வான்கோழிகளை 4 முறையில் வாளர்க்கலாம். புறக்கடை வளர்ப்பு: புறக்கடை வளர்ப்பு என்பது கிராமப்புறங்களில் விவசாயிகள் வீட்டுத் தோட்டங்களில் வான்கோழிகளை வளர்ப்பதைக் குறிக்கும். வீடுகளில் இருக்கும் நெல், அரிசி, குறுணை, கம்பு, சோளம், தவிடு, எஞ்சிய சமைத்த உணவு, சமையல் அறைக் கழிவுகள் ஆகியவை வான்கோழிகளுக்கு உணவாக அமைகின்றன. புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளுக்குத் தானியங்கள், கீரைகள், களைகள் போதுமான அளவு கிடைத்து விடும். ஆனால், புரதச்சத்து தேவை நிறைவு பெறாது. இதை ஈடுகட்ட கடலைப் பிண்ணாக்கு, எள்ளுப் பிண்ணாக்கு, சூரியகாந்திப் பிண்ணாக்கு இவற்றில் ஏதாவது ஒன்றினைத் தண்ணீரில் ஊறவைத்து இத்துடன் சிறிதளவு தவிடு வகையினைச் சேர்த்து கொடுக்க வேண்டும். ஒரே சமயத்தில் அதிகமாக வைக்காமல் சிறிது சிறிதாகத் தீவனம் வைக்க வேண்டும். மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு: வியாபார முறையில் வான்கோழிப் பண்ணை அமைத்திட, மேய்ச்சலுடன் கொட்டகை கட்டி வளர்க்கும் முறை, புறக்கடை முறையைவிடச் சிறந்ததாகும். ஒரு ஆண் வான்கோழிக்கு கொட்டகையில் 5-க்கு 6 சதுர அடியும், ஒரு பெட்டை வான்கோழிக்கு சுமார் 4-க்கு 4 சதுர அடியும் இடவசதி தேவைப்படும். இந்தக் க...