Skip to main content

Posts

Showing posts with the label தக்காளி சாகுபடி

தக்காளி சாகுபடி செய்ய சில முக்கிய ஆலோசனைகள்

• காரிப் பருவத்திற்கு பயிரிட பிகேஎம் 1, பையூர் 1 மற்றம் கோடிஎச் 2, 3 போன்ற அதிக மகசூல் தரும் வீரிய ஒட்டு இரகங்கள்  பயிரிட சிறந்தது. தனியார் நிறுவன இரகங்களையும் விவசாயிகள் பயன்படுத்தலாம். குழித்தட்டு முறையில் நாற்றுகள் நடவுக்கு சிறந்தது. குழித்தட்டு முறைக்கு சூடோமோனாஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி மூலம் ஊட்டம் மேற்றிய தென்னை நார்கழிவுகளை பயன்படுத்தி நாற்றங்கால் மற்றும் நடவு வயலில் வரும் நோய்களிலிருந்து தக்காளி செடிகளை பாதுக்காக்கலாம். • நூற்புழு பாதிப்பு உள்ள பகுதிகளில் விவசாயிகள் கேந்திப்பூவை 8:1 என்ற விகிதத்தில் ஊடுப்பயிராக பயிரிடவும். மேலும், உயிரியல் நுண்ணுயிரிகளான சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் பர்பியுரியோசிலியம் லிலேசினம் 2 கிலோ/ஏக்கர் உடன் வேப்பம் புண்ணாக்கு அல்லது தொழு உரத்துடன் சேர்த்து நடவு செய்யும் முன் அல்லது 15 – 30 நாட்கள் நடவுக்கு பிறகு வயலுக்கு தெளிக்க வேண்டும். • தக்காளி ஊசி துளைப்பான் (டையுடா அப்சல்யுட்டா) வை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 16 இனக்கவர்ச்சி பொறிகள் வைக்க வேண்டும். பயிறுவகை பயிர்களை வரப்பு ஓர பயிராக பயிருடுதல் அல்லது இயற்கை எதிர்ப...