Skip to main content

Posts

Showing posts with the label சோளப்பயிரில் செஞ்சிலந்தி கட்டுப்பாட்டு முறைகள்

சோளப்பயிரில் செஞ்சிலந்தி கட்டுப்பாட்டு முறைகள்

சோளப்பயிரினை தாக்கக் கூடிய பூச்சி மற்றும் சிலந்தி வகைகளில் செஞ்சிலந்தி முக்கியமான ஒன்றாகும். இது கோடைக்காலத்தில்  அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது இலைகளின் அடிப்பக்கத்தில் கூட்டம் கூட்டமாக இருந்து இலையின் சாற்றை உறிஞ்சி பயிருக்கு சேதம் விளைவிக்கிறது. இதனை மேலாண்மை செய்ய பின்வரும் முறைகளை பின்பற்ற வேண்டும். பயிர் விதைப்பிற்கு 2 அல்லது 3 வாரங்களுக்கு முன் வயலில் உள்ள புல் சார்ந்த களைக்களை அப்புறப்படுத்த வேண்டும். ஏன்னெனில் இதன் மூலம் பயிர் இல்லாத காலத்தில் தஞ்சம் கொண்டுள்ள சிலந்திகள் சோளப் பயிரை தாக்குவதற்கு வாய்ப்பாக அமைகிறது. மேலும், கடந்த பட்டத்தில் விடுப்பட்டு போன வேறு தானிய வகை பயிரினையும் அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். மேலும், பயிர் நன்கு வளரும் வண்ணம் தேவையான ஊட்டச்சத்துகளை மண் ஆய்வின் படி கொடுக்க வேண்டும். இல்லையெனில் ஒரு எக்டருக்கு பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட உரங்களாகிய தழை சத்து 195 கிலோ, மணி சத்து 280 கிலோ மற்றும் சாம்பால் சத்து 75 கிலோ (இவற்றில் 50 சதவிகிதம் தழை சத்து மற்றும் 100 சதவிகிதம் மணி மற்றும் சாம்பல் சத்தினை அடி உரமாக இடவேண்டும்) மீதமுள்ள 50 சதவிகித தழை சத்...