Skip to main content

Posts

Showing posts with the label Horticulture

சுவையான தக்காளி செடி வளர்ப்பு

tomato cultivation methods தக்காளி , வெங்காயத்திற்கு அப்புறம் நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் காய்கறி . நம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் சுவை நன்றாக இருக்கவேண்டுமென்றால் கெமிக்கல் விவசாயத்தை தவிர்த்து இயற்கை விவசாயத்தை செய்யலாம் . நமக்கு தேவையான தக்காளியை நாமே நம் வீட்டின் பின்புறத்திலோ அல்லது மாடியில வளர்க்கலாம் . நாம் இந்த கட்டுரையில் சுவையான தக்காளி செடியை எப்படி வளர்க்கலாம் என்று பார்க்கலாம் . நல்ல தக்காளி கன்று மற்றும் ரகத்தை  தேர்ந்தெடுங்கள்  மிகவும் ஒல்லியான கன்றை தேர்ந்தெடுக்க வேண்டாம் , உயரமான தக்காளி கன்றை தவிர்த்து கொஞ்சம் சின்ன தக்காளி நாற்றுகளை தேர்வுசெய்யலாம் . அதிக வேர்கள் உள்ள செடியையும் தவிர்த்துவிடுங்கள்  . அல்லது விதைகள் வாங்கி நேரடியாக கூட விதைக்கலாம் . தக்காளியை பொறுத்தவரை நூறுக்கு மேற்பட்ட ரகங்கள் உள்ளன உங்கள் தேவைக்கேற்ப அதை தேர்ந்தெடுக்கலாம் வெளிச்சம்  நீங்கள் வீட்டுத்தோட்டத்தில் தக்காளி செடியை வளர்க்க குறைந்தது 6 மணி நேரம் சூரிய வெளிச்சம் உள்ள பகுதியை தேர்ந்தெடுங்கள் . இதனால் அதிக தக்காளி பழங்கள் வருவதோடு நல்ல சுவையாகவ...

உலகின் மிக விலையுயர்ந்த 6 மலர்கள்

expensive flowers in the world இயற்கை  கொடுத்த பெரிய பரிசு தாவரங்கள் , அந்த தாவரங்கள் நமக்கு கொடுத்த பரிசு பூக்கள் , இந்த பூக்கள் அழகான வடிவமைப்பை கொண்டது , தாவரங்களை பொறுத்தவரை அதுதான் மறு உற்பத்தி செய்வதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது . ஆதி காலத்திலிருந்தே பூக்களின் அழகு, நிறம் , வாசணை , தோற்றத்திற்காக பயன்படுத்தப்படுகிறது . பூக்கள் எப்பொழுதுமே அன்பின் அடையாளம் , கடவுள் சார்ந்த நம்பிக்கை ஆக பார்க்கப்படுகிறது . இன்றய நாட்களில் காய்ந்த பூக்கள் கூட வருமானம் கொடுக்கிறது . பூக்கள் எதர்க்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது  பொக்கே செய்வதற்காக நாம் பூக்களை பயன்படுத்துகிறோம்  ( expensive flowers bouquet) நாம் வீட்டில் பூக்கள் நிறைந்த தோட்டத்தை பார்க்கும்போது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் , நம் வீட்டிற்கு பறவைகள் , பட்டாம்பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் . காய்ந்த மலர்களை வைத்து நம் வீட்டில் நீண்டநாள் வரும்படியான அலங்காரம் செய்யலாம் . வண்ண சாயங்கள் தயாரிப்பதற்கு பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன   பண்டைய காலத்திலிருந்தே பூக்கள் இருந்து மருந்துகள் தயாரிக்க படுகின்றன . சில ...

கதறி லாபாக்ஷ்சி நிலக்கடலை 1812 சாகுபடி

groundnut oil production variety Kadiri Lepakshi 1812 இந்த நிலக்கடலை ரகம் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் உள்ள விவசாய கல்லூரியில் கதறி என்கிற இடத்தில் உருவாக்கப்பட்ட ரகம் நிலக்கடலையில் பல ரகங்கள் இருந்தாலும் இந்த 1812 ரகம் தமிழ் நாட்டில் பெரும்பான்மையான விவசாயிகளால் பயிரிடப்படுகிறது .  சிறப்பு தன்மை  இந்த 1812 நிலக்கடலை ரகம் அணைத்து வகையான மண் வகைகளிலும்  மற்றும் கால நிலையிலும் மானாவாரியாக இருந்தாலும் சரி இரவையாக இருந்தாலும் சரி  பயிரிட ஏற்ற ரகம். இது சிறிய வகை ரோஸ் பருப்புகளை கொண்டது ஆங்கில எழுத்து b வடிவத்தில் இருக்கக்கூடியது . இரண்டு பருப்புகளை கொண்ட இந்த ராகத்தில் அதன் நுனி கூர்மையாக இருக்கும் . அதிகமான என்னை அதாவது 51 % என்னை கொண்டது ஒரு ஏக்கரில் 500 கிலோ எண்ணெய் பிழிந்து எடுக்க முடியும் என்பது இதன் சிறப்பு . இந்தியாவில் இருக்கற மற்ற கடலை ரகங்களை விட இந்த ரகத்தில் மானாவாரியில் இரவையிலும்   அதிகம் மகசூல் கிடைக்கும்  மானாவாரியில் அதிகபச்சமாக 1600 கிலோவும் இரவையில் அதிகபச்சமாக 2200 கிலோ வரையிலும் ஒரு ஏக்கருக்கு கிடைக்கிறது . இந...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...

வீட்டுத்தோட்டம் கவனிக்க வேண்டிய 8 விஷயங்கள்

Home And Garden  வீட்டுத்தோட்டம் vs மாடித்தோட்டம் . விவசாயம் விதை மற்றும் கன்றுகள் ,உயிர் உரங்கள் , வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் கிடைக்கும் இடங்கள் பற்றிய விவரங்கள் -Click Here  வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் பற்றி குழப்பம் இருக்கலாம் . இங்கே மாட்டித்தோட்டம் என்பது நீங்கள் உங்கள் செடிகளை மாடியில் மட்டுமே வளர்த்தால் அது மாடித்தோட்டம் . அதுவே நீங்கள் வீட்டின் முன்னாலோ அல்லது பின்னாலோ உள்ள காலியிடத்தில் உங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வளர்த்தால் அது வீட்டுத்தோட்டம் . கிராமம் , சிறுநகரம் , நகரம் இந்த வீட்டுத்தோட்டம் அதிகம் இருக்கிறது அதுவே , பெரு நகரங்களில் பெரும்பாலும் மாடித்தோட்டங்களே அதிகம் உள்ளன . நாம் இந்த கட்டுரையில் நீங்கள் வீட்டுத்தோட்டம் ஆரம்பிக்கப்போகிறீகள் அதில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம் . 1) முதலில் உங்கள் வீட்டை சுற்றி எவ்வளவு இடம் உள்ளது என்று பாருங்கள் . அரை செண்டிற்கு குறைவாக இருந்தாலும் சரி இரண்டு அல்லது மூன்று சென்ட் நிலமாக இருந்தாலும் சரி நீங்கள் முதலில் முடிவு செய்யவேண்டியது என்னவி...

ஏன் விதை பரிசோதனை செய்யவேண்டும்

Why Seed Testing இன்று உணவு உற்பத்தியில்‌ தன்னிறைவு பெற்றுள்ளோம்‌ எனில்‌ அதற்கு காரணம்‌ உழவர்களுக்கு நல்ல தரமான விதையை உரிய காலத்தில்‌ விநியோகித்ததே என்று கூறினால்‌அது மிகையாகாது. நல்ல தரமான விதையானது இந்தியஅரசால்‌ நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விதை சான்றளிப்புத்‌தரத்திற்கு ஏற்ற புறத்தூய்மை, இனத்தூய்மை, முளைப்புத்திறன்‌ மற்றும்‌ விதையின்‌ நலத்துடன்‌ கூடிய வீரியம்‌ கொண்டிருக்கவேண்டும்‌.  விதை உற்பத்தி விநியோகம்‌ போன்ற முக்கியமான திட்டத்தில்‌ விதைப்பரிசோதனை என்பது தவிர்க்க முடியாத ஒன்‌றாகும்‌. உற்பத்தி செய்யப்பட்ட விதைகள்‌ நல்ல தரமான விதைகளா என்பதைக்‌ கண்டறிய மேற்கொள்ளப்படும்‌ உத்திகளே விதைப்பரிசோதனையாகும்‌. விதைப்பரிசோதனை என்பது விதைகளின்‌ தரத்தை விஞ்ஞான பூர்வமாகத்‌ தெரிந்து கொள்ளஉதவுவதுடன்‌ உற்பத்தி செய்யப்பட்ட விதை தரமானதா என்றுகண்டறியவும்‌ உதவுகின்றது. தரமான விதைகளின்‌ பயன்பாடு 15 - 20 சதம்‌ அதிகமான விளைச்சலுக்கு வழிவகுக்கின்றது. விதைப்பரிசோதனையின்‌ பயன்கள்‌ 1. விதைப்பதற்கு உதவியாக விதைகளின்‌ தரம்‌ நிர்ணயிக்கப்‌படுகிறது. 2. விதைத்தரத்தில்‌ ஏற்படும்‌ பிரச்சனைகளையும்...

தக்காளியை வீணாக்காமல் எப்படி உலர் பழத்துண்டுகள் தயாரிக்கலாம்

Tomato cultivation in india - tomato value-added -dry fruit tomato  100 க்கும் மேற்பட்ட விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த வாட்ஸ் ஆப் குரூப் இணைந்து பயன்பெறுங்கள் Click Here  நம்‌ உணவில்‌ அன்றாடம்‌ பயன்படுத்தக்கூடிய காய்கறிகளில்‌ தக்காளி முக்கிய பங்குவகிக்கிறது. தக்காளி இல்லாமல்‌ குழம்பு என்பது சாத்தியமற்றது. அப்படிபட்ட தக்காளி அதிகமாக கிடைக்கும்‌ காலங்களில்‌ ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு கூட விற்க முடியாமல்‌ விவசாயிகள்‌ கீழே கொட்டும்‌ அவலம்‌ இன்று வரை தொடர்கிறது. இந்த நிலை மாற நம் விவசாயிகளே தக்காளியிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுகள்‌ தயாரித்து விற்கலாம்‌. நம்‌ அரசாங்கமும்‌ வேளாண்‌ வணிகத்துறை மூலம்‌ நிறைய உழவர்‌ உற்பத்தியாளர்‌ குழுக்களை உருவாக்கி விவசாயிகளையே வியாபாரிகளாக மாற்றும்‌ முயற்சியில்‌ ஈடுபட்ட வருகின்றது. இம்மாதிரியான குழுக்கள்‌ தக்காளியிலிருந்து மற்றும்‌ மதிப்பூட்டப்பட்ட உணவுகள்‌  தயாரித்து விற்று இலாபம்‌ பெறலாம்‌. தக்காளியிலிருந்து சாஸ் மற்றும் ஊறுகாய் தயாரிக்கலாம் என்றாலும் உலர் தக்காளி பழ துண்டுகள் தயாரித்தால் நீங்கள் தக்காளி பழமாகவே நான்கு மாதங்களுக...

வாழை ஏன் அடிப்பகுதியில் வெடிக்கிறது

Why the banana explodes at the base கால்நடை மற்றும்  விவசாயம் சார்ந்த 100 மேற்பட்ட  வாட்ஸ்அப் குழு உள்ளன   click here   இதறகு முக்கிய கரணம் என்றால் அது வெப்ப நிலை மாற்றம்தான் எங்கே அல்லது எந்த பகுதியில் அதிகமாக வெப்பம் அதிகமாக இருக்கிறதோ அங்கே வாழையின் அடிப்பகுதி வெடிக்கும் . இப்படி அடியில் வெடிப்பது பாக்கு மரம் , வாழை மற்றும் மென்மையான அடிப்பகுதி கொண்ட மரங்களில் அடிப்பகுதியில் வெடிப்பு வரும் .  அதாவது மதியநேரத்து வெயில் 1 மணி முத்துல 4 மணிவரை கடுமையாக இருக்கும் அந்த நேரத்தில் யு வி கதிர்களின் தாக்கம் அதிகம் இருக்கும் இதனால் வாழையின் அடிப்பகுதி கிழியும் கிழிந்த இடத்தில் பூஞ்சை தொற்று உண்டாகி வெடிப்பு பெரிதாகும்  இதனை கட்டுப்படுத்த இலைகள் பெருகுகிற மாதிரியான அமைப்பில் நாம் வளர்த்திருக்க வேண்டும் . தரையில் ஊடு பயிர் போடலாம் . இதை உடனடியாக செய்யமுடியாது . எனவே முதலில் தண்ணீர் அதிகம் இருக்கிற மாதிரி கொடுக்கவேண்டும் .   TAMIL NADU AGRICULTURE CONTACTS விவசாயம் விதை மற்றும் கன்றுகள் ,உயிர் உரங்கள் , வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் கி...

வாழையில் இலை சாகுபடிக்கு என்ன இயற்கை உரங்கள் கொடுக்கலாம்

Organic fertilizer for leaf banana cultivation வாழை பொறுத்தவரை காய்கள் மற்றும் பழங்கள் மட்டும் வருமானத்தை கொடுப்பதில்லை சரியாக திட்ட மிட்டால் இலையும் நல்ல வருமானத்தை கொடுக்கும் . இலைக்காக  பயிரிட படும் ரகங்கள் என்று பார்த்தால் பூவன் சிறந்தது அடுத்ததாக கற்பூரவள்ளி மற்றும் மொந்தன் வாழை ரகங்களை இலைக்காக பயிர்செய்யலாம் . வாழை பற்றிய மற்ற கட்டுரைகள் Click Here  வாழை இலைக்காக பயிர் செய்யும் போது மூன்று விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். காற்று இலையையோ அல்லது மரத்தையோ சுலபமாக சாய்க்க கூடியது . முடிந்த அளவு அதிக கற்று அடிக்கும் பகுதிகளில் தவிர்ப்பது நல்லது . காற்று தடுப்பாக வரப்பு ஓரங்களில் உள்வரிசையில்  அகத்தி , கிளரிசிடியா போன்ற மரங்களையும் வெளி வரிசையில் சவுக்கு , யூக்கலிப்டஸ் மரங்களை நடலாம் . இடைவெளி  இலைகள் நன்றாக விரிவடைந்து வளர சூரிய ஒளி முக்கியம் எனவே வாழையை நெருக்கமாக நடாமல் தேவையான இடைவெளி விட்டு நடலாம்  இயற்கை உரங்கள்  இலைக்காகத்தான் நாம் வாழை பயிர் செய்கிறோம் என்றால் தழை சத்துதான் மிக முக்கியம் மற்றும் இலை நன்றாக பிடித்து வளர வேண்டுமென்றால் கால்சியம் ச...

மாமரத்தில் பூச்சி தாக்குதல் - cultivation of mango

cultivation of mango பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நீண்ட காலா அடிப்படையில் நாம் முயற்சிகள் எடுக்க வேண்டும் . அதாவது செப்டம்பர் மாதத்தில் இருந்தே வேலமர பட்டை கரைசல் , அக்னிஅஸ்திரம் ,கற்பூரக்கரைசல் இதில் ஏதாவது ஒன்றை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து கொண்டே வரவேண்டும் . மாமரம் பற்றிய மற்ற கட்டுரைகள் - Click Here  ஜூன் ஜூலை மாதங்களில் மாதம் ஒரு முறை தெளிக்கலாம் . அதுவே அக்டோபர் மாதத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம் இப்படி செய்வதால் பெரிய குறைபாடுகளில் இருந்து தப்பிக்கலாம் . அதிகப்படியான பூச்சிகளிடம் இருந்து மாம்பழத்தை காப்பாற்ற பெவேரியா பேசியானா வெர்டிசீலியம் லக்கானி இரண்டு திரவத்தை வாங்கி 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து 1 வது மற்றும் 10 அல்லது 12 வது நாள் தெளிக்கலாம் . உங்களால் ஒரு முறைதான் தெளிக்க முடியும் என்றால் 75 மில்லி கலந்து தெளிக்கலாம் . மேலிருந்து நன்றாக நனைத்து விட்டு தெளிக்க வேண்டும்  மாம்பிஞ்சு உதிர்வு எப்படி கட்டுப்படுத்தலாம்   G.M Smart Vivasayi E-mail - imperialhorticulturetips@gmail.com Contact- +919003395600