Ad Code

Ticker

6/recent/ticker-posts

தென்னை குரும்பை பூஞ்சாண நோய் கட்டுப்பாடு

Coconut nut fungal disease control



பூஞ்சாண நோய் கட்டுப்படுத்த முதலில் முறையான தண்ணீர் கொடுப்பது முக்கியம் . அடுத்து உரங்கள் அதிகமாக போடப்பட்டிருக்கலாம் அல்லது தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்கும் இடமாக இருந்தால் தென்னையில்  பூஞ்சாண நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு  




இந்த பூஞ்சாண நோயை கட்டுப்படுத்த முறையான மற்றும் தேவையான நீர் நிர்வாகம் கடைபிடிக்கவேண்டும் . தரைவழியில் ஒரு மரத்திற்கு 10 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி சூடோமோனஸ் கலந்து மரத்தை சுற்றி ஊற்றிவிட்டு வேண்டும் இதை பத்தாவது நாள் ஒரு முறையும் 20 வது நாள் தரை வழி ஊற்றி விட வேண்டும் . ஒரு முறையாவது மரத்தின் மேல் சென்று 1 லிட்டருக்கு 10 மில்லி கலந்து ஸ்ப்ரே செய்யவும் வாய்ப்பு இருந்தால் இரண்டாவது முறையும் செய்யலாம்  .

பாலைகள் வர இடத்தில என்ன மாதிரியான பிரச்சனைகள் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் . நீண்ட நாட்களாக பன்னாடைகளை சுத்தப்படுத்தாமல் உள்ளதா அல்லது தண்ணீர் தேங்கி நிற்கும் அமைப்பு மட்டைகளில் உள்ளதா என்று தேவை இல்லாததை சுத்தப்படுத்தினால் நல்லது . அடுத்து மட்டைகளில் காயம் ஏற்பட்டு இருந்தாலும் இந்த மாதிரி நடக்க வாய்ப்புண்டு . எனவே இதை கட்டுப்படுத்த சூடோமோனஸ் தெளிப்பது நல்லது 


தரைவழியும் இடுபொருட்கள் கொடுக்கவேண்டும் . எருக்கு கரைசல் இருந்தால் 5 லிட்டர் பத்து நாளைக்கு ஒரு முறை கொடுக்கலாம் இதை தொடர்ந்து 5 மாதங்களுக்கு கொடுக்கலாம் . அல்லது போராக்ஸ் சனத்தோடு கலந்தோ தண்ணீரோடு கலந்தோ மரத்தை சுற்றி வைக்கலாம் இதையும் 5 மாதம் தொடர்ந்து வைக்கலாம் 



நல்ல பராமரிப்பு இருந்தாலே தென்னையில் அழுகல் வராது .

Post a Comment

0 Comments