Skip to main content

Posts

Showing posts from October, 2020

வயலில் எலியை ஒழிப்பது எப்படி

எலி தொந்தரவு வயல்களில் கட்டுப்படுத்த கிளைரிசீடியா நுனி பகுதியில் உள்ள   தண்டு பகுதியை ஒரு கால் கிலோ அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். இலைகள் இருக்க கூடாது சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு இரண்டு அல்லது நான்கு லிட்டர் கொள்ளளவு உள்ள பாத்திரத்தை எடுத்து கொண்டு நீரை ஊற்றி கொதிக்கவிடுங்கள் நன்றாக கொதித்தவுடன் நீங்கள் வெட்டிவைத்திருக்கும் கிளைரிசீடியா துண்டுகளை  கொதிக்கும் நீரில் போடுங்கள் , போட்டு ஒரு அரைமணி நேரம் சாறு இறங்கும் வரை கொதிக்க விடுங்கள் . அப்புறம் முழு கோதுமையை அதில் போட வேண்டும் , மீண்டும் கோதுமை வேகும் அளவிற்கு நன்றாக கொதிக்க விடவேண்டும். ரொம்ப கூழாக வேண்டாம் கோதுமை நசுங்கும் பதத்திற்கு இருந்தால் போதும் . அந்த பதம் வந்தவுடன் இறக்கி ஆறவைத்து விடுங்கள். எலி மிகவும் மோப்பசக்தி வாய்ந்தது ஆறியவுடன் கையால் தொடுவதை தவிக்கவும் . ஆறியவுடன் ஒரு தட்டுல கொட்டி அதில் உள்ள குச்சிகளை எடுத்துவிடுங்கள் . இதை அப்படியே எடுத்து கொண்டு வயலில் ஆங்காங்கே வைக்கலாம் . இதை சாப்பிட கூடிய எலிகள் இறந்துவிடும் . இதை செய்றதுக்கு  முன்னாடி வெறும் கோதுமையை ஆங்காங்கே வையுங்க மறுநாள் சாப்ட்டு

கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு முறைகள்

கிணறுகளில் மழைநீரை சேகரிக்கும் முறை  தமிழகத்தில் பெய்யும் மிகக் குறைவான மழை நீரை கிணறுகளில் சேமிக்கலாம். அவ்வாறு மழைநீரை கிணறுகளில் வடிகட்டி சேமிப்பதால் மேற்பகுதிகளில் உள்ள ஊற்றுக்களில் நீர் நிறைந்து நிலத்தடியில் நிரந்தரமாக நிறைய நீர் கிடைப்பதுடன் நம் கிணறுகளை சுற்றியுள்ள மேற்பகுதியில் உள்ள ஊற்றுகளில் அதிகளவு நீரை சேர்த்து வைத்துக் கொள்ள வழிவகை ஏற்படும். இதனால் வறட்சிக் காலத்திலும் தேவைப்படும் குறைந்தபட்ச  நீரைப் பெற வழிவகை ஏற்படும். *சேகரிக்கும் முறை*   *முறையாக கற்சுவர் கொண்டு* அமைக்கப்பட்ட கிணறுகளிலிருந்து மூன்று அல்லது நான்கு அடி தள்ளி 6 அடி நீளம் 6 அடி அகலம் 6 அடி முதல் 10 அடி நீளம் 10 அடி அகலம் ஆழம் பத்தடி வரையிலான குழியை எடுக்கலாம் . பொதுவாக இந்த குறி கிணற்றின் மேட்டுப் பகுதியில் அமையலாம். மேலும் ஆற்றின் மேட்டு பகுதியில் உள்ள நீர் முழுவதும் வடிந்து குழிக்குள் வருமாறு அமைத்துக்கொள்வது நல்லது. மேட்டுப் பகுதியில் உள்ள நிலம் நிலத்தின் அளவைப் பொறுத்து குழியின் அளவு மாறுபடும். பெரிய அல்லது இரண்டு ஏக்கருக்கு மேல் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியாக இருந்தால் 10 அடி நீளம் 10 அடி அகலம் ஆழம் 6tn

இயற்கை வழி நெல் சாகுபடி செய்வது எப்படி

பயிர்களை பற்றிய கண்ணோட்டம்  1. குறுகிய கால ரகங்கள்  வயது : 80 நாட்கள் முதல் 110 நாட்கள் வரை  2. மத்திய  கால ரகங்கள்  வயது : 120 நாட்கள் முதல் 135 நாட்கள் வரை  3. நீண்டகால  கால ரகங்கள்  வயது : 140 நாட்களுக்கு மேல்   இது நம்முடைய நடைமுறையில் உள்ள நெல் ராகங்களில் உள்ள வயதுக்கு ஏற்ற பகுப்பு..  ஒரு சில ரகங்கள் சற்று மாறுபடலாம்...  && அனைத்து பயிர்களுக்கும் நிலம் தயாரிப்பு முறை,  நாற்றங்கால் தயாரிப்பு முறை ஒன்றுதான்.. அதில் எந்த வேறுபாடும் இல்லை  && அனைத்து பயிர்களையும் 10ம் நாள் தொடங்கி 15ம் நாளுக்குள் நட்டால் தூர்கள் நன்றாக பிடிக்கும்...  அதிலும் வித்யாசம் இல்லை  பின்பு மாறுபாடுகள் எங்கே வருகிறது என்று யோசிக்க வேண்டும்...  1. பயிர்களின் வளர்ச்சி பருவம்...  கதிர் வருவதற்கு முன் உள்ள பருவம்..  2. கதிர் வந்ததிலிருந்து அறுவடை வரை உள்ள பருவம்...  மேல் சொன்ன 2 பருவங்களும் பயிருக்கு பயிர் மாறுபடும்..  மண்ணின் வளத்தை பொறுத்து பயிரின் வயது கூட குறைய செய்கிறது..   + or  - 5 days.  நெல் விவசாயத்தில் நல்ல மகசூல் பெற கடை பிடிக்க பட வேண்டிய விஷயங்கள்  1. மண் வளம் பராமரிப்பு  2. விதை தேர்

கொரைசா நோய் மருந்து

சளி மிகுதியான காரணத்தினால் இது கொரைசா நோயாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன் ..... 1. சுடுத்தண்ணீரில் உப்பு கலந்து இளம் சூட்டில் துணிவைத்து துடைத்து விடுங்கள்  2. கண் திறக்க முடிந்தால் மருந்தகத்தில் டீப்பு வடிவில் கண்களுக்கு போட கூடிய மருந்து இருக்கும் அதனை போடாலாம் (கண் திறக்க முடியாத பட்சத்தில்) .... 3. மஞ்சள் , வேம்பு எண்ணை குழைத்து தடவி விடுங்கள்  4. சளியை குறைக்க முருங்கை கீரை சாதம் கொடுங்கள்  5.மேல் தோலில் உள்ள காயம் இரண்டு நாட்களில் சரியாகி விடும் அதன் பின் அந்த கட்டியை மெல்ல கசக்கி விடுங்கள்  6. ஊசியால் குத்தி கசக்கினால் சீழ் இரத்தம் இரண்டும் கலந்து வரும் ஊசி  கண்ணில் படாத படி பார்த்துக்கொள்ளுங்கள்  7. அதன் பின் தொடர்ந்து மஞ்சல் , வேம்பு எண்ணை தடவி வாருங்கள்  8. கண் தெரியாத பட்சத்தில் உணவு எடுக்கவில்லை என்றால் சோர்வு அடையும் அதற்கான உணவை நீங்களே கொடுங்கள் 

மழையில் மூழ்கிய நெற்பயிர்களை மீட்டெடுக்கும் முட்டை வெங்காய கரைசல்

தேவையான பொருட்கள் :  சின்ன வெங்காயம் - 1கிலோ. முட்டை - 10  (1 ஏக்கருக்கான அளவு)  செய்முறை : சின்னவெங்காயத்தை ஓர் இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் வெங்காயத்திலிருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு, நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்த வெங்காயத்தை மெல்லிய பருத்தி துணியில் வடிகட்டி சாறு எடுத்து கொள்ளவும். வெங்காய சாற்றுடன், முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சேர்க்கவும். இக்கலவையுடன் சூடோமோனஸ், வசம்புபொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்த பின்னர் தெளிப்புக்கு பயன்படுத்தவும். பயன்படுத்தும் அளவு : #10 லிட்டர் தண்ணீர் : 50 மில்லி கரைசல். #சூடோமோனஸ் - 50 கிராம் #வசம்பு பொடி - 50 கிராம். இவை இரண்டும் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட தெளிப்பான்களின் அளவு. இக்கரைசலை ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை பயிரில் தெளிக்கும்போது, மழையில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு, மீண்டும் சத்துக்களை கொடுத்து மீட்டெடுக்கும் இக்கரைசல். இக்கரைசலில் சேர்க்ப்படும் பொருட்களின் பயன்கள்.  *# முட்டையின்* *வெள்ளைகரு -* தழைசத்தை நிலைநிறுத்துகிறது.  *#வெங்காயம் -* கந்தகசத்தை அளிக்கிறது.  *#சூடோமோனஸ்* - இலைநுனிகருகல் மற்றும் வேரழுகல் நோய்களை கட்

பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதற்கான பயிர்த்தேர்வு முறை

1. பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் போன்ற வேறு ஒன்றுடன் ஊடு பயிராக பயிர் செய்திருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயறு வகைகளைப் பயிர் செய்யலாம். 2. சில பயிர்கள் மண்ணிலுள்ள சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. எ.கா: எள், கடலை. எனவே இப்பயிர்களை பயிரிட்டபின் பயறு வகைகளைப் பயிரிட்டால் அவை சத்துக்களை மண்ணில் நிலைநிறுத்துகின்றன. 3. அவ்வப்போது இலைகள் மண்ணில் உதிரும் வண்ணம் உள்ள செடிகளையும் பின்பற்றலாம். எ.கா: பயிறு / பருத்தி – கோதுமை / நெல் 4. தானியப் பயிருகளுக்குப் பிறகு பசுந்தாள் உரத்தாவரங்களைப் பயிரிடலாம். எ.கா: சனப்பை – நெல், துவரம் பருப்பு, பச்சைப் பயிறு – கோதுமை, மக்காச் சோளம். 5. நல்ல அதிக ஊட்டச்சத்து தேவை மிக்க பயிறுக்குப்பின், குறைந்த ஊட்டச்சத்து தேவைமிக்க பயிர்களைப் பயிரிடுதல் வேண்டும். எ.கா: மக்காச்சோளம், உளுந்து, பூசணி வகைகள் 6. பருவம் சார்ந்த பயிர்கள் பயிரிட்ட பின் ஓராண்டுத் தாவரங்களைப் பயிர் செய்யலாம். எ.கா: நேப்ப

அஸ்வகந்தா மூலிகை பயிர் மேலாண்மை

பொருளாதார பகுதி – வேர் பெரும்பான்மையான மூலக்கூறு – மொத்த அல்கலாய்டுகள் (0.13-31%) – வித்தானைன், சாம்னிஃபெரைன் பயன்கள் – மூச்சுக்குழாய் அழற்சி, கீல் வாதம், வீக்கம் குணமாகின்றன இரகங்கள் போஷிதா மற்றும் ரக்ஷிதா போன்றவை சிஎஸ்ஐஆர்-சி ஐ எம் ஏ பி, லக்னோ வெளியிட்ட அதிக விளைச்சல் தரும் இரகங்கள் ஆகும். ஜவஹர் 20: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பயிரிடப்படுகிறது. W S R என்ற ரகம் சிஎஸ்ஐஆர்-மண்டல ஆராய்ச்சி ஆய்வகம், ஜம்முவால் வெளியிடப்பட்ட மற்றொரு வகையாகும். நாகோரி என்பது மாவுச்சத்து அதிகம் கொண்ட நாட்டு ரகம் ஆகும். மண் மற்றும காலநிலை 7.5-8.0 கார அமிலத் தன்மை கொண்ட, மணல் கலந்த மண்ணில் நன்கு வளரும். அது 600-1200 மீ உயரத்தில் உள்ள சிறந்த வளரும். 35oசெ முதல் 20oசெ இடையேயான வெப்பநிலை சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. விதை அளவு எக்டருக்கு 10 – 12 கிலோ விதை தேவைப்படுகிறது. நடவிற்கு, 5 கிலோ விதை / எக்டர் தேவைப்படுகிறது. 6 வார வயதுடைய நாற்றுகள் விளை நிலத்தில் 60 x 60 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். பருவம் இது மழை காலமான ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாதம் வரை நடவு செய்யப்படுகிறது. அடுத்த மே மாதம் அறுவடை செய்யலாம். உரமி

கேழ்வரகு பயிரிடும் முறை & பயன்கள்

கர்நாடகாவும், தமிழ்நாடும் கேழ்வரகு (ராகி) சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்தரா, ஒரிசா, குஜராத், மஹாராஷ்டிரா, உத்திரபிரதேசம் மற்றும் ஹிமாச்சலபிரதேசம் மலைபகுதிகளில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது. கேழ்வரகு ஆண்டுக்கொருமுறை விளையும் தானியப் பயிர் ஆகும். இதன் வேறு பெயர்கள் ராகி மற்றும் கேப்பையாகும். எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் முழு நீள, அகல நிலப்பரப்பில் பயிரிடப்படும், ஊடு பயிர்களில் மிக முக்கியமான சிறு தானியம் கேழ்வரகு ஆகும். இந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானில் பயிர் செய்யப்படுகிறது. கோ 11, கே 5, கே 7, கோ 7, ஜி.பி.யு -28, கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ14, டி.ஆர்.ஒய் 1, பையூர் 1 ஆகிய இரகங்கள் உள்ளன. டிசம்பர்- ஜனவரி, செப்டம்பர்- அக்டோபர் மாதங்கள் பயிர் செய்ய ஏற்றவை ஆகும். எல்லா வகையான மண்களிலும் பயிர் செய்யலாம் எனினும் செம்மண், மணற்பாங்கான கருமண் நிலம் ஏற்றது. ஒர

மலர்கள் சாகுபடி

மல்லிகை பூ சாகுபடி முறை பூக்களில் வரும் பூஞ்சண நோய்யை எப்படி கட்டுப்படுத்தலாம்

மாடித்தோட்டம் பராமரிப்பு

மாடி தோட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த மாடித்தோட்டம் வீடியோ -1

தக்காளி செடியை பராமரிப்பது எப்படி

தக்காளி செடி வளர்ப்பு - சுண்ணாம்பு சத்து குறைபாட்டை எப்படி நிவர்த்தி செய்யலாம்

மாமரம் பூச்சி நோய்கள்

மாமரம் பராமரிப்பு - புழு தாக்குதலை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்

மல்லிகை பூ சாகுபடி முறை

மல்லிகை சாகுபடி தொழில் நுட்பம்

கரும்பு சாகுபடி

மறுதாம்பு கரும்பு பயிர் இயற்கை முறை நடவு

மாம்பழம் சாகுபடி தொழில் நுட்பங்கள்

மா தொழில் நுட்பங்கள் அக்டோபர் மாதத்தில் மா மரங்களுக்கு செய்ய வேண்டியவை மாமரங்களின் பராமரிப்பு மாம்பழம் பூச்சி நோய் மேலாண்மை

பசு கிசான் கடன் அட்டை - உழவர் கடன் அட்டை பெறுவது எப்படி

பசு கிசான் கடன் அட்டை திட்டம்: கால்நடை வளர்ப்பவர்கள் வங்கிகளில் எந்த வித அடமானமும் இல்லாமல் கால்நடை உழவர்கள் குறைந்த வட்டியில் ரூ. 1.60 லட்சம் வரை கடனுதவி பெற இ ந்த பசு கிசான் அட்டை மிகவும் உதவுகிறது. திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு: இப்போது இருக்கின்ற விவசாய துறைகளில் அதிகமாக வளர்ந்து வருவது இந்த கால்நடை வளர்ப்பாகும். விவசாயிகள் அனைவரும் அதிக வருமானம் பெறுவதற்காக கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு துறையில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். விவசாயிகளுக்காகவே இந்த பசு கிசான் கடன் அட்டை வழங்கும் திட்டம் 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. வங்கி கடன்: இந்த பசு கிசான் கடன் அட்டைக்கு ஆண்டுக்கு 7 சதவிகிதத்தில் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு பசு கடன் அட்டை மூலம் வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது. மானியம்: வங்கியில் வாங்கிய கடன் தொகையினை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு மத்திய அரசானது 3% வட்டியை மானியமாக வழங்குகிறது. மத்திய அரசு வழங்கும் மானியத்தால் விவசாய பண்ணையாளர்களுக்கு ஆண்டுக்கு வட்டி விகிதம் 4% மட்டுமே. உழவர் கடன் அட்டை சிறப்பு: கால்நடை உழவர் கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வங்க

பூக்களில் வரும் பூஞ்சண நோய்யை எப்படி கட்டுப்படுத்தலாம்

பொதுவா  # பூக்கள்  அழுகுகிறது என்றால் பூஞ்சண நோய்யாக இருக்கலாம்  அதற்கு  # சூடோமோனாஸ்  அல்லது விரீடி ஏதாவது ஒன்றை 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து மலை வேளையில் செடி நனையும்படி தெளிக்க வேண்டும். ஒரு தடவை தெளித்த பின்பு 7 வது நாள் மற்றும் 14 வது நாள் தெளிக்கலாம் தரை வழி சூடோமோனாஸ் 1 லிட்டர் கொடுப்பது நல்லது

கொய்யா சாகுபடி -கொய்யா பழம் அதிக எடை வர

கொய்யா அதிக எடை வர கொய்யா L49 ஆக இருந்தால் 400 கிராம் வர வேண்டும் இதே போல் அங்காகிரான் தைவான் பிங்க்காக இருந்தால் 225 கிராம் வர வேண்டும் இதை வந்து நாம் இலக்காக வைத்து கொண்டு தோட்டத்தை நான்காக பிரிங்கள் (உதாரணமாக 1 ஏக்கராக இருந்தால் 25, 25 Cent ஆக பிரிக்கலாம் ) இப்படி பிரித்து எந்த பகுதியில் நல்ல விளைச்சல் வருகிறது என்று பாருங்கள் எந்த பகுதியில் சைஸ் கிடைக்காமல் இருக்குனு பாருங்க ,அதற்கு இன்னும் என்ன செய்ய வேண்டும் பாருங்க சரியாக காய்க்காத  மரங்களை கவனித்து சரியான ஊட்டச்சத்துகளை கொடுக்க வேண்டும் . உதாரணமாக படத்தை பாருங்கள் கொய்யா காய் ஒரே நீளமாக இருக்கிறதா அது எப்படி இருக்க வேண்டுமென்றால் காம்போடு ஒட்டிய பகுதி விரிந்து இருக்கவேண்டும் முனி கொஞ்சம் கூம்பி இருக்க வேண்டும் . அப்ப மேல் பகுதி விரிய வேண்டுமானால் சாம்பல் சத்தும் தழைச்சத்து இருக்க வேண்டும் அப்படி இருந்திருந்தால் உருண்டையாக இருந்து தேவையான எடை கிடைத்திருக்கும் அடுத்ததாக ஒருமரத்தில் இருக்கவேண்டிய காய்களின் எண்ணிக்கை , குறைந்தபாசம் 80 முதல் 100 காய்கள் இருக்க வேண்டும் அதாவது பறிப்பது போல் இருக்கவேண்டும் அதற்காக நாம் தேவையான இடுபொரு

மாடித்தோட்டம்- பூச்சி நோய் கட்டுப்பாடு

மாடி தோட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த அறிகுறி பார்த்தால் படத்தில் உள்ளது போல் வெளிப்புறம் குவிந்து காணப்படும் மேலும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கடிப்பதால் வைரஸ் தொற்றுகள் வரலாம் . இதனை கட்டுப்படுத்தவெர்ட்டி சீலியம் லக்கானி லிட்டருக்கு 5 மில்லி கலந்து சாயந்தரம் அல்லது அதிகாலை தெளிக்கலாம் அடுத்ததாக 1 லிட்டர் தண்ணிக்கு 50 மில்லி பால் இதனுடன் 5 பள்ளு பூண்டு இடித்து போட்டு தெளிக்கலாம் இதனுடன் ஒரு சிட்டிகை பெருங்காயத்துக்குள் சேர்த்துக்கொள்ளலாம் . வாரம் ஒருதடவை என்று இரண்டு தடவை தெளிக்கலாம் கருவாட்டு பொறி வைக்க முடிந்தால் நல்லது

வாழை சாகுபடி தொழில் நுட்பம் காய்கள் சீரான அளவில் காய்க்க என்ன செய்யலாம்

வாழை பிஞ்சுகளில் முனையில் உள்ள காய்ந்த பூக்களை நீக்கிவிடவும் பூக்களை நீக்கியபின் இப்படி இருக்கும்.. இப்படி நீக்குவதால் அனைத்து காய்களும் ஓரே சீரான அளவில் இருக்கும் இது ஏற்கனவே காய்ந்த பூக்களை நீக்கிய வாழை குலை.. காய்களின் தோற்றத்தை பாருங்கள்

தக்காளி செடி வளர்ப்பு - சுண்ணாம்பு சத்து குறைபாட்டை எப்படி நிவர்த்தி செய்யலாம்

தக்காளி செடியில் சுண்ணாம்பு சத்து குறைபாடு 200 லிட்டர் தண்ணீருக்கு 3 கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பு அல்லது சுவருக்கு அடிக்கும் சுண்ணாம்பு ஒரு நான்கு மணி நேரம் ஊறவைத்து தரை வழி கொடுக்க வேண்டும் இதை 10 நாட்களுக்கு ஒருமுறை கொடுக்கலாம் https://qr.ae/pNuY7O சூடோமோனாஸ் அல்லது பேசில்லஸ் சாப்ஸ்டில்ஸ் அல்லது ட்ரகோடெர்மாவிரிடி ஏதாவது ஒன்றை 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து மேலே தெளிக்கலாம்

மாமரம் பராமரிப்பு - புழு தாக்குதலை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்

மா கன்றில் புழு தாக்குதலை கட்டுப்படுத்த 1) 10 லிட்டருக்கு 50 கரைத்து மலை இல்லாத நேரங்களில் தெளிக்க வேண்டும் 2)  அக்னி அஸ்திரம் அல்லது கற்பூரக் கரைசல் 1வது நாள் மற்றும் 6 வது நாள் தெளிக்க வேண்டும் 3)  அல்லது பேசில்லஸ் துருஞ்சியன்சிஸ் அல்லது பேவேறியா பேசியானா 10 லிட்டருக்கு 50 மில்லி 1வது நாள் மற்றும் 6 வது நாள் தெளிக்க வேண்டும் மேற்கூறியவற்றில் ஏதாவது ஒன்றை செய்யவும்