Skip to main content

Posts

Showing posts with the label Paddy

நெற்பயிரில் பாக்டீரியல் குலை நோய்

 paddy pest and diseases - Bacterial blight இந்த நோயோட தாக்கம் முதலில் எங்கிருந்து வரும் என்றால் நாம் நெல் விதையை விதைநேர்த்தி சரியாக  செய்யாமல் விதைத்தால் வரும் . அல்லது சரியாக பண்படாத அல்லது சரியாக முளைக்காத விதை நெல்லாக இருந்தால் அதிலிருந்து வரும் . இதை சரி செய்வதற்கு விதைப்பதற்கு முன்பு நெல் விதையை தரையில் பரப்பி சரியில்லாத விதைகள் பூஞ்சை பிடித்த விதைகள் போன்றவற்றை நீக்கி விடவேண்டும்  நெல் விதை நேர்த்தி ஒருகிலோ விதை நெல்லுக்கு பவுடராக இருந்தால் 10 கிராம் திரவமாக இருந்தால் 6 மில்லி சூடோமோனஸ் அல்லது விரிடி அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ மற்றும் 30 கிராம் அசோஸ் பயிரிலும் உடன் கலந்துசெய்யலாம்  நெல் பற்றிய மற்ற கட்டுரைகள் - Click Here   முதலில் விதை நெல்லை தண்ணீரில் கலந்து அழுக்கை நீக்கிவிடவேண்டும். அடுத்து சூடோமோனஸ் மற்றும் அசோஸ் பயிரிலும் கலந்து நன்றாக பிரட்டிவிடவேண்டும் . பிரட்டி விடுவதை  கடினமாக செய்க்கூடாது விதை முனை மழுங்கி விடும் ஒரு அகலமான கரண்டியில் செய்யலாம்  நிலம்  ஏற்கனவே பாக்டீரியல் குலை நோய்  வந்த நிலமாக இருந்தாலோ அல்லது நீங்...

நெல் சாகுபடி - நெல்லில் கருக்கா நோய்

  Paddy Cultivation -  Disease in Paddy நெல்லில் கருக்கா ஒரு தீமை செய்யும் பாக்டீரியாவால் வருகிறது இந்த பிரச்சனை எங்கிருந்து வருகிறது என்றால் தவறான விதை நெல் அல்லது விதைநேர்த்தி பண்ணாமல் இருப்பது , ஆரம்பகால நோய் எதிர்ப்பு விஷயங்கள் செய்யாமல் இருந்தது போன்றவைகளோட விளைவாக இது இருக்கலாம்  இது மேலும் பரவாமல் இருக்க பேசிலஸ் சப்டிட்லஸ் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து நன்றாக நனைச்சு விட்டு தெளிக்கலாம் ஒருதடவை கொடுத்தீங்கனா மறுபடியும் 6வைத்து நாள் ஒருத்தடவ  கொடுக்கணும்

நெல் நாற்றங்கால் பராமரிப்பு - நாற்றுகளில் வளர்ச்சியைப் பெறுவதற்கு Paddy Nursery Care

Paddy Nursery Care - To Grow Seedlings நெல் நாற்றங்காலில் முறையான நாற்றுகளில் வளர்ச்சியைப் பெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தரைவழி 300 மில்லி மீன் அமிலம் அடுத்த முறை 500 மில்லி ஈ. எம் கரைசல் அடுத்தமுறை 500 மில்லி பஞ்சகாவியா அடுத்த முறை 300 மில்லி மீன் அமிலம் என தரைவழி தரவும் மேலும் 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 75 மில்லி மீன் அமிலம் அல்லது 300 மில்லி பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம்.

நெற்பயிரை தாக்கும் நோய்கள் - நெல் குலை நோய் - Diseases affecting paddy - Paddy blight

Diseases affecting paddy - Paddy blight நெற்பயிரில் குலை நோய் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே வெள்ளைப் பொன்னி  பயிரிட்டுள்ள விவசாயிகள் முறையான தடுப்பு நடவடிக்கைகளை ஆரம்பம் முதல் கொண்டு கடைபிடிக்கவும். 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற திரவத்தை கலந்து மாலை வேளையில் நன்கு நனையுமாறு தெளிக்கலாம் . பின்பு நடவு வயலில் நட்ட பின்பு 12 நாட்களுக்கு ஒருமுறை என 3 முறை தெளிப்பது நல்லது தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் கலந்து கொடுக்கவும்.

நெற்பயிரை தாக்கும் நோய்கள் - நெற்பழ நோய்

Diseases affecting rice crop - Rice disease அனைத்து வகை வெப்ப மண்டலப் பகுதிகளிலும் வெப்பம் குறைந்து ஈரம் அதிகமாகும் தருணங்களில், நெற்பயிரில் பூக்கும் நேரத்தில், பூக்களில் ஏற்படும் பூஞ்சை தொற்று நெற்பழ எனும் நோயாகும். இளம் ஆரஞ்சு நிறத்தில் உள்ள பஞ்சுபோன்ற அமைப்புடன் நாட்கள் ஆக ஆக மஞ்சள் நிறமாக மாறும் தன்மையுள்ள இந்த நோய் 35% வரை நமக்கு விளைச்சலை கெடுக்கக்கக்கூடிய வகையில் உள்ளது. இதனை சரிசெய்ய 1. வயலை சுத்தமாக களைச்செடிகள் இன்றி வைத்திருக்கலாம். 2.அதிகத் தண்ணீர் இல்லாமல் காய்ச்சலும் பாய்ச்சலுமாக நிலத்தை வைத்திருக்கலாம். 3.அதிக தழைச்சத்து கொடுக்கக்கூடிய இடுபொருட்களை தரைவழி தராமல் இருக்கலாம். 4.இந்தப் பூஞ்சைத் தொற்றை சரி செய்ய அரை கிலோ துளசி இலையை 10 லிட்டர் தண்ணீரில் நன்கு அரைத்த பின்பு இட்டு 12 மணி நேரம் ஊற வைத்த பின்பு வடிகட்டி, மாலை வேளையில் தெளிக்கலாம். அதனை ஐந்தாவது நாள் திரும்பவும் தெளிப்பது நல்லது. 5. அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் பத்து லிட்டருக்கு 50 மில்லி பேசில்லஸ் சப்டிலிஸ் அல்லது சூடோமோனஸ் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம் ஆறாவது நாள் திரும்பவும் தெளிக்கலாம்.

இயற்கை வழி நெல் சாகுபடி செய்வது எப்படி

பயிர்களை பற்றிய கண்ணோட்டம்  1. குறுகிய கால ரகங்கள்  வயது : 80 நாட்கள் முதல் 110 நாட்கள் வரை  2. மத்திய  கால ரகங்கள்  வயது : 120 நாட்கள் முதல் 135 நாட்கள் வரை  3. நீண்டகால  கால ரகங்கள்  வயது : 140 நாட்களுக்கு மேல்   இது நம்முடைய நடைமுறையில் உள்ள நெல் ராகங்களில் உள்ள வயதுக்கு ஏற்ற பகுப்பு..  ஒரு சில ரகங்கள் சற்று மாறுபடலாம்...  && அனைத்து பயிர்களுக்கும் நிலம் தயாரிப்பு முறை,  நாற்றங்கால் தயாரிப்பு முறை ஒன்றுதான்.. அதில் எந்த வேறுபாடும் இல்லை  && அனைத்து பயிர்களையும் 10ம் நாள் தொடங்கி 15ம் நாளுக்குள் நட்டால் தூர்கள் நன்றாக பிடிக்கும்...  அதிலும் வித்யாசம் இல்லை  பின்பு மாறுபாடுகள் எங்கே வருகிறது என்று யோசிக்க வேண்டும்...  1. பயிர்களின் வளர்ச்சி பருவம்...  கதிர் வருவதற்கு முன் உள்ள பருவம்..  2. கதிர் வந்ததிலிருந்து அறுவடை வரை உள்ள பருவம்...  மேல் சொன்ன 2 பருவங்களும் பயிருக்கு பயிர் மாறுபடும்..  மண்ணின் வளத்தை பொறுத்து பயிரின் வயது கூட குறைய செய்கிறது..   + or...

மழையில் மூழ்கிய நெற்பயிர்களை மீட்டெடுக்கும் முட்டை வெங்காய கரைசல்

தேவையான பொருட்கள் :  சின்ன வெங்காயம் - 1கிலோ. முட்டை - 10  (1 ஏக்கருக்கான அளவு)  செய்முறை : சின்னவெங்காயத்தை ஓர் இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் வெங்காயத்திலிருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு, நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்த வெங்காயத்தை மெல்லிய பருத்தி துணியில் வடிகட்டி சாறு எடுத்து கொள்ளவும். வெங்காய சாற்றுடன், முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சேர்க்கவும். இக்கலவையுடன் சூடோமோனஸ், வசம்புபொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்த பின்னர் தெளிப்புக்கு பயன்படுத்தவும். பயன்படுத்தும் அளவு : #10 லிட்டர் தண்ணீர் : 50 மில்லி கரைசல். #சூடோமோனஸ் - 50 கிராம் #வசம்பு பொடி - 50 கிராம். இவை இரண்டும் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட தெளிப்பான்களின் அளவு. இக்கரைசலை ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை பயிரில் தெளிக்கும்போது, மழையில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு, மீண்டும் சத்துக்களை கொடுத்து மீட்டெடுக்கும் இக்கரைசல். இக்கரைசலில் சேர்க்ப்படும் பொருட்களின் பயன்கள்.  *# முட்டையின்* *வெள்ளைகரு -* தழைசத்தை நிலைநிறுத்துகிறது.  *#வெங்காயம் -* கந்தகசத்தை அளிக்கிறது.  *#சூடோமோனஸ்* - இலைநுனிகருகல்...

நெல் ADT -53

வயது 105 முதல் 110 நாட்கள் வரை இருக்கும் குருவை கோடை மற்றும் நவரை பருவத்திற்கு ஏற்றதாகும். நடுத்தர உயரம் நிமிர்ந்த பயிர் அமைப்பு மற்றும் உயர் விளைச்சல் திறன் கொண்டதாகும் . அதிகபச்ச மகசூல் 9875 கேஜி/ha   சாயாத தன்மை கச்சிதமான பயிர் அமைப்பு முற்றிலும் வெளிவந்த நெருக்கமான கதிர்களை கொண்ட சிறந்த ரகமாகும் . நடுத்தர சன்ன அரிசி அதிக அரவை திறன் மற்றும் முழு அரிசி காணும் திறன் கொண்டதாகும் .  தண்டு துளைப்பான்  இலை முடக்கு புழுவிற்கு மிதமான எதிர்ப்பு தன்மை கொண்டதாகும். குலை நோய், இலை உரை அழுகல், செம்புள்ளி நோய்களுக்கும் மிதமான எதிப்புத்தன்மை கொண்டதாகும் தமிழ் நாட்டில் அணைத்து பருவ மண்டலங்களுக்கு ஏற்றது ஆகும் இந்த ரகம்  

Rice VGD 1

Rice VGD 1 வயது 130 நாட்கள்  சம்ப மாற்று பின் சம்பா பட்டங்களில் திண்டுக்கல் , தேனி , திருச்சி , பெரம்பலூர், கரூர் , கோயம்புத்தூர் , ஈரோடு , தர்மபுரி , மற்றும் வேலூர் மாவட்டங்களில் பயிரிட ஏற்றது . நடுத்தர உயரம் மற்றும் அதிக தூர்கள் சாயா தன்மை உடையது  அரிசியின் தரம் சீராக சம்பா அரிசியின் தரத்திற்கு ஒத்து இருக்கும்  சராசரியாக 5850 கேஜி /ha வரை கிடைக்கும் அதிகபச்சமாக  9500 கேஜி /HA  வரை கிடைக்கும்  இலை சுருட்டு புழு , குலை நோய் , மற்றும் செம்புள்ளி நோய்களுக்கும் நடுத்தர எதிர்ப்பு தன்மை கொண்டது  சன்ன வெள்ளை அரிசி மிதமான வாசனை உடையது மேலும் பிரியாணி மற்றும் குஸ்கா செய்ய உகந்ததாகும் .

நெல் பச்சை தத்துப்பூச்சி

மேலாண்மை  தாக்குதலின் அறிகுறிகள்   இலைகள் நுனி முதல் அடிப்பகுதி வரை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி காணப்படும் .   நெல் பயிரின் வீரியம் குறைந்து பயிர் வளராமல் வளர்ச்சி குன்றி குட்டையாகக் காணப்படும்.   பயிர் வாடிவிடும்   அல்லது முற்றிலுமாக காய்ந்துபோகும் . பயிரை முழுவதுமாக தாக்கி அதன் சாற்றை உறிஞ்சிவிடும் .   இலைகளுக்குள்   அல்லது நடுநரம்புகளுக்குள் வெள்ளையான அல்லது வெளிறிய மஞ்சள் நிறத்தில்   முட்டைகள் இருக்கும்.   பயிரின் மேல்பகுதியில் வெளுத்த பச்சை நிற முதிர்ப்பூச்சிகள் இருக்கும்.   தாக்குதலின் தன்மை :   இளம் உயிரிகள் மற்றும் முதிர் பூச்சிகள் இரண்டும் , இலை மற்றும் இலைகளிலிருந்து செடியின் சாறை உறிஞ்சும் .   மிதமான தாக்குதல் , பயிரின்   வளர் தன்மையைக் குறைத்து இனப்பெருக்கத் துார்களின் எண்ணிக்கைகளையும் குறைக்கிறது.   பூச்சி உட்கொண்ட இடம் மற்றும் முட்டையிடப்பட்ட ஓட்டைகளின்னால் , பயிர்கள்   பூசணம் மற்றும் நுண்ணியிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிறது. உணவு உட்கொள்ளும் காலம் குறைவாக இருக்கும்போது “ துங்ரோ...

இயற்கை விவசாயத்திற்கு நெல் விதை தேர்வு

                                     விதை தேர்வு   நெல் சாகுபடியை பொறுத்தவரை விதை தேர்வு என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் தேர்தெடுக்கும் விதை ஒரே அளவாக இருக்கவேண்டும் , வயது மற்றும் சுத்தமான விதைகளாக இருக்க வேண்டும் (நோய் தொற்று இல்லாமல்) இறுதியாக முளைப்பு திறன் அதிகமுள்ள விதைகளாக இருக்க வேண்டும் .      தரமற்ற விதைகளை பிரிப்பதற்கு ஒரு சுலபமான வழி ஒரு வாளியில் நீரை ஊற்றி அதில் நெல்லை போட்டால் முளைப்பு திறன் அற்ற விதைகள் மேலே மிதக்கும் . மிதக்காத விதைகளை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.   மற்றொரு முறை என்று பார்த்தால் chaffy grain இதில் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரு முட்டையை விடுங்கள் முட்டை மேற்பரப்பை அடையும் வரை மெதுவாக உப்பு சேர்க்கவும். விதைகளை தண்ணீரில் இறக்கும்போது , ​​நல்ல தரமான விதைகள் மூழ்கும். நீரின் மேற்பரப்பில் மிதக்கும் சாத்தியமற்ற விதைகளை அகற்றவும். தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகளை நல்ல தண்ணீரில் 2-3 முறை கழுவவும...