groundnut oil production variety Kadiri Lepakshi 1812 இந்த நிலக்கடலை ரகம் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் உள்ள விவசாய கல்லூரியில் கதறி என்கிற இடத்தில் உருவாக்கப்பட்ட ரகம் நிலக்கடலையில் பல ரகங்கள் இருந்தாலும் இந்த 1812 ரகம் தமிழ் நாட்டில் பெரும்பான்மையான விவசாயிகளால் பயிரிடப்படுகிறது . சிறப்பு தன்மை இந்த 1812 நிலக்கடலை ரகம் அணைத்து வகையான மண் வகைகளிலும் மற்றும் கால நிலையிலும் மானாவாரியாக இருந்தாலும் சரி இரவையாக இருந்தாலும் சரி பயிரிட ஏற்ற ரகம். இது சிறிய வகை ரோஸ் பருப்புகளை கொண்டது ஆங்கில எழுத்து b வடிவத்தில் இருக்கக்கூடியது . இரண்டு பருப்புகளை கொண்ட இந்த ராகத்தில் அதன் நுனி கூர்மையாக இருக்கும் . அதிகமான என்னை அதாவது 51 % என்னை கொண்டது ஒரு ஏக்கரில் 500 கிலோ எண்ணெய் பிழிந்து எடுக்க முடியும் என்பது இதன் சிறப்பு . இந்தியாவில் இருக்கற மற்ற கடலை ரகங்களை விட இந்த ரகத்தில் மானாவாரியில் இரவையிலும் அதிகம் மகசூல் கிடைக்கும் மானாவாரியில் அதிகபச்சமாக 1600 கிலோவும் இரவையில் அதிகபச்சமாக 2200 கிலோ வரையிலும் ஒரு ஏக்கருக்கு கிடைக்கிறது . இந...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்