Skip to main content

Posts

Showing posts with the label வாழை சாகுபடி

வாழை சாகுபடி

வாழை சாகுபடியில் 4 விதமான நடவு முறைகள் உள்ளன ஒற்றை வரிசை முறை இரட்டை வரிசை முறை சதுர நடவு முறை முக்கோண வடிவ நடவுமுறை ஒற்றை வரிசை முறை இந்த முறையில், வரிசைகளுக்கு உள்ளே இடைவெளி குறைவு, வரிசைக்கு இடையே உள்ள இடைவெளி அகலமாக இருக்கும். இந்த முறை மூலம் நல்ல காற்றோட்டமும், ஈரமான இலைகள் விரைவில் உலரவும், பூஞ்சாண நோய் தாக்குதல் குறையவும் வாய்ப்புள்ளது. ஆனால், தோட்டத்தில் குறைவான எண்ணிக்கையில் மரங்கள் இருப்பதால் விளைச்சல் குறைந்துவிடும். இரட்டை வரிசை முறை இந்த முறையில், 2 வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளி 0.9 – 1.20 மீ மற்றும் மரத்திற்கு மரம் உள்ள இடைவெளி 1.2 – 2 மீ. இந்த இடைவெளியில் இடை உழவு செயல்களை எளிதாக செய்ய முடிகிறது. சொட்டுநீர்ப் பாசனத்திற்கு ஆகும் செலவும் குறைகிறது. சதுர நடவு முறை இந்த முறை பொதுவாக பின்பற்றப்படும் முறையாகும். இந்த முறையில் வாழைத் தோட்டத்தை வடிவமைப்பது எளிது. கன்றுகளுக்கு இடையே 1.8×1.8 மீ இடைவெளி தேவைப்படும். இந்த முறையில் கன்றுகளை சதுரத்தின் மூலைக்கு ஒன்றாக நடவேண்டும். நான்கு மரங்களுக்கு நடுவில் உள்ள இடைவெளியில் குறுகிய கால பயிர்களை பயிரிடலாம். முக்கோண நடவு முறை இந்த முறை...