Skip to main content

Posts

Showing posts with the label organic agriculture

இயற்கை வேளாண்மையில் வெற்றி பெற இந்த தாரக மந்திரத்தை பயன்படுத்துங்கள் .

How to start profitable organic farming  திட்டமிடல்   ஒரு இயற்கை விவசாயத்தின் முதன்மை மற்றும் அடிப்படை இதை தொடர்ந்த வெற்றி அனைத்துமே இந்த திட்டமிடலில்தான் உள்ளது . இன்றய காலகட்டத்தில் இயற்கை விவசாயத்தின் மேல் ஆர்வம் கொண்டு ஒரு பகுதி நேரமாவது விவசாயம் செய்ய வேண்டும் என்று உள்ளனர் . இவர்கள்தான் திட்டமிடல் பற்றி முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் . இயற்கை விவசாயத்தை பொறுத்தவரை சின்ன சின்ன விசயங்களில் கவனம் செலுத்தினாலே நம்மால் பெரிய அளவு ஜெயிக்க முடியும் . கொசு ,பூச்சிகளை விரட்டும் மற்றும் உண்ணும் தாவரங்கள் பற்றி தெரியுமா நுண்ணுயிர்கள்    நீங்கள் எவ்வளவுதான் இயற்கை உரங்கள் போட்டாலும் இந்த நுண்ணுயிரிகள் இருந்தால்தான் பயிர்களுக்கு ஏற்ற வடிவத்தில் தங்களுக்கான சத்தை எடுத்துக்கொள்ள முடியும் . நுண்ணுயிரிகளை அதிகரிக்க தொழு உரங்களை போடலாம் , அசோஸ்பைரில்லம் ,பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றை இடலாம் . நிலவளம்  இயற்கை விவசாயத்தின் முதல் தேவை நிலவளம் . இந்த நிலவளத்தை மேம்படுத்த தொழு உரம் போடலாம் , கோடை உளவு செய்து நிலத்தை பண்படுத்தலாம் , பசுந்தாள் உரப்பயிர்கள் , எண்ணெய்வித்து...

ஆர்கானிக் விவசாயி - 4

எந்தெந்த நாடுகளுக்கு சான்றிதழ் கொடுக்கிறார்கள் என்று பார்த்தோம் அடுத்ததாக வேளாண்மை பொருட்களை பற்றி பார்ப்போம் .   பயிர் உற்பத்தி   ( crop production)                    விவசாயம் சார்ந்த அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் சான்றிதழ் கொடுக்கப்படுகிறது . தேன் (Honey)   பால் மற்றும் கால்நடை பொருட்கள் (Dairy and other Livestock products) மேலும் காடுகளில் இருந்து பெறப்படும் பொருட்களுக்கும் Forest collection) TNOCD இருந்து   அங்ககச் சான்றிதழ் கொடுக்கப்டுகிறது .              சரிங்க இப்ப அங்ககச் சான்றிதழ் பற்றி புரியும் நினைக்கிறேன். இப்ப நாம அடுத்த கட்டத்தை பாப்போம் , நீங்க இயற்கை விவசாயம் பண்ணனும்னு முடிவு   செய்தால் , ஆரம்பிப்பதற்கு முன்பு சில வேலைகள் செய்ய வேண்டும் அவற்றை பற்றி பார்ப்போம் .         அங்ககச் சான்றிதழ் வாங்குவதற்கு நீங்கள் TNOCD இல் பதிவு செய்ய வேண்டு...

ஆர்கானிக் விவசாயி - 3

             NPOP என்றால் என்ன எந்த பொருட்களுக்கு எல்லாம் சர்டிபிகேட் வாங்கலாம்னு ஓரளவுக்கு தெரிஞ்சுருக்குமுன்னு நினைக்கிறேன் . அடுத்ததா நாம இதை வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் யாரை அணுகலாம் என்பதை பற்றி பார்க்கலாம் .     இந்த NPOP இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அமைப்புகளின் பட்டியல் மொத்தம் 29 இருக்கிறது . அதன் விவரங்களை பார்க்க ( கிளிக் செய்யவும் ). அந்த லிங்கில் அணைத்து கொடுக்கப்பட்டிருக்கும் எப்பொழுது அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது எத்தனை வருடம் கொடுக்கப்பட்டுள்ளது அல்லது ப்ரோசஸ் மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்துகொள்ளலாம் . ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் NPOP லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளவை மட்டுமே உண்மையானது ஆகும் . மற்றவற்றை நம்பவேண்டாம் .          தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறை   ( TNOCD) மட்டுமே இருகின்றது . கோயம்பத்தூரில் இதன் தலைமையிடம் இருக்கிறது . இதை விரிவாக பார்க்கலாம் . ...

ஆர்கானிக் விவசாயி - 2

NATIONAL PROGRAMME FOR ORGANIC PRODUCTION (NPOP) முதலில் நாம் இயற்கை விவசாய சான்றிதழ் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்கவேண்டும் . நீங்கள் வாங்க கூடிய மூலப்பொருட்கள் ( தானியங்கள் அல்லது காய்கறிகள் ) இயற்கை இடுபொருட்கள்   ( மண்புழு உரம் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் )  மூலம் விளைந்தவையாக இருக்கவேண்டும். மாறாக , செயற்கை உரம் மூலமாகவோ அல்லது பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்தியிருக்கக்கூடாது .  மேலும் களைக்கொல்லி மற்றும் தூண்டப்பட்ட ஹார்மோன்களும்   பயன்படுத்தியிருக்கக்கூடாது . இதை  கண்காணித்து ஏற்றுமதி மற்றும் உள்ளூர் விற்பனைக்கு சான்றிதழ் அளிப்பதே இயற்கை விவசாய சான்றிதழ் ஆகும் .         இதில் ஏற்றுமதிக்கான சான்றிதழ் அளிப்பது Apeda வின் கீழ் உள்ள NPOP யாகும். இது ஏற்றுமதிக்காக மட்டும்மல்ல உள்ளூர் வர்த்தகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் . இந்த APEDA 2000 தில்  ஆரம்பிக்கப்பட்டு 2002 இல் இருந்து சான்றிதழ்களை கொடுத்து வருகிறது . இந்த NPOP யின்   நோக்கங்கள் என்ன என்று ப...

ஆர்கானிக் விவசாயி - 1

                              ஆர்கானிக் விவசாயி   - 1   இயற்கை விவசாய உணவு பொருட்களை கண்டுபிடிப்பது எப்படி ?                                         சில தசாப்தங்களுக்கு  முன் நாம் இயற்கை விவசாயம்தான் செய்து கொண்டுஇருந்தோம் . ஆனால் , இப்போது  செயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டோம் . அதேசமயம் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக   இயற்கை விவசாயம் விழிப்புணர்வு ஏற்பட்டு நாம் அதை நோக்கி நாம் பயணித்து கொண்டுயிருக்கிறோம் . ஆனால் இயற்கை முறையில் விளைவித்த உணவுப் பொருட்கள் என சில கடைகளில் விற்கப்பட்டும் பொருட்கள்  அனைத்தும் உன்மையில் இயற்கை உணவுப்பொருட்கள்தான்னா , அதை எப்படி தெரிந்து கொள்வது ?   நீங்கள்  வாங்குபவரா இருந்தாலும் அல்லது வாங்கி விற்பவராக இருந்தாலும் அதை எப்படி...

இயற்கை விவசாயத்திற்கு ஆலோசனைகள்

இயற்கை விவசாயத்திற்கு ஆலோசனைகள்: 1.தாழ்வான பகுதியிலுள்ள வயல்வெளிகளில் இயற்கை வேளாண்மை செய்வதென்றால் அவ்வயல்களைச் சுற்றி கரைகளை உயர்த்தி அமைக்கவேண்டும். அப்பொழுதுதான் மழைக்காலங்களில் மற்ற வயல்களிலுள்ள ரசாயனப் பொருட்கள் மழைநீரில் வருவது தடுக்கப்படவேண்டும் . 2.இயற்கை விவசாயத்திற்கு இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தும் முன்னர் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பாலிதீன் பேப்பர்களை பயன்படுத்துவதை தவிர்த்து வருதல் வேண்டும். அப்பொழுதுதான் மண்ணின் மலட்டுத்தன்மை முதலில் சரியாகும ். 3. விதைகளில் முற்காலத்தில் பயன்படுத்திய நாட்டு ரகங்களையே பயன்படுத்துதல் நல்லது. 4. அதிக பொருட்செலவில் இடுபொருள்களை இட்டு அதிக மகசூல் என்பதைவிட குறைந்த செலவில் ஆரோக்கியமான இடுபொருட்கள் இட்டு சராசரியான மகசூல் என்ற இலாப நோக்கத்தை பின்பற்றவேண்டும். 5.தண்ணீர் மற்றும் மின்பற்றாக்குறை சிரமங்களை கருத்தில்கொண்டு தெளிப்பு நீர், சொட்டுநீர் மற்றும் மரங்களுக்கு பானையில் திரியிடும் முறை போன்றவற்றை பயன்படுத்தலாம். 6. களைகளை நீக்க மூடாக்கு முறைகளை பயன்படுத்தலாம். 7.இயற்கைமுறைகளில் பூச்சிக்கொல்லிகள் அல்லது பூச்சி...