Skip to main content

Posts

Showing posts with the label கலப்பு பண்ணை முறை

பயிர்சாகுபடியுடன்_கலப்பு_பண்ணை_முறை

             விவசாயிகள் பயிர் சாகுபடியுடன் கூடிய, கால்நடைகள், கோழி வளர்ப்பு எனப்படும் கலப்பு பண்ணை முறையை பின்பற்றினால் சிறந்த வருமானம்  பெறலாம்' என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்ப காலத்தில் இருந்தே தமிழர்கள் விவசாயம் மட்டுமில்லாமல் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வளர்ப்பிலும் ஈடுபட்டிருந்தனர். இதனால் விவசாயத்துக்கு தேவையான இயற்கை உரங்கள் தயாரிப்பதற்கும், வீட்டுக்குத்தேவையான பால்பொருட்கள் கிடைப்பதற்கும் வழிவகை செய்தது. அதுமட்டுமில்லாமல் விவசாயம் பொய்த்தாலும், கால்நடை வளர்ப்பில் இருந்து கணிசமான வருமானம் கிடைத்து வரும். விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டாலும் சமாளித்துக்கொள்ளும் தைரியம் இருந்தது. ஆனால் என்று கால்நடை வளர்ப்பு குறைந்து வெறும் விவசாயத்தை மட்டுமே சாகுபடி செய்ய ஆரம்பித்தனரோ, அதிலிருந்து பெரும்பாலான விவசாயிகள் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர். இதற்கெல்லாம் தீர்வாக அமைவது தான் கலப்பு பண்ணை முறைகள். கலப்பு பண்ணை:விவசாயிகள் ஒவ்வொருவரும் தமது தோட்டத்தில் பயிர்கள் சாகுபடிக்கு மட்டுமில்லாமல், கால்நடைகள் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொட...