Skip to main content

Posts

Showing posts from March, 2021

Featured Post

மாடித்தோட்டத்துக்கு ஏற்ற மாம்பழ ரகங்கள் எவை, வளர்ப்பது எப்படி?

மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்துக்கு மக்களிடத்தில் எப்போதும் தாளாத ஈர்ப்பு உண்டு. இதோ, இந்த சீசனுக்கு வழக்கம்போல மாந்தோப்புகளில் மாம்பூக்கள், பிஞ்சுகளாக மாறி, காய்களாக உருவெடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், எல்லோருக்குமே தோட்டத்தில் மாம்பழங்களை விளைவித்துச் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால், சிலர் மாடித்தோட்டங்களில் மாம்பழங்களை விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் வளர்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில், மாடித்தோட்டங்களில் என்ன விதமான மாம்பழங்களை விளைவிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் . இந்த ரகங்கள் எல்லாம் சிறப்பு! ``இந்தியாவில் கிட்டத்தட்ட 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. இவற்றில் வணிக ரீதியாக 20 ரகங்கள் மட்டுமே அதிகமாக வளர்க்கப்படுகின்றன. வட இந்தியாவில் தஷேஹரி, லாங்கரா, பாம்பே கிரீன் வகைகள்; தென் இந்தியாவில் பங்கனப்பள்ளி, நீலம், காலாபாடி, ருமானி மற்றும் மல்கோவா வகைகள்; மேற்கு இந்தியாவில் அல்போன்சா, கேசர், மான்குராட், வன்ரான், லாங்க்ரா வகைகள்; கிழக்கு இந்தியாவில் சர்தாலு, சௌசா, மால்டா போன்ற வகைகள் வ

இயற்கை முறையில் களை கட்டுப்பாடு - களைக்கொல்லி

organic weed control ஒரு களை அதோட பயன்பாடு என்பது மிக அதிகம் , களை  உணவாக பயன்படுகிறது , களை மருந்தாக பயன்படுகிறது , களை அழகு பொருட்கள் செய்ய பயன்படுகிறது இப்படி களைகளோட பயன்கள் இருக்கத்தான் செய்கிறது . ஆனால் களை கட்டுப்பாடு என்பது எங்கே வருகிறது என்று பார்த்தால் , உங்களுடைய முக்கிய பயிரின் இடையே வளரும் போது அது களையாகிறது இந்த கட்டுரையில் நாம் எப்படி இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்தலாம் என்பதை பார்க்கலாம் . முதலில் ஒரு களை ஏன் அகற்றப்பட வேண்டும் களையோட முக்கிய போட்டி என்று எடுத்துக்கொண்டால் அது இடம் ஒரு சதுர அடியில் கிட்டத்தட்ட 500 முதல் 600 பல்வேறு வகையான களை விதைகள் உள்ளன . இந்த விதைகள் எந்த நேரத்தில் முளைக்கும் என்று சொல்ல முடியாது அது மண்ணின் ஈரத்தன்மையை பொறுத்தது . அடுத்து நீர் , உரம் என அனைத்திற்கும் களை போட்டிபோடும் . பூச்சி நோய் உருவாக்கத்திற்கும் களை  முக்கிய பங்குவகிக்கிறது எனவே முதலில் களைகள் அகற்ற படவேண்டும் என்பது முக்கியமாகிறது . விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த நேரடி கள பயிற்சிகள் ஆன்லைன் பயிற்சிகள் பற்றிய விவரங்கள்- JOIN Here  உழவு ஒரு களையை கட்டுப்படுத்துவதி

மாதுளை பழத்தில் கரும்புள்ளி எதனால் வருகிறது

pomegranate pest and disease management  தமிழ் அதிகப்படியாக விற்க கூடிய பழங்களில்  ஓன்று இந்த மாதுளை . அந்த பழத்தில் கரும்புள்ளியோ அல்லது துளையோ இருந்தால் அது விற்பனையாகாது அதனால் அதை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம் . இலை புள்ளி நோய்  மாதுளையில் இலை புள்ளி நோய் அல்லது பழத்தில் புள்ளி நோய் இவை பொதுவாக பூஞ்சைகளால் உருவாகிறது இது எப்படி இருக்குமென்றால் படத்தில் இருப்பதுபோல் கருப்பாக இருக்கும். மேல் பகுதி நொழு நொழு போன்று இருக்கும்  சின்னதாக ஒரு துளை இருக்கும் அப்படி இருந்தால் அது பூசைகள் தாக்குதலுக்குள்ளானது . அதுவே துளை இருந்து கரும்படலமாக பரவினால் காய் துளைப்பானாக இருக்கும் (படத்தில் காண்க ). பொதுவாக மாதுளை பழத்தில் விற்பனை பொருள் அதன் தோல்தான் , அதில் கரும்புள்ளி இல்லாமல் இருந்தால்தான் விற்க முடியும் . எனவே இதை கட்டுப்படுத்த  பாலிதீன் பேப்பர் பழத்தை மூடாமல் அப்படியே வைக்கிறீர்கள் என்றால் அதற்கு சரியான நேரத்தில், சரியான அளவில் நீங்கள்  பூஞ்சாண கொல்லிகளும் காய்ப்புழுவிற்கான தடுப்பு நடவெடிக்கை எடுக்கவேண்டும் அப்படி எடுத்தால் நீங்கள் ஓப்பனில் வைக்கலாம் . இல்லை பாதுகாப்பதில

தோட்டத்தில் எறும்புகளை கட்டுப்படுத்த சில டிப்ஸ்

ant control for garden முதலில் உங்கள் தோட்டத்தில் விவசாயம் இருக்கா அல்லது வெறும் நிலமா என்று பாருங்கள் . வெறும் நிலமாக இருந்தால் செய்யவேண்டியது நன்றாக உழவேண்டும் . நன்றாக பிரட்டி போட்டு உழவேண்டும் ஏறும்போட புற்றை ஆய்வு செய்தால் 3 முதல் 4 அடிவரை வளைந்து நெளிந்து நல்ல கட்டமைப்புடன் இருக்கும் எனவே இதன் முட்டைகள் எல்லாவற்றையும் அளிக்கவேண்டுமென்றால் அதற்கு வேளாண்துறையிலோ அல்லது வெளியிலோ மோல்ட் ப்லோட் கலப்பை இருக்கும் இந்த கலப்பையை பயன்படுத்தினால் கீழ் இருந்து 2 அடி காலத்திற்கு தோண்டி மண்ணை திருப்பி போடும் இதனால் எறும்பு புற்று அழியும் . கால்நடை மற்றும் விவசாயம் சார்ந்த வாட்ஸ்அப் குரூப் லிங்க் Part - 5 அதுவே செடிகள் இருக்கு என்றால் அதன் புத்து எங்கே இருக்குனு பாருங்கள் புற்று இருந்தால் நீரை நன்றாககொதிக்கவைத்துசுடுதண்ணீரை.   புற்றுக்குள் ஊற்றி விடுங்கள் அழிந்து போகும் ஆனால் இந்த முறையை செடி அருகில் இருந்தால் பயன்படுத்த வேண்டாம் . செடிக்கு அருகில் எறும்பு புற்று இருந்தால் 10 லிட்டர் நீருக்கு 1கிலோ வசம்பை இடித்து போட்டு ஒரு நாள் ஊற வைக்கவேண்டும் பின்பு அதை புற்றில் ஊற்றுங்கள் எறும்புகள் ப

ஒரு விவசாயியும் ஒரு வெப்சைட் டெக்னாலஜியும்

New Agriculture Technology  இன்றைய காலகட்டத்தில் ஒரு டெக்னாலஜியோட தாக்கம் என்பது எல்லா இடத்திலும் இருக்கு . நீங்கள் ஒரு பொருளை வாங்கினாலும் சரி விற்றாலும் சரி அதை நாம் இருந்த இடத்திலே நாம் செய்ய முடியும் , ஒரு விஷயத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்மென்றாலும் அது உங்கள் உள்ளங்கைக்கே வந்துவிடும் . இது விவசாயத்திற்கும் பொருந்தும். உங்களுடைய பயிரை ஒரு பூச்சி தாக்கியிருந்தால் என்ன செய்லாம்  ஒரு வெப்சைட்டில் தெரிந்துகொள்ளலாம் அல்லது ஒரு போட்டோ எடுத்து அதை பேஸ் புக்கிலோ , வாட்ஸ் ஆப்பிளோ அல்லது அல்லது அது சார்ந்த ஆஃப்ல பதிவு செய்தால் அதற்க்கான பதில் அடுத்த 5 நிமிடத்தில் கிடைத்துவிடும் . விவசாயத்தை பொறுத்தவரை உழுவதிலிருந்து அறுவடை வரை டெக்னாலஜியின் தாக்கம் இருக்கும். ஆனால்  உங்கள் விவசாயத்தின் வெற்றியை நிர்ணையிக்க போவது அறுவடைக்கு பின் உள்ள விற்பனைதான் இந்த கட்டுரையில் நாம் எப்படி ஒரு இணையத்தளத்தில் விற்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் . ஏன் விற்பனையை இணையதளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் காய்கறிகளாகவும் அல்லது தானிய பயிர்களாகவும் இருந்தாலும் சரி நேரடியாக சந்தையில் கொண்டுபோய் நேரடியாக விற்கும்

மாட்டு சந்தை - மாடு விற்பனை மார்ச் பார்ட் - 4

குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது    வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 21/03/2021 Updated 1) விற்பனைக்கு : 3 ஆம் ஈத்து, அழகிய பெருங்கூட்டு மயிலை மாடு காளைக் கன்று கன்று ஈன்றி 3 நாட்கள் ஆகிறது பால் 3 லிட்டர் விலை -55000 தொடர்புக்கு: Alagu Farms Pollachi பேச:9942384512 2) காரிமாடு விற்பனை க்கு... ஒரு வாரத்தில் கன்று ஈனும் நான்காம் ஈத்து விலை : 56,000 தொடர்புக்கு : 8056377617 கண்ணம்பாளையம், சூலூர், கோவை 3) விற்பனைக்கு: பல் போடாத தலை ஈத்து அழகிய பால் வர்க்க மயிலை கிடாரி, இன்னும் 1வாரத்தில் கன்று ஈனும், நல்ல சாதுவான குணம், சுழி சுத்தம், பெண்கள் பிடிக்கலாம், இடம்: அந்தியூர் அருகில் (ஈரோடு மாவட்டம்), விலை 44,000, போன்: 86680 21530, 99523 98524, குறிப்பு: இதன் தாய் நல்ல பால் வர்க்கம் (நேரம் 3.5லி), தாயின் புகைப்படம் பார்வைக்கு மட்டும். 4) புங்கனூர் மாடுகள் விற்பனைக்கு 799

முருங்கை மரமும் மதிப்புகூட்டலும்

drumstick benefits and value added  விவசாயத்தில் நீங்கள் சுலபமாக ஒரு ஸ்டார்ட் அப் (Start -Up ) ஆரம்பிக்க வேண்டுமென்றால் தாராளமாக நீங்கள் முருங்கையை தேர்வு செய்யலாம். கீரை வகைகள் பொறுத்தவரை எல்லாமே சத்து மிகுந்ததுதான் ஆரோக்யமானதுதான் மேலும் மருத்துவக்குணமும் கொண்டதுதான் ஆனால் முருங்கை மட்டும் விவசாயிடமும்  சரி மக்களிடையேயும் ஒரு தனிப்பட்ட வரவேற்பு இருக்கும் . கீரை வகைகள் என்று பொதுவாக எடுத்துக்கொண்டால், ஒரு  போகத்திற்கு மட்டும் பலன் தரக்கூடிய அரைக்கீரை முளைக்கீரை உள்ளன. சில கீரைகள் நாம் வெட்ட வெட்ட முளைக்க கூடியது உதாரணமாக பொன்னகன்னி கீரை . ஆனால் மேல் சொன்ன இந்த இரண்டு வகை கீரைகளில் இலை மட்டுமே பிரதான விற்பனை அல்லது சாப்பிடும் பொருளாக இருக்கும் . ஆனால் முருங்கை எடுத்துக்கொண்டால் பல வருடம் பலன்தரக்கூடியதாகவும் , இலை , காய் மற்றும் பூக்களும் விதைகளும் கூட விற்பனை பொருளாக இருக்கும் . நாம் இந்த கட்டுரையில் முருங்கை மட்டும் மதிப்பு கூட்டல் பற்றி பார்ப்போம் . முருங்கை இலை மற்றும் முருங்கை இலைப்பொடி காய் மற்றும் பூக்களை விட அதிகம் சத்து நிறைந்தது முருங்கை இலைகள்தான் கரோட்டின் சத்து அதிகம

தென்னம் தோப்பில் மூடாக்கின் அவசியம்

what is mulching in agriculture and coconut plants ஒரு மாந்தோப்புஅல்லது  கொய்யா தோப்பு என்றாலும் சரி தென்னம் தோப்பனாலும் சரி ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இடைவெளி அதிகம்தான். ஆனால் , தென்னை மரத்திற்கு மட்டும் ஏன் மூடாக்கு மிக அவசியம் , அதற்கு முக்கிய கரணம் நிழல் . மா ,பலா , கொய்யா போன்ற தோட்டக்கலை பயிர்கள் பரந்து விரிந்து இருக்கும் அதன் நிழல் பரப்பும் அதிகம் ஆனால் தென்னை குறைந்தது 28 அடியாவது இடைவெளி விட்டிருப்போம் வெயில் நிழல் பரப்பு குறைவு. நாம் இந்த கட்டுரையில் தென்னையில் எப்படி மூடாக்கு செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம் . தென்னையில் ஏன் மூடாக்கு செய்ய வேண்டும். களைகள்  வெயில் பரவும் இடம் அதிகம் என்பதால் கலைகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் இது தேவை இல்லாத பூச்சி மற்றும் நோய்களை பரப்பும் மேலும் நீருக்கும் மற்றும் சத்துக்களும் அதிக போட்டி இருக்கும்  நீர்  தென்னையை பொறுத்தவரை நாம் வட்ட பாத்தியில்தான் தண்ணீர் விடுவோம் , ஆனால் மற்ற பகுதிகளில் வெயில் அதிகம் பட்டு நீர் ஆவியாகும் போது இந்த நீர் அந்த பகுதிக்கு போக வாய்ப்புள்ளது எனவே தென்னைக்கு தேவையான சமயத்தில் நீர் கிடைக்காது .

மாம்பிஞ்சு உதிர்வு எப்படி கட்டுப்படுத்தலாம்

cultivation of mango - how to control mango fruits fall  சத்து குறைபாடு - Malnutrition இதற்கு முதல் காரணம் மாமரம் சத்து இல்லாமல் இருந்திருக்கலாம் . பொதுவா மே மாசம் அறுவடை முடிந்த பின் மரத்தை நம் சரியாக கவனித்திருக்க மாட்டோம் , மறுபடியும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் மாமரத்தை கவனிக்க ஆரம்பிப்போம் எனவே இடைப்பட்ட பகுதிகளில் மரத்திற்கு தேவையான சத்துக்கள் இல்லாமல் போயிருக்கும் நாம் இந்த கட்டுரையில் மாம்பிஞ்சுகள் உதிர்வதை எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம் . வரப்புகள் தேவை- Boundaries required முதலில் முறையான வரப்புகள் இருக்கவேண்டும் . அந்த அந்த வரப்புகளில் உள்ள மரங்களில் அடியில் உள்ள சத்துக்கள் வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்ளும். நீங்கள் இடு பொருட்கள் கொடுத்தாலோ அல்லது போன தடவை கொடுத்திருந்தாலோ அவை நகராமல் இருக்க வரப்பு தேவை , அதேசமயம் தீடிரென்று கடும்மழை பெய்யும் போது நீங்கள் கொடுக்கும் சத்துக்கள் அடித்து செல்ல வாய்ப்புள்ளது எனவே முதலில் வரப்பு சரியான உயரத்தில் (3 அடி ) போடுங்கள் பூஞ்சை தொற்று   சூடோமோனஸ் அடுத்தது ஜூன் முதல் நவம்பர் வரை மழை பெய்ய கூடிய இந்த காலகட்டங

பூக்களும் பூ சார்ந்த தொழில்களும்

Flowers and flower-based business  தமிழ்நாட்டில் பெண்களையும் பூக்களையும் நம்மால் இரண்டாக பிரித்து பார்க்க முடியாது . எவ்வளவு விலை விற்றாலும் ஒரு 20 ரூபாய்க்காவது பூவை வாங்கி தலையில் வைத்து கொள்வார்கள் . ஒரு திருவிழா ஆகட்டும் அல்லது கல்யாணம் ஆகட்டும் பூக்களே முதலிடம் வகிக்கும் அந்த அளவிற்கு பூக்கள் நம் கலாச்சாரத்தோடு பின்னி பிணைந்தது .நாம் இந்த கட்டுரையில் பூக்கள் மற்றும் பூக்கள் சார்ந்த தொழில்களை பற்றி பார்ப்போம் . பூக்கள் சார்ந்த தொழில்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் 1) அழகு சார்ந்த பூக்கள்  2) உணவு சார்ந்த பூக்கள்   அழகு சார்ந்த பூக்கள் பொறுத்தவரை தமிழ்நாட்டில் மல்லிகை பூ , ரோஜா , சம்பங்கி , முல்லை , சாமந்தி , கனகாம்பரம்(கனகாம்பரத்தை பொறுத்தவரை மற்ற பூக்களை போன்று வாசனை இருக்காது ரோஜா போன்று அழகு இருக்காது அதன் நிறத்தை வைத்தே  அதிகம் தமிழ் நாட்டில் மூன்றாவதாக   அதிகம் விற்கப்படுகிறது  ) இந்த வகை பூக்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது .  அழகு சாதன பொருட்கள்  இன்றைக்கு உள்ள நிறைய அழகு சாதனா பொருட்கள் கெமிக்கல் ஆனது . நீங்கள் இயற்கையான பூக்களை வைத்து அழகு சாதன பொருட்கள் தயா

கோடை உழவும் அதன் நன்மைகளும்

Summer plowing and its benefits   பிப்ரவரி முடுஞ்சு மார்ச் மாதம் ஆரம்பிக்கும் இந்த காலகட்டத்துல அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் இந்த இரண்டு மாதங்களில் நாம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வேலை கோடை உழவு . இந்த கோடை உளவு என்பது மிக முக்கியமானது எல்ல காலகட்டத்திலும் விவசாய  நிலம்மாக இருக்க கூடாது , ஒரு காலகட்டத்திலாவது மண்ணை வளப்படுத்துவதும் மற்றும் சரிபடுத்துவதும் அடுத்த விவசாயத்திற்கும் தயார் செய்வதும் மிக முக்கியம் . இந்த கட்டுரையில் நாம் கோடை உழவை பற்றி பாப்போம்  இந்த கோடை காலத்தில் ஒரு நேரமாவது அல்லது குறைந்தபச்சம் ஒரு 15 நாளாவது நம்முடைய நிலத்தில் எந்த பணியும் செய்யாமல் சூடாக்கி ஒரு முறை படுத்துவது மிக முக்கியம் . அப்படி செய்வதில் முதன்மையானது நம் நிலத்தை உழுவது . இந்த நிலம் என்பது நீங்கள் ஏற்கனவே விவஸ்யம் செய்யும் நிலமாக இருக்கலாம் அல்லது ஒரு போகம் செய்யும் மானாவாரி நிலமாக இருக்கலாம் அல்லது நீண்ட காலமாக பராமரிக்காத தரிசு நிலமாக இருக்கலாம் அது ஏதுவாக இருந்தாலும் அதாவது நெல் போடுற நிலத்திலிருந்து பண்படாத நிலம் வரையிலும் இந்த காலகட்டத்தில் உழுவது மிக முக்கியம் . நீங்கள் உழ

ஆடு வளர்ப்பு - ஆடுகளை சந்தையில் வாங்கப்போறீங்களா இதையெல்லாம் கட்டாயம் கவனிங்க

Goat rearing  -    If you are going to buy goats in the market, you must pay attention to all these       விவசாய உப தொழில்களில் முக்கியமானது ஆடு வளர்ப்பு. நீங்களும் , ஆடு வாங்கி வளர்க்கலாம்னு ஆசை இருந்தா சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் . நீங்கள் சந்தையில் ஆடுவாங்க முடிவு செய்துவிட்டால் வாங்க வேண்டிய அட்டை சற்று தூரத்தில் நின்று கவனிக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆடுகள் நன்றாக நடக்கிறதா அல்லது காலில் ஏதாவது அடிபட்டு இருகிறதா என்று தெரியும் . ஆடுகள் மேயும் போது முற்களோ அல்லது குச்சியோ குத்தி கண்பார்வை குறைவாக உள்ள வாய்ப்புள்ளது இதனை கண்டறிய உங்கள் ஆல்காட்டி விரலை ஆட்டின் கண்களை குத்துவதுபோல் செல்லுங்கள் ஆடு கண்களை திருப்பிக்கொண்டாள் கண்கள் நல்ல நிலையில் உள்ளன . ஆடுகளின் உதட்டில் கொப்புளங்கள் இருந்தால் அது ஆட்டம்மையின் அறிகுறிகளாக இருக்கலாம் , மருவா கொப்பளமா என்று சரியாக பார்த்து வாங்கவேண்டும் .ஆடுகள் முடியை தடவி பார்க்கும்பொழுது சொறி சிரங்கு போன்றவை இல்லாமல் இருக்கவேண்டும் . ஆடு வாங்கும் போது அதன் கழிவு எப்படி இருகின்றது என்று கொஞ்சம் இருந்து பாருங்கள் ந

தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை சுருள் பூச்சி- உயிரியல் கட்டுப்பாடு

coconut cultivation - rugose pest  management   தென்னை விவசாயிகள் கடந்த சில வருடங்களாக அதிகம் உச்சரிக்கும் வார்த்தை ரூகோஸ் என்ற வெள்ளை சுருள் பூச்சி. இதன் தாக்கம் தென்னையில் பெருமளவு மகசூலை குறைத்திருக்குகிறது அதே சமயம் தென்னை மட்டுமின்றி  வாழை மற்றும் சப்போட்டா போன்ற பழப்பயிர்களையும் தாக்குகிறது . இந்த வெள்ளை சுருள் பூச்சி தென்னை ஓலைகளில் பரவி வேகமாக இனப்பெருக்கம் செய்து தென்னை மரம் முழுவதும் பரவி ஓலையில் உள்ள சாற்றினை உறுஞ்சி ஒரு மெழுகு ஒரு தேன் திரவத்தை வெளியிடுகின்றன இது மட்டை முழுவதும் பரவி அதன் மேல் கேப்னோடியம் என்னும் கரும்பூஞ்சாணம் படா்கிறது. இதனால் ஒளிசேர்க்கை நடைபெறாமல் மரத்தின் சத்துக்கள் குறைவதுடன் தேங்காயின் அளவு மற்றும் தரம் குறைந்து மகசூலும் குறைகிறது அதே சமயம் பெரும்பாலும் இந்த பூச்சி குட்டை மற்றும் நெட்டை வீரிய ஒட்டு ரகங்களை அதிகம் தாக்குகிறது. கிரைசோபெர்லா இரை விழுங்கி   இந்த சமயத்தில் இந்த உயிரியல் முறை கட்டுப்பாடு மட்டுமே சிறந்த பலன்களை தருகிறது  இதன் தாள்களை ஸ்டாப்லர் பின் வைத்து தென்னை ஓலையில் பின் செய்துவிட்டால் மூன்றே நாட்களில் பொரித்து பெருமளவு இ