Skip to main content

Posts

Showing posts with the label தென்னை

விளைச்சலைப் பெருக்கும்
தென்னைநார்க் கழிவு உரம்

தென்னைநார்க் கழிவு உரம்... நீங்களே தயார் செய்யலாம் தென்னை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள், மண்ணில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க… தேங்காய் மட்டைகளைப் பதியம் போடுவது குறித்தும், இதில் சரியான வழிமுறையைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும் கடந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம். தேங்காய் மட்டைகளை எப்படி சேமித்து பதப்படுத்தி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது சங்க இலக்கிய நூலான புறநானூற்றில் சொல்லப்பட்டுள்ள பொன் வரிகளாகும். இந்த உலகத்தில் நன்மை என்று ஒன்றிருந்தால், அதற்கு எதிர்ப்பதமான தீமை என்ற ஒன்று இருப்பது நிச்சயம். எந்த ஒரு பொருளும் இரண்டு விதமான வினைகளை ஆற்றும். அதை நாம் அணுகுவதைப் பொறுத்துதான் நன்மையாகவும் தீமையாகவும் மாறும். தேங்காய் மட்டைகள் மற்றும் தென்னை மட்டைகள், விவசாயத்துக்கு நன்மை பயக்கக்கூடிய இயற்கை பொருள்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், சரியாகக் கையாளவில்லை என்றால், சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு வழிவகுக்கும். இவற்றில் ‘டானின்’ என்ற வேதிப்பொருள் அதிக அளவு உ...

தென்னை மரத்தில் ஈரியோபைட் சிலந்தியை கட்டுப்படுத்த இயற்கை வழி மேலாண்மை .

how to cultivate coconut tree -  eriophyid mite organic pest control  காற்றில் பரவக்கூடிய இந்த வகை சிலந்தி தேங்காய்களுக்கு பெருமளவிற்கு பாதிப்பு ஏற்படுத்துவதோடு விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டத்தை கொடுக்கிறது. நாம் இந்த கட்டுரையில் நோயின் அறிகுறி எப்படி இதை இயற்கை வழியில் கட்டுப்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம் . சிலந்தி தாக்கத்தின்  அறிகுறிகள் பொதுவா கோடை காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இந்த சிலந்திகள் தேங்காய் காம்பின் அடிப்பகுதியில் இருக்கும் . அங்கே உள்ள சாற்றை உறிஞ்சுவதால் 1 முதல் 3 மத குரும்பைகளில் ஒரு முக்கோண வடிவ வெளிர் மஞ்சள் நிறம் தோன்றும் . இதனால் குரும்பைகள் கிழே விழுந்துவிடும் . வளர்ந்த குரும்பையில்  இந்த சிலந்தியின் தாக்கம் ஏற்படும்போது பழுப்பு நிற திட்டுகள் ஏற்பட்டு காய்கள் கைகள் சிறுத்துவிடும் . அதுவே முற்றிய காய்களில் பழுப்பு நிற திட்டுகள் கடினமாகி நீல வாக்கில் வெடிப்புகள் ஏற்படும் . காய்கள் சிறுத்து பருப்பின் அளவு குறையும் .  சிலந்தியை கட்டுப்படுத்த இயற்கை வழி மேலாண்மை  எந்த சமயத்திலும் இதனை கட்டுப்படுத்த கெமிக்கலை பயன்படுத்தக்கூடாத...

தென்னம் தோப்பில் மூடாக்கின் அவசியம்

what is mulching in agriculture and coconut plants ஒரு மாந்தோப்புஅல்லது  கொய்யா தோப்பு என்றாலும் சரி தென்னம் தோப்பனாலும் சரி ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இடைவெளி அதிகம்தான். ஆனால் , தென்னை மரத்திற்கு மட்டும் ஏன் மூடாக்கு மிக அவசியம் , அதற்கு முக்கிய கரணம் நிழல் . மா ,பலா , கொய்யா போன்ற தோட்டக்கலை பயிர்கள் பரந்து விரிந்து இருக்கும் அதன் நிழல் பரப்பும் அதிகம் ஆனால் தென்னை குறைந்தது 28 அடியாவது இடைவெளி விட்டிருப்போம் வெயில் நிழல் பரப்பு குறைவு. நாம் இந்த கட்டுரையில் தென்னையில் எப்படி மூடாக்கு செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம் . தென்னையில் ஏன் மூடாக்கு செய்ய வேண்டும். களைகள்  வெயில் பரவும் இடம் அதிகம் என்பதால் கலைகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் இது தேவை இல்லாத பூச்சி மற்றும் நோய்களை பரப்பும் மேலும் நீருக்கும் மற்றும் சத்துக்களும் அதிக போட்டி இருக்கும்  நீர்  தென்னையை பொறுத்தவரை நாம் வட்ட பாத்தியில்தான் தண்ணீர் விடுவோம் , ஆனால் மற்ற பகுதிகளில் வெயில் அதிகம் பட்டு நீர் ஆவியாகும் போது இந்த நீர் அந்த பகுதிக்கு போக வாய்ப்புள்ளது எனவே தென்னைக்கு தேவையான சமயத்தில...

தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை சுருள் பூச்சி- உயிரியல் கட்டுப்பாடு

coconut cultivation - rugose pest  management   தென்னை விவசாயிகள் கடந்த சில வருடங்களாக அதிகம் உச்சரிக்கும் வார்த்தை ரூகோஸ் என்ற வெள்ளை சுருள் பூச்சி. இதன் தாக்கம் தென்னையில் பெருமளவு மகசூலை குறைத்திருக்குகிறது அதே சமயம் தென்னை மட்டுமின்றி  வாழை மற்றும் சப்போட்டா போன்ற பழப்பயிர்களையும் தாக்குகிறது . இந்த வெள்ளை சுருள் பூச்சி தென்னை ஓலைகளில் பரவி வேகமாக இனப்பெருக்கம் செய்து தென்னை மரம் முழுவதும் பரவி ஓலையில் உள்ள சாற்றினை உறுஞ்சி ஒரு மெழுகு ஒரு தேன் திரவத்தை வெளியிடுகின்றன இது மட்டை முழுவதும் பரவி அதன் மேல் கேப்னோடியம் என்னும் கரும்பூஞ்சாணம் படா்கிறது. இதனால் ஒளிசேர்க்கை நடைபெறாமல் மரத்தின் சத்துக்கள் குறைவதுடன் தேங்காயின் அளவு மற்றும் தரம் குறைந்து மகசூலும் குறைகிறது அதே சமயம் பெரும்பாலும் இந்த பூச்சி குட்டை மற்றும் நெட்டை வீரிய ஒட்டு ரகங்களை அதிகம் தாக்குகிறது. கிரைசோபெர்லா இரை விழுங்கி   இந்த சமயத்தில் இந்த உயிரியல் முறை கட்டுப்பாடு மட்டுமே சிறந்த பலன்களை தருகிறது  இதன் தாள்களை ஸ்டாப்லர் பின் வைத்து தென்னை ஓலையில் பின் செய்துவிட்டால் மூன்றே நாட்க...

தென்னை குரும்பை பூஞ்சாண நோய் கட்டுப்பாடு

Coconut nut fungal disease control பூஞ்சாண நோய் கட்டுப்படுத்த முதலில் முறையான தண்ணீர் கொடுப்பது முக்கியம் . அடுத்து உரங்கள் அதிகமாக போடப்பட்டிருக்கலாம் அல்லது தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கும் இடமாக இருந்தால் தென்னையில்  பூஞ்சாண நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு   இந்த பூஞ்சாண நோயை கட்டுப்படுத்த முறையான மற்றும் தேவையான நீர் நிர்வாகம் கடைபிடிக்கவேண்டும் . தரைவழியில் ஒரு மரத்திற்கு 10 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி சூடோமோனஸ் கலந்து மரத்தை சுற்றி ஊற்றிவிட்டு வேண்டும் இதை பத்தாவது நாள் ஒரு முறையும் 20 வது நாள் தரை வழி ஊற்றி விட வேண்டும் . ஒரு முறையாவது மரத்தின் மேல் சென்று 1 லிட்டருக்கு 10 மில்லி கலந்து ஸ்ப்ரே செய்யவும் வாய்ப்பு இருந்தால் இரண்டாவது முறையும் செய்யலாம்  . பாலைகள் வர இடத்தில என்ன மாதிரியான பிரச்சனைகள் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் . நீண்ட நாட்களாக பன்னாடைகளை சுத்தப்படுத்தாமல் உள்ளதா அல்லது தண்ணீர் தேங்கி நிற்கும் அமைப்பு மட்டைகளில் உள்ளதா என்று தேவை இல்லாததை சுத்தப்படுத்தினால் நல்லது . அடுத்து மட்டைகளில் காயம் ஏற்பட்டு இருந்தாலும் இந்த மாதிரி நடக்க வா...

தென்னையில் பார்த்தீனியம் அழிக்க என்ன செய்யலாம் - What can be done to destroy Parthenium in coconut

What can be done to destroy Parthenium in coconut தென்னை  கழிவு -  Coconut waste தென்னை மட்டைகளையும் தென்னையின் மற்ற கழிவுகளையும் அரைத்து  அதையே பயண்படுத்தலாம் அது சிறிது காலத்தில் உரமாகவும் மாறிவிடும்...  தேவையற்ற பார்த்தீனிய போன்ற செடிகளின் சந்ததிகளை தோட்டத்தை விட்டே துரத்த இதுதான் செலவு குறைந்ந வழி. தென்னையை சுற்றி நாம் பாத்தி கட்டும் இடங்களில் இந்த மூடாக்கு அவசியம் இல்லை. ஏனென்றால் நாம் அந்த பாத்திகளில் சொட்டு நீர் போட்டு விடுவோம் அப்போது அந்ந இடங்களில் நாம் கீரை போன்ற ஊடு பயிர்களையும் செய்யலாம்  கீழே உள்ள படத்தில் அதையும் காணலாம்.. மேலும் இந்த மூடாக்கின் அடர்த்தியும் திக்னஸ்சும் கொஞ்சம் அதிகம் இருந்தால்தான் களைகளை அறவே ஒழிக்க முடியும் Coco pith ஆகமாற்றி பயன் படுத்துங்கள் -  Use Coco pith converter நல்ல வழிமுறை. ஆனால் உடனை பயன்படுத்தக்கூடாது. தென்னை நார்கழிவில் உள்ள Lignin phenols போன்ற அமிலங்களைப் போக்கி பயன்படுத்த வேண்டும். முடிந்தால் Coco pith ஆகமாற்றி பயன் படுத்துங்கள். அரைத்த பின்பு அதில் உள்ள தேவையில்லாத வேதி நச்சுப்பொருட்களை நீக்காமல் பயன்படுத்தி...

தென்னை பாலை உதிர்வதை தடுப்பது எப்படி

குறும்பை எதனால் உதிர்கிறது  Coconut cultivation tips தென்னையில் குரும்பை உதிர்வது என்பது ஒரு நாளில் நடக்கும் விஷயமில்லை அது தென்னையோட மொத்த பராமரிப்பு அல்லது அதனுடைய சத்தை பொறுத்தது  நாம் மண்ணுக்கேற்ற மாதிரி அடிப்படை சத்துக்கள் கொடுக்காம வெறும் தண்ணிய மட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தோம்னா அந்த பயிர்ல காய்கள் நிற்பதற்கான காரியங்கள் எதுவும் நடக்காது  இடுபொருள் கொடுக்கணும்  - Organic Fertilizer ஒரு மாதத்துக்கு அல்லது குறைந்தபச்சம் ஒரு வாரத்துக்கு ஒருமுறைன்னு  ஒரு இடுபொருள் கொடுக்கணும் உதாரணமாக ஜீவாமிர்தம் கொடுத்தால் ஒரு மரத்துக்கு குறைந்தபாசம் 3 லிட்டர் கொடுக்கலாம் , அதேகபச்சமாக 5 லிட்டர். அடுத்தவாரம் மீன் அமிலம் ,அடுத்தவாரம் அடுத்தவாரம் பஞ்சகாவியா , அடுத்து EM  கரைசல் இந்த மாதிரி மூணு வாரத்துக்கு மூணு கொடுகிறோம்னு வைங்க ஒவ்வொண்றும் ஒரு ஒரு மரத்துக்கு 20 மில்லி அளவுல தரணும் . அல்லது ஏதாவது ஒரு பொருள்ளக்கூட அந்த அளவுக்கு கொடுக்கலாம் , ஆனால் கட்டாயமாக கொடுக்கணும் . என்ன சொல்ல வாரேன்னா வெறும் தண்ணியாக கொடுக்காமல் அதனுடன் கலந்து கொடுத்து வாரம் வாரம் தென்னை மரத்தை க...

coconut PDF File

தென்னை சாகுபடி Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தென்னை வைத்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகிறது ஆனால் புதிதாக இலைகள் வரவில்லை. என்ன செய்ய வேண்டும்

தென்னை கன்று  பருவத்தில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது தூரில் மண் எடுத்து விட்டு தேங்காய் மேலே தெரியும் படி நடவு செய்யனும்  குருத்து வருவது கால தாமதம் ஆகும் இந்த கண்ணு நல்லா இருக்கு..காத்திருக்கவும்  அதிகமாக தண்ணீர் கொடுக்க கூடாது  அவசரப்பட்டு உரம் போட்டுடாதீங்க மழை காலம் வரட்டும் பயப்பட வேண்டாம் இது மழை காலம். இப்படித்தான் இருக்கும். சரியாகிவிடும் மீண்டும் தழைக்கும். வைத்து 1மாதம் தானே ஆகிறது.வேர்பிடித்து வளர சிறிது காலம் ஆகும் இப்போதைக்கு எந்த உரமும் வேண்டாம்.மண்ணை லேசாக கிளறி விடவும். குருத்தில் மண் விழுந்து அடைக்காமல் பார்த்துக்கொள்ளவும். தென்னம்பிள்ளை நடவு போடும் போது வெளியே வந்த வேர்களை அறுத்து விட்டு நடவு செய்தால் புது வேர் விரைவில் வரும். வளர்ச்சி நன்கு இருந்தால் மாதம் ஒரு முறை ஒரு புது இலை வரும்   நீர்பாசனம் அதிகம் செய்கிறீர்கள், 2 அடி தள்ளி 1 அடி சதுரம் 1.5 அடி ஆழம் உள்ள சதுர குழி எடுக்கவும். குழியினுள் வெடிப்பு குடுத்த பின்பு குழியில் நீர்பாசனம் செய்யவும். ஈரம் தேங்காமல் இருக்க வட்டப்பாத்தி கட்டி விடவும்!

தென்னை மரங்களில் குரும்பை உதிர்வதை தவிர்க்க என்ன செய்யலாம்

தென்னை மரங்களில் குரும்பை உதிர்வதை தவிர்க்க 🌴 உடனடியாக தர வேண்டுமென்றால் தரையில் கொடுக்கும் வகையிலான போரான் 100 கிராம் வாங்கி 5 கிலோ தொழு உரத்துடன் கலந்து தூரிலிருந்து நான்கடி தள்ளி மண்ணைத் தோண்டி உள்ளே போட்டு மூடி தண்ணீர் கொடுக்கவும். இது போல் 5 மாதங்கள் பண்ணலாம். தரையில் கொடுக்கும் அதே நேரத்தில் மரத்தின் மேல்பகுதியில் தெளிக்கும் வகையிலான போரான் வாங்கி ஒரு லிட்டருக்கு ஒரு கிராம் என கலந்து தெளிக்கலாம். 🌴 நீண்டகால நிலையான இயற்கைவழி தீர்வாக 🌴  200 லிட்டர் டிரம்மில் உள்ள நீரில் 1 0 கிலோ அளவுள்ள பால் வரும் எருக்கின் இலை பூ தண்டு காய் நறுக்கி உள்ளே போட்டு மூடி 5 நாள் ஊறவைத்து அந்த தண்ணீரை 5 நாள் கழித்து மரத்திற்கு 5 லிட்டர் என தரையில் ஊற்றலாம். அதே நேரத்தில் அந்தக் கரைசலை அப்படியே ஊற்றி மரத்தின் மேல்பகுதியில் உள்ள குரும்பைகள் மேல் தெளிக்கலாம. இதனை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்யவும். முதல் ஒரு மாதம் மட்டும் கடையில் வாங்கும் போரானை உபயோகப்படுத்தலாம். மற்றபடி இயற்கை வழி தீர்வு நீண்ட நல்ல பலன்தரும் .மரத்தின் ஆயுளையும் பாதுகாக்கும்.

தென்னை பற்றிய கேள்விகள்

1 ) நான் எனது தோட்டத்தில் தென்னை மரம் ஒரு ஏக்கரில் நடலாம் என முடிவெடுத்துள்ளேன் ஆனால் அதைப்பற்றி எனக்கு தெளிவான செய்முறை இல்லை எனக்கு உதவுங்கள். 2)   நண்பர்கள் யாரவ்து சொல்லுங்கள் எதற்கு எப்படி இழைகள் நொடிந்து காணப்படுகிறது..மேலும் ஒரு மரத்தில் எப்போது பூ விட்டுருகிறது. இப்ப நல்ல காய் பிடிக்க என்ன செய்ய வேண்டும்.. 3)  12 வருடம் ஆன தென்னை மரத்திற்கு என்ன ஆர்கானிக் உரம் வைக்களாம். காய்கள் மிகவும் கம்மியாகவே இருக்கின்றன. குறும்பல் பிடிக்கவே இல்லை. 4)   தென்னை தோப்பில் வளர்ந்துள்ள பார்த்தீனியும் செடிகளை அகற்றுவதற்கு ,இயற்கை முறையில் என்ன மருந்து அடிக்கலாம் 5)  தென்னை வைத்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகிறது ஆனால் புதிதாக இலைகள் வரவில்லை. என்ன செய்ய வேண்டும் , 6)  தென்னை நடும் முறை - ஒரு ஏக்கர் நிலத்தில் எத்தனை தென்னை கன்று நடலாம்

தென்னை- கேள்வி - பதில்

  நான் எனது தோட்டத்தில் தென்னை மரம் ஒரு ஏக்கரில் நடலாம் என முடிவெடுத்துள்ளேன் ஆனால் அதைப்பற்றி எனக்கு தெளிவான செய்முறை இல்லை எனக்கு உதவுங்கள். பதில்-1  தூய நாட்டு கன்றுகளை நடுங்கள். பல வருடங்கள் ஆனாலும் வறட்சி மற்றும் நோய் தாக்கத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளஉம். 25 அடி விட்டு நடவும். ஓரத்தில் இருக்கும் மரங்கள் நெருக்கமாக நடலாம். அருகாமையில் வேறு வீடோ மற்றவர்கள் இடமோ இருந்தால் கொஞ்சும் தள்ளி நடுங்கள். முடிந்தவரை மாட்டு சாணம் போன்ற இயற்கை உரங்களை போட்டு வரவும். தென்னை கன்று வளரும் நேரத்தில் ஊடு பயிராக மக்கா சோளம் விதைக் கலாம். பதில்-2 மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். இது பல்லாண்டு பயிர் என்பதால் அவசர அவசரமாக செய்யக்கூடாது. 1. நாற்றை நாமே உருவாக்க வேண்டும். அந்த பகுதியில் உள்ள நல்ல மரத்திலிருந்து நெற்றுகளை சேகரித்து நாற்று தயாரிக்க வேண்டும். நல்ல மரம் என்றால் குறைந்தது 15 ஆண்டு வயதானதாகவும், எப்போதும் சுமாராக 35 மட்டைகளோடு வருடம் முழுவதும் பாளை விடும் மரமாக இருப்பது நல்லது. நாற்று விடும்போது படுக்கை வாக்கில் தேங்காயை வைத்தால் முளைப்பு திறன் அதிகம். நாற்று நான்காவது இலை வந்தப...

தென்னைக்கு மிகவும் உபயோகமான இரட்டை வரப்பு பாசனமுறை

        இரட்டை வரப்பு பாசனமுறை மரத்தின் தண்டில் இருந்து 4 அடி இடைவெளியில் ஒரு வட்ட வடிவ வரப்பும் 6 அடி இடைவெளியில் இன்னொரு வட்ட வரப்பும் போட்டு இரண்டுக்கும் நடுவில் ஒரு அடி தோண்டி அதில் நாங்கள் தயாரிக்கும் தென்னை சிறப்பு இயற்கை உரம் 15 கிலோ இட்டு மண் மூடி அதன் மேல் தக்கைப்பூண்டு விதை 200 கிராம் போட வேண்டும். இந்த பயிர் வளராந்து 50 நாளில் மிதித்து விட்டு மண் மூட வேண்டும். இதன் பயன்பாடு 1, மண்ணில் உறிஞ்சும் வேர்கள் உள்ள இடத்தில் பாசனம் செய்வதால் பாசன நீர் வீணாகாமல் பயன் தரும் 2, நீர் சேமிப்பு 3, மரத்தின் தண்டை ஒட்டி புது வேர்கள் மண்ணிற்கு மேல் பரவாமல் அது சரியாகும் 4, ஊட்டச்சத்து அறைகளை நோக்கி வேர்கள் வளரும் 5, பாசன நீரில் உள்ள உப்பு குறையும். உப்பு இரண்டு வரப்புகளில் உள்ள காற்றோட்டத்தால் உப்பு வெளியே படியும் 6, இரண்டு வரபபுகளுக்கு இடைப்பட்ட பகுதி மிதிபடாமல் இருப்பதால். நிலக்தாற்றோட்டம். அதிகமாகும். இந்த நிலக்காற்றோட்டம். வேர்கள் சத்துக்களை உறிஞ்சி எடுக்க உதவும் 7. சுற்றுவட்ட நீர் பாதையில் உள்ள அனைத்து வேர்களும் தூண்டப்பட்டு வேலை செய்யும் 8, நிறைய சல்லி வேர்கள் தோன்றும...