Skip to main content

Posts

Showing posts from December, 2022

Why should the palm tree grow

பனை மரம்  பனை மரம் என்று சொன்னவுடன் நமக்கு ஞாபகம்  வருவது கோடை காலத்தில் சாப்பிடும் நுங்கு சிலருக்கு சிறுவயதில் பனை மரம் ஏறியது  ஞாபகம் வரலாம் , சிலருக்கு அதன் மருத்துவ குணம் ஞாபகம் வரலாம் , சிலருக்கு தெய்வமாய் வழிபட்டது ஞாபகம் வரலாம் 90 - குழந்தைகளுக்கு ஒற்றை பனையில்  முனி பேய் இருந்தது ஞாபகம் வரலாம்  சிலருக்கு பனை விசிறி ஞாபகம் வரலாம் , சிலருக்கு பனை வெள்ளம் , சிலருக்கு பனை ஓலையில் செய்யப்பட்ட கொட்டான் கூட ஞாபகம் வரலாம் , ஏன் , பல நூற்றாண்டுகளாக நாம் பனை ஓலைகளில்தான் செய்திகளை பரிமாறி உள்ளோம் . அந்த அளவிற்கு  பனை நம் வாழ்வில் ஒன்றாக பின்னி பிணைந்தது , இந்த பனை மரத்தை பற்றி நாம் இந்த கட்டுரையில் பாப்போம் . பனை மனிதனோடு பயணம்  தமிழ் நாட்டின் மாநில மரமாக பனை இருக்கிறது , பனை பற்றி சற்று கூர்ந்து கவனித்தால் அது மனிதனின் வாழ்விட பகுதியை சுற்றியே காணப்படும் . தென்னையை போன்று காட்டு பகுதி அல்லது தீவு பகுதிகளிலோ இருக்காது அதே சமயம் இது பயிரிட படுவதில்லை , இயற்கையாகவே வளரக்கூடியது . ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட பனை ,அங்கு வாழ்ந்த ஆதி மனிதர்களால் பனை விதைகளை தங்கள் கைகளுடன் எடுத்து