ் மற்றும் அசோஸ் பயிரிலும் கலந்து நன்றாக பிரட்டிவிடவேண்டும் . பிரட்டி விடுவதை  கடினமாக செய்க்கூடாது விதை முனை மழுங்கி விடும் ஒரு அகலமான கரண்டியில் செய்யலாம்  நிலம்  ஏற்கனவே பாக்டீரியல் குலை நோய்  வந்த நிலமாக இருந்தாலோ அல்லது நீங்கள் சரியாக விதை நேர்த்தி செய்யவில்லை என சந்த