Skip to main content

Posts

Showing posts with the label Flowers

மாடி தோட்டத்தில் ரோஜா செடி வளர்க்கும் போது கவனிக்க வேண்டியவை

மாடி தோட்டத்தில் ரோஜா செடி மாடி தோட்டத்தில் ரோஜா செடி வளர்க்கும் போது ஒரு சில சின்னச் சின்ன விஷயங்களை நீங்க கவனம் எடுத்து  செய்தால் செடியும் நல்லா வளரும் பூக்களும் வந்து நிறைய பூக்கும் பொதுவா மாடித்தோட்டத்தில் தொட்டியில் செடி வச்சிருக்கீங்க அப்படின்னா தண்ணீர்  அடிக்கடி கொடுக்கக்கூடாது ஒரு மூணு நாளைக்கு ஒரு தடவையோ அல்லது நாலு நாளுக்கு ஒரு தடவையோ டம்ளர்ல  தண்ணீர்   கொடுக்கணும் உங்களுக்கு ஒருவேளை தினசரி தண்ணீர்  கொடுக்கணும்  நினைச்சீங்கன்னா காலை வேளையில்  டம்ளரில் அரை டம்ளர் தண்ணீர் வந்து உங்களுடைய ரோஜா செடிக்கு  கொடுக்கலாம் . இதை மாலைவேளையில் செய்யக்கூடாது ஏன் எனில் காலைவேளையில் நீர் கொடுக்கும்போது செடி நீர் எடுத்து போக மீதம் ஆவியாக போய்விடும் . டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சை தொற்று மற்றும் செடிகளில் இருந்து இலைகள் வந்து படுகிறது போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கு சூடோமோனஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி. இதில் சூடோமோனஸ் ஒரு தொட்டிக்கு 20 கிராம் என்ற அளவில் 15 நாளைக்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ  தண்ணீரில் கலந்து வேர் பகுதிகள...

உலகின் மிக விலையுயர்ந்த 6 மலர்கள்

expensive flowers in the world இயற்கை  கொடுத்த பெரிய பரிசு தாவரங்கள் , அந்த தாவரங்கள் நமக்கு கொடுத்த பரிசு பூக்கள் , இந்த பூக்கள் அழகான வடிவமைப்பை கொண்டது , தாவரங்களை பொறுத்தவரை அதுதான் மறு உற்பத்தி செய்வதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது . ஆதி காலத்திலிருந்தே பூக்களின் அழகு, நிறம் , வாசணை , தோற்றத்திற்காக பயன்படுத்தப்படுகிறது . பூக்கள் எப்பொழுதுமே அன்பின் அடையாளம் , கடவுள் சார்ந்த நம்பிக்கை ஆக பார்க்கப்படுகிறது . இன்றய நாட்களில் காய்ந்த பூக்கள் கூட வருமானம் கொடுக்கிறது . பூக்கள் எதர்க்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது  பொக்கே செய்வதற்காக நாம் பூக்களை பயன்படுத்துகிறோம்  ( expensive flowers bouquet) நாம் வீட்டில் பூக்கள் நிறைந்த தோட்டத்தை பார்க்கும்போது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் , நம் வீட்டிற்கு பறவைகள் , பட்டாம்பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் . காய்ந்த மலர்களை வைத்து நம் வீட்டில் நீண்டநாள் வரும்படியான அலங்காரம் செய்யலாம் . வண்ண சாயங்கள் தயாரிப்பதற்கு பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன   பண்டைய காலத்திலிருந்தே பூக்கள் இருந்து மருந்துகள் தயாரிக்க படுகின்றன . சில ...

காய்ந்த பூக்களில் எப்படி வருமானம் பார்க்கலாம்

Dried flower business ideas நம் வாழ்க்கையில் உணர்வுகளுக்கோ அல்லது உணர்ச்சிகளுக்கோ பூக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ளது . நம்முடைய காதலை வெளிப்பதுதலாகட்டும் , நம்முடைய நன்றியை வெளிப்படுவதாகட்டும் , சந்தோசம், துக்கம் அனைத்தையும் வெளிப்படுத்துவதற்கு உதவுவது பூக்களே . நம்முடைய வாழ்க்கையில் பூக்கள் அனைத்திற்குமே தேவைப்படுகிறது , காலையில் கடவுளுக்கு பூ வைப்பதிலிருந்து அணைத்து மத திருவிழாக்களுக்கு , கல்யாணம் இப்படி பூக்கள் இந்தியாவை வருடத்திற்கு 800 டன் பூக்கள் பயன்படுத்தப்படுகிறது  அக்ரி பிசினஸ் பற்றிய மற்ற கட்டுரைகள் Click here ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 8 லச்சம் பூக்கள் வீணாக்கப்படுகிறது . இப்படி காய்ந்து போன பூக்களையோ அல்லது வீணாக கொட்டப்படும் பூக்களை வைத்து என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். Dry Flowers Arrangement சிலவகையான பூக்கள் காய்ந்தாலும் அழகாக இருக்கும் அதன் நிறமும் மாறாமல் இருக்கும். Helichrysum, Delphinium, Helipterum, Amaranthus, Nigella, Carathmus, Gypsophilla போன்ற பூக்களை பயன்படுத்தி தயாரிக்கலாம் . இதை வீட்டை அலங்கரிக்கவும் , முக்கிய...

பூக்களும் பூ சார்ந்த தொழில்களும்

Flowers and flower-based business  தமிழ்நாட்டில் பெண்களையும் பூக்களையும் நம்மால் இரண்டாக பிரித்து பார்க்க முடியாது . எவ்வளவு விலை விற்றாலும் ஒரு 20 ரூபாய்க்காவது பூவை வாங்கி தலையில் வைத்து கொள்வார்கள் . ஒரு திருவிழா ஆகட்டும் அல்லது கல்யாணம் ஆகட்டும் பூக்களே முதலிடம் வகிக்கும் அந்த அளவிற்கு பூக்கள் நம் கலாச்சாரத்தோடு பின்னி பிணைந்தது .நாம் இந்த கட்டுரையில் பூக்கள் மற்றும் பூக்கள் சார்ந்த தொழில்களை பற்றி பார்ப்போம் . பூக்கள் சார்ந்த தொழில்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் 1) அழகு சார்ந்த பூக்கள்  2) உணவு சார்ந்த பூக்கள்   அழகு சார்ந்த பூக்கள் பொறுத்தவரை தமிழ்நாட்டில் மல்லிகை பூ , ரோஜா , சம்பங்கி , முல்லை , சாமந்தி , கனகாம்பரம்(கனகாம்பரத்தை பொறுத்தவரை மற்ற பூக்களை போன்று வாசனை இருக்காது ரோஜா போன்று அழகு இருக்காது அதன் நிறத்தை வைத்தே  அதிகம் தமிழ் நாட்டில் மூன்றாவதாக   அதிகம் விற்கப்படுகிறது  ) இந்த வகை பூக்கள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது .  அழகு சாதன பொருட்கள்  இன்றைக்கு உள்ள நிறைய அழகு சாதனா பொருட்கள் கெமிக்கல் ஆனது . நீங்கள் இயற்...

கோடையில் மலர்கள் பராமரிப்பும் பாதுகாப்பும் செய்ய வேண்டியவை என்ன

What to do for the care and protection of flowers in the summer மல்லிகை பூ  (Jasmine) மல்லிகை செடி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூக்க துவங்கும் . செடிகளை முதலாண்டில் நட்டு பூக்கள் மகசூல் எடுத்திருந்தாலும் இரண்டாவது ஆண்டிலிருந்துதான் ஒரு அளவான மகசூல் இருக்கும் நல்ல வளர்ச்சியான மொட்டுக்களை அதிகாலையில்தான் பறிக்கவேண்டும் . இந்த நேரத்தில் மொட்டில் அல்லது இளம் மொட்டில் புழுக்களின் தாக்கம் அதிகம் இருக்கும் இதனை கட்டுப்படுத்த 10 லிட்டருக்கு 50 மில்லி பெவேரியா பேசியான தெளிக்கலாம் . கனகாம்பரம் பூ (Kanakambaram flower) பெதுவாக இந்த காலகட்டத்தில் கனகாம்பரத்தில் அசுவினி பூச்சிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஒன்றுடன் ஓன்று ஒட்டி ஒரு அடைபோல் ஒட்டி சாற்றினை உறுஞ்சி எடுத்துவிடும்  இதை கட்டுப்படுத்த வெர்டிசிலியம் லக்கானி 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம் .  அடுத்து வாடல் நோய் கனகாம்பர பூச்செடியில் தென்பட்டால் சூடோமோனஸ் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து கொடுக்கவேண்டும் .  முல்லை பூ  இந்த காலகட்டத்தில் இலை தின்னும் புழுக்களின் தாக்கம் இருக்கும் அதனை கட்...

சம்பங்கி கிழங்கு விதை நேர்த்தி

Sampangi seed treatment  சம்பங்கி கிழங்கு பொறுத்தவரை இடைவெளி வரிசைக்கு வரிசை ஒன்றை அடியும் பயிருக்கு பயிர் முக்கால் அடி (அதாவது 20 சென்டிமீட்டர் ) நடலாம் . நம்முடைய நடவுமுறையில் ஓவுவொரு கிழங்கும் 30 கிராம் அளவுள்ள ஒரே மாதிரியான கிழங்குகளை எடுத்து கொள்ளலாம் . கிழங்கோட சைசில் மிகவும் சின்னதாக உள்ளதெல்லாம் ஒதுக்கிவிடவேண்டும் அதேபோல உடைந்தது , அழுகியது, கிழிந்த மற்றும் பூஞ்சாணம் புடித்த  கிழங்குகளை நீக்கி விடவேண்டும் . இந்த சம்பங்கி கிழங்குகளை ஒரு ட்ரம்மில் ஒரு உத்தேசமா 100 லிட்டர் தண்ணீருக்கு , அதாவது  1 கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் , 30 கிராம் அசோஸ்பைரில்லும் , இந்த அளவுக்கு தண்ணீரில் கலந்து கொள்ளவேண்டும் அதில் இந்த கிழங்குகளை போட்டு குறைந்தபச்சம் 5 முதல் 10 நிமிடம் இருந்தால் போதும் அதை எடுத்து நிழலில் காயவைத்து விதைக்கலாம் ( உதாரணமாக இன்று 10 மணிக்கு விதைக்க போகிறீர்கள் என்றால் காலை 6 மணியில் இருந்து செய்தால் நன்றாக இருக்கும்  வயலில் பார் பிடித்திருப்போம் பாரோட பக்கவாட்டு பகுதியிலிருந்து தரையிலிருந்து சுண்டு விரல் உயரத்தில் நடலாம். விதைநேர்த்திக்கு பயன்படுத்திய ந...

இயற்கை முறை சாமந்தி பூ பயிர் மேலாண்மை

Natural method marigold crop management உலகம் முழுவதும் , வருடம் முழுவதும் பயிர் செய்யக்கூடிய மலர்களில் சாமந்தி பூவும் ஓன்று . அதன் நிறம் மனதிற்குள் அதிக சந்தோசத்தை ஏற்படுத்துகிறது .இந்த பூவில் 33 வகைகள் உள்ளன . தமிழ்நாட்டில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது . காய்கறி பயிர்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க வரப்பு ஓரங்களில் பயிர் செய்யப்படுகிறது . தமிழ் நாட்டில் பயிர்செய்யப்படும் ரகங்கள் கோ1, கோ 2 மற்றும் எம்.டி.யு 1 இதில் கோ 1 , எம்.டி.யு 1 மஞ்சள் நிற பூக்களை கொடுக்கும் கோ 2 கருபழுப்பு  நிறத்தில் பூக்களை கொடுக்கும்  கார அமிலத்தன்மை 6 ல் இருந்து 7 வரை இருக்கலாம் எல்லா வகை மண் வகைகளில் வளர்க்கலாம் என்றாலும் நீர்தேக்கமுள்ள வடிகால் வசதி குறைவாக உள்ள களிமண் நிலங்கள் சாமந்தி பூவிற்கு ஏற்றது. பகல்  பொழுது குறைவாகவும் இரவு நீண்டதாகவும் உள்ள காலங்களில் நன்றாக பூக்கும் . நிலத்தை  குறைந்தது மூன்று முறை உழவேண்டும் கடேசி உழவின் போது இருபத்தைந்து டன்  தொழு உரம் போடவேண்டும். நேரடி விதைப்பை விட நாற்று பாவி வயலில் நடுவது  நல்லது செடிக்...

ரோஜாக்களின் நிறமும் அதன் நோக்கங்களும்

The color of roses and its purposes ரோஜா பூக்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது , மற்ற பூக்களை விட ரோஜா பூவிற்கு அதிக நறுமணம் உண்டு . உலக சந்தையை பொறுத்தவரை அழகான பூக்களின் விற்பனை  கடந்த ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது . இது பூ உற்பத்தி மற்றும் அதிலிருந்து என்னை எடுப்பதை காண்பிக்கிறது . நாம் பேசும் மொழியின் நுணுக்கங்கள் இப்போது பெரும்பாலும் மறந்துவிட்டன, ஆனால் ரோஜாக்கள் இன்னும் உணர்ச்சி, காதல், பாசம், நல்லொழுக்கம் மற்றும் கற்பு, நட்பு அல்லது பக்தி போன்றவற்றைக் இன்னும் காண்பித்து கொண்டிருக்கின்றன . ரோஜாக்களின் ஓவுவொரு வண்ணமும் ஒன்றை குறிக்கும் அவற்றை பற்றி பாப்போம்  வெள்ளை ரோஜா  திருமணத்தை குறிக்கும் , கல்யாணத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது அதை தவிர்த்து அன்னையர் தினத்தை கொண்டாடவும் மற்றும் மரியாதை செலுத்தவும் இந்த நிற ரோஜாக்கள் பயன்படுத்தப்படுகின்றன  ஆரஞ்சு ரோஜா  உங்கள் மனைவிக்கோ அல்லது காதலிக்கோ உங்களுடைய அதீத அன்பை வெளிப்படுத்த இந்த நிற ரோஜாவை கொடுக்கலாம்  பீச் ரோஸ்  நேர்மை, நன்றியுணர்வு, நட்பு மற்றும் பாராட்டு ஆகியவற்றின் அடையாளமாகும். “ஒரு ஒ...

மல்லிகை பூ கவாத்து முடிந்தவுடன் செய்ய வேண்டியது

What to do after the jasmine flower pruning is over சூடோமோனஸ் 10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் கலந்து தெளிக்கவேண்டும் . ஓவுவொரு தூருக்கும் 5 மில்லி அல்லது 10 மில்லி யாவது தூரில் இருக்கும்படி ஊற்றவேண்டும் , அதாவது 200 லிட்டருக்கு 1 லிட்டர் கலந்து அதுல ஒரு ஒரு லிட்டர் எடுத்து தூருக்கு ஊற்றிவிடவேண்டும் இரண்டையும் ஒரே நாளில் செய்யவேண்டும்  மல்லிகை செடியின் இலைகள் முழுமை அடையவேண்டும் இதில் இருந்து ஒருநாள் அல்லது இரண்டு நாள் விட்டு மாலை வேளையில் 10 லிட்டர் தண்ணீரில் 200 அல்லது 300 மில்லி பஞ்சகாவியா அல்லது ஏ.எம் கரைசல் மாலைவேளைகளில் தெளிக்கவேண்டும் இதை வாரத்தில் இரண்டு தடவை தெளிக்கவேண்டும் அதேபோல் தரை வழி 200 லிட்டருக்கு 1 லிட்டர் மீன் அமிலம் கலந்து ஒவ்வொரு பயிருக்கும் இரண்டு லிட்டர் ஊற்றி விடவேண்டும் . இந்த மாதிரி செய்வதால் மல்லிகை செடியின் இலைகள் முழுமை அடையவேண்டும். இலை பெருக்கம் அடைய அதாவது கவாத்து முடிந்து இதுயெல்லாம் முடிந்து இலை முழுமை அடைய 22 நாட்கள் ஆகும் அதன் பின்பு அரப்பு மோர் கரைசல் கொடுத்தால் பூ எடுக்க ஆரம்பிக்கும். அப்பவும் மீன் அமிலம் தரைவழி கொடுக்கவேண்டும் . எருக்கு இலை ...

வீட்டில் வளர்க்கக் கூடிய 10 பூச்செடிகள்

10 flowers that can be grown at home நம் வீட்டு தோட்டத்திலோ அல்லது மாடி தோட்டத்திலோ எந்த அளவிற்க்கு  காய்கறி வளர்கிறோமோ அந்த அளவிற்க்கு அழகுக்காகவும் ஆசைக்காகவும் வளர்க்கக்கூடியது பூக்கள் இப்படி சுலபமாகவும் ஆசையாகவும் வளர்க்ககூடிய பத்து பூக்களை பற்றி பார்ப்போம் . 1) ரோஜா  நிறைய பூக்கள் இருக்கிறது ஆனால் ஆசையாக வளர்க்கக்கூடிய பூக்களில் முதலில் இருப்பது ரோஜா பூக்கள்தான் . 100 க்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன உங்கள் பகுதியில் எந்த வகை வளரும் என்று தெரிந்து கொண்டு வளர்க்கலாம் . 2) மாரிகோல்டு     ஒருமுறை மட்டுமே பூக்ககூடிய பூவாகும் பொதுவா அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிகம் பூக்கும் இதன் நிறங்கள் நம் கண்களுக்கு அழகாக இருக்கும் (ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ). 3) ஜாஸ்மின்    மயக்கும் இனிமையான வாசனைக்காகவே இந்த பூக்கள் வளர்க்கப்படுகிறது. பொதுவாக அனைவராலும் வீட்டு தோட்டத்தில் வளர்க்கப்படுகிறது. 4) ஈஸ்ட் இந்தியா ரோஸ்பே இந்த பூ இந்தியாவை பூர்விகமாக கொண்டதாகும் . ஆயுர்வேத மருத்துவ பயன்பாட்டிற்க்காக அதிகம் வளர்க்கப்படுகிறது . இதன் வெள்ளைநிறம் உங்கள் தோட்டத்திற்கு ஒரு ...

செண்டு மல்லி பூஞ்சண நோய் தாக்குதலை கட்டுப்படுத்த

 To control the attack of chentu malli fungus செண்டு மல்லியில் இந்த காலகட்டத்தில் நவம்பர் , டிசம்பர்,ஜனவரி ,  மற்றும் பிப்ரவரி இந்த நான்கு மாதங்களில் அதிகமா வரக்கூடிய பிரச்சனை பூஞ்சாணம் நோய்தான் எந்த பூ பயிர்களுக்கும் இதுதான் அடிப்படையென்றாலும் செண்டுமல்லியில் சற்று கூடுதலாக இருக்கும் , ஏன்னென்றால் அதோட இலைகள் கரும்பச்சையாக  இருக்கும் , கொஞ்சம் நீர்குணம் அதிகமாக இருக்கும் அதேபோல் செண்டு மல்லி பூவிலும் நீர் தங்கியிருக்கும் அதனால் எளிமையா பூஞ்சாண நோய் தாக்கும்  தேவையான அளவு மட்டும் நீர் கொடுக்கவேண்டும் பத்து லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் 50 மில்லி பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் கலந்து தெளிக்கலாம் , இன்று தெளித்தால் பத்தாவது நாள் மறுபடியும் தெளிக்கவேண்டும் . இதேபோல் அரை லிட்டர் சூடோமோனஸ் , அரை லிட்டர் பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் தரை வழி  கொடுக்கவேண்டும் . வெர்ட்டிசீலியம் லக்கானி 10 லிட்டருக்கு நல்ல பொறுமையா செண்டு மல்லி செடி மீது  படுவதுபோல் நன்றாக  நனச்சுவிட்டு தெளிக்கவேண்டும் . தெளிவாக அட்டவணை  1 வது  நாள் சூடோமோனஸ் பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் தெளிக்கணும்  ...

துலக்கமல்லி (செண்டுமல்லி) பயிரிடும் முறை மற்றும் பயன்கள் - Cultivation method and uses of Tulakkamalli (Sentumalli)

Cultivation method and uses of Tulakkamalli (Sentumalli) செண்டுமல்லி வளர்ப்பதற்கு மணற்பாங்கான மண், களிமண் கலந்த மண் மிகவும் ஏற்றதாகும். சீரான மிதவெப்ப நிலை அவசியம். சமவெளி மற்றும் மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. துலக்கமல்லி எப்படி பயிரிடுவது…? இரகங்கள் : எம்.டி.யு 1, உள்ளூர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வகைகள், பூசா நரங்கி கெய்ன்டா, பூசா பசந்தி கெய்ன்டா ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. பருவம் துலக்கமல்லியை அக்டோபர் – ஜனவரி மாதங்கள் வரை பயிர் செய்யலாம். மண் மணற்பாங்கான மண், களிமண் கலந்த மண்ணுக்கு மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 6.0 முதல் 7.5 வரை இருக்கவேண்டும். விதையளவு ஒரு எக்டருக்கு 1.5 கிலோ விதைகள் தேவைப்படும். விதைநேர்த்தி விதைகளை 200 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும். நாற்றங்கால் தயாரித்தல் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கடைசி உழவின் போது மக்கிய தொழு உரம் இட்டு மண்ணோடு நன்கு கலக்கி விடவேண்டும். விதைநேர்த்தி செய்த விதைகளை 15 செ.மீ இடைவெளியில் வரிசையாக பாத்திகளில் விதைத்து மண் கொண்டு மூடி, உடனடியாக நீர்ப் பாய்ச்சவேண்டும். 7 நாட்களில் முளைப்...