*நிலத்தில் அமில கார நிலை 7.5 மேலும் தண்ணீரில் உப்பின் அளவு 2.5 மேலும் இருக்கும் கலர் மற்றும் கடினத்தன்மை உள்ள நிலங்களில் மரங்கள் வளர்க்க கீழ்க்கண்ட முறைகளை கடைப் பிடிக்கலாம்*. தமிழகத்தில் உள்ள விவசாய பரப்பில் சுமார் 20 சதவீத நிலம் களர் மண்ணாக அல்லது உவர்மண் ஆகவுள்ளது. மண்ணில் உள்ள அமில கார நிலை 7.5 முதல் 8.5 வரை இருந்தால் அந்த மண் கால்சியம் சத்து அதிகம் உள்ள திரும்பவும் புனரமைக்க தகுந்த உவர் மண்ணாக உள்ளது. அதேசமயம் அமில கார நிலை 8.5 க்கு மேல் இருக்கும்போது களர் நிலமாக மாறி அவ்வகை மண்ணில் சோடியம் உப்பின் அளவு மிக அதிகமாகி விவசாய பணிகளுக்கு பயன்படுத்த இயலாத நிலையை உருவாக்குகிறது. இதனால் மேட்டுப்பகுதி நிலங்களிலும், தொழிற்சாலைகளுக்கு கீழுள்ள நிலங்களும், கடலோர பகுதிகளிலுள்ள நிலங்களும் களர் மண்ணாக வோ அல்லது உவர் மண்ணால் உள்ளது. இது விவசாயிகளுக்கு எந்தவிதமான லாபத்தையும் தருவதில்லை. இதனால் இவ்வகை நிலத்தில் சீமை கருவேலமரம் அடர்ந்து பயனற்ற தரிசாக உள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது பெய்யும் சிறிதளவு மழையைக் கொண்டு கூட இவ்வகை நிலங்களை மாற்ற முடியும். இவ்வகை நிலங்களில் உப்பின் அளவிற்க...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்