Skip to main content

Posts

Showing posts with the label விவசாயம்

ஆழ்துளைக் கிணற்று நீரில் அதிக உப்புத்தன்மை... தீர்வு என்ன?

“குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளிலும் எப்போதும் ஒரே விதமான நிலத்தடி நீர் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. பொதுவாக, ஆழ்துளைக் கிணறு அமைப்பைப் பொறுத்தவரை, பல்வேறு பாறை அடுக்குகளில் உள்ள உப்புப் படிமங்கள் நீருடன் கரைந்து வெளியேறும். அந்த அடுக்கில் உள்ள உப்புத்தன்மையைப் பொறுத்து, நிலத்தடி நீரில் உப்பின் அளவு மாறுபடும். இது நிலத்துக்கு நிலம் வேறுபட வாய்ப்புள்ளது. நீர்மூழ்கி மோட்டார் இயங்கும்போது, அதில் உள்ள விசிறி சுழன்று, எந்தக் கனிம அடுக்கை அரிக்கிறதோ அதில் உள்ள உப்பானது நீரில் கரைந்துவிடும். இதைப் பொறுத்தும், நிலத்தடி நீரின் உப்புத்தன்மையில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். விளைநிலத்தில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிக அளவு ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தால், அதில் உள்ள உப்புத்தன்மை மழைநீர் மற்றும் பாசனநீரின் மூலமாக நிலத்தடி நீரில் கலப்பதற்கும் வாய்ப்புள்ளது. நீங்கள், உங்களுடைய ஆழ்துளைக் கிணற்று நீரின் உப்புத்தன்மை யைக் குறைக்க, பண்ணைக் குட்டை அமைப்பதுதான் சிறந்த தீர்வாக இருக்கும். ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுமார் 15 அடி தூரத்தில் மேடான பகுதியில...

"படைக்குருவிகள் அட்டகாசம் – பயிர் பாதுகாப்பு

  மானாவாரி நிலத்தில் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் சாகுபடி செய்து வருகிறேன். கதிர்கள் முற்றி தானியங்கள் அறுவடைக்கு வரும் தருணத்தில் படைக்குருவிகளின் தாக்குதலால், அதிக மகசூல் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. இதற்கு என்னதான் தீர்வு? ” “மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடி செய்வதென்பது சவாலானது. சீரான மழைப்பொழிவு இல்லையென்றால், முதலுக்கே மோசம் வந்துவிடும். விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் விதமாக, நல்ல மழை பெய்து தானியங்கள் விளைந்து அறுவடைக்கு வரும் நேரத்தில் படைக்குருவிகள், கிளிகள் உள்ளிட்ட பறவைகளின் தாக்குதலால் மகசூல் இழப்பை சந்திக்க நேரிடுகிறது.  கதிர் பிடிக்கத் தொடங்கியதும், 10 சென்ட் பரப்புக்கு 1 இடம் வீதம், சுமார் 15 அடி நீளம் கொண்ட ஆடியோ டேப்பில் 16 சி.டி-க்களை தொங்கவிட வேண்டும். பயிரின் உச்சிக் கிளைகளுக்கு இடையே, வெளிப்புறமாக கட்ட வேண்டும். ஊன்றுகோள்களாக குச்சிகள் பயன்படுத்தினால், அவற்றில் பறவைகள் வந்து அமர்ந்து சேதம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.  எனவே, குச்சிகள் ஊன்றுவதை தவிர்க்க வேண்டும். கண்ணாடி போன்ற சி.டி-க்களில் ஏற்படும் பிரதிபலிப்பால் மட்டுமல்லாமல், ஆ...

செடி முருங்கை விவசாயம்

முருங்கை ஒரு கோடைகால பயிர். இது வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. மேலும், வறட்சியைத் தாங்கி வளர்வதுடன் அதிக விளைச்சலும் கொடுக்கக்கூடியது. பூக்கும் தருணத்தில் மழை இருந்தால் விளைச்சல் மிகவும் பாதிக்கப் படும். இப்பயிருக்கு நல்ல வளமான வடிகால் வசதியுள்ள மணல் கலந்த செம்மண் அல்லது கரிசல் மண் நிலம் சாகுபடிக்கு ஏற்றவை. முருங்கை இரண்டு முறையில் பயிர் பெருக்கம் செய்யப் படுகிறது. பல்லாண்டு முருங்கை தண்டு போத்து மூலமாகவும், செடி முருங்கை விதைகள் மூலமாகவும் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. செடி முருங்கை கோடை காலத்தில் பூப்பதற்கு ஏற்ப செப்டம்பர் – அக்டோபர் (புரட்டாசி – ஐப்பசி) மாதங்களில் பயிரிடுவது நல்லது. மேலும், ஜுலை (ஆடிப்பட்டம்) மாதத்திலும் விதைகளை நடவு செய்யலாம். செடி முருங்கையில் நன்கு முற்றிய காய்களை அறுவடை செய்து, காய வைத்து விதை களை பிரித்தெடுக்க வேண்டும். தரமான விதைகளை தேர்வு செய்து சுமார் 15 செ.மீ நீளமும், 10 செ.மீ அகலமும் உள்ள மக்கும் பைகளில் விதைத்து நாற்றுக்களாக வளர்த்து ஒரு மாதம் முடிந்த பின்பு நடவினை மேற்கொள்ளலாம். வழக்கமான நீர் மேலாண்மை, களை மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்...

புற்றுகள் இருக்கும் இடத்தில் நிலத்தடிநீர் அதிகம் இருக்குமா

பூச்சிகளில் மிக முக்கியமானது கறையான். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுக்கோப்பான வாழ்க்கையை வாழ்வதில் கறையானுக்கு நிகர் எதுவும் கிடையாது. கறையான் எறும்பு மாதிரியே இருக்கும். ஆனால், எறும்பு கிடையாது. இது கரப்பான்பூச்சி குடும்பத்துக்கு நெருக்கமானது என்று சொன்னால் நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும். எறும்புகள்போல கூட்டமாகச் சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையைக் கொண்டவை. ஆனால், நிறம் மட்டும் வெள்ளையாக இருக்கும். அதனால், இது வெள்ளை எறும்பு என்றும் அழைக்கப்படுகிறது. கறையான் ஒரு தூய்மைக் காவலர் மனிதர்களுக்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் பூச்சிகளில் கறையானுக்கு முக்கிய பங்குண்டு. இது, வயல்வெளிகளில் நடத்தும் தாக்குதலைவிட வீடுகள், கட்டடங்களில் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. 2,750 வகையான கறையான்கள் இருந்தாலும், 10 சதவிகித கறையான்கள்தான் மனிதர்களுக்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், கறையான் என்ற உயிரினம் இல்லையென்றால், இந்த உலகம் குப்பைமேடாக மாறிவிடும் என்பதுதான் பகைமுரண்! பட்டுப்போன மரங்கள், செடி, கொடிகள் போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக மாற்றி, தாவரக் கழிவுகள் மட்குவதற்குக் காரணமாக ...

பயிரின் வளர்ச்சியில் சுண்ணாம்பு சத்துகளின் பங்கு

பயிரின் வளர்ச்சியில் சுண்ணாம்பு பயிர்களின் மகசூலை தீர்மானிப்பதில் சுண்ணாம்பு சத்தின் (CALCIUM) பங்கு முக்கியமாக உள்ளது. பயிருக்கு பேரூட்ட சத்துகளின் தேவைக்கு (NPK) அடுத்தப்படியாக இரண்டாம் நிலை ஊட்டசத்துகளில் (CMS) சுண்ணாம்பு சத்து உள்ளது. பயிருக்கு சுண்ணாம்பு அவசியம் அதே நேரத்தில் அளவாக இருக்க வேண்டும். வெற்றிலைக்கு சுண்ணாம்பு எப்படியோ அதை போலத் தான் பயிருக்கு. மண்ணில் சுண்ணம்பு அதிகமானால், மண் புரை யோடி பயிர்களின் வளர்ச்சி தடைபடும் கால்சியம் கார்பனேட் எனப்படும் இந்த சுண்ணாம்பு சத்து மண்ணில் சரியான அளவிற்கு இருக்கிறதா? என்பதை கண்டறிய ஒரு எளிய தோதனை உள்ளது. அது என்ன என்பதை பார்ப்போம்? நிலத்து மண்ணை கொஞ்சம் போல எடுத்துக்கொண்டு 10% ஹைட்ரோ குளோரிக் அமில (HCL) த்தை அதில் ஊற்ற வேண்டும். மண் பொங்கி கொண்டு வந்தால் மண்ணில் சுண்ணாம்புத் தன்மை அதிகமாக இருக்கிறது எனவும் சுமாராக நுரைத்தால் நடுத்தர நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். சுண்ணாம்பு மண்ணின் தன்மை? இந்த மண் பெரும்பாலான வறண்ட பகுதியிலும், கருப்பு கலந்த மண்ணில் அதுவும் எங்கு எங்கு சிமெண்ட் ஆலை உள்ளதோ அப்பகுதியில் 30 கிமி...