Skip to main content

Posts

Showing posts with the label மாடித்தோட்டம்

மாடித்தோட்டம் - கஸ்தூரி வெண்டை

 நறுமணம் மிக்க கஸ்தூரி வெண்டைக்காய் வெண்டைக்காய் தெரியும். அதென்ன கஸ்தூரி வெண்டை. சமீபகாலமா மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டங்கள்ல விதவிதமான நாட்டுக் காய்கறிகள தேடி பயிர் செய்றாங்க. அந்த வகையில இந்த கஸ்தூரி வெண்டையை நிறைய பேர் விரும்பி விதைக்கிறாங்க. பார்க்குறதுக்கு குட்டையா இருக்கும் இந்த வெண்டைக்காயை ஆண்டு முழுக்க சாகுபடி செய்யலாம். இதோட விதைகள் நறுமணம் மிக்கவைனு சொல்றாங்க. இதை வாசனை திரவியம் தயாரிப்புல பயன்படுத்துறாங்க. மூலிகையாகவும் ஆயுர்வேத மருத்துவத்துல பயன்படுத்தப்படுது. காய்கள் சாப்பிட மிகவும் ஏற்றது. விதைச்ச ரெண்டு மாசத்துக் குள்ள அறுவடைக்கு வந்துடும். இதன் விதைகள்ல இருந்து எண்ணெய்கூட எடுக்கப்படுகிறது . எங்கே வாங்கலாம் 1. Kasturi Venda seeds 25 pieces 2. GODSOWNCOUNTRYIN Kasturi venda - Abelmoschus moschatus, Kasturi okra seeds, Heirloom seeds, bhindi, Vegetable Seeds, kitchen planation (20) 3. kasthuri vendai

மாடித்தோட்டம் சில டிப்ஸ்

மாடித்தோட்டம் பராமரிப்பு குறிப்புகள்  நாம் எப்பொழுதும் மாடித்தோட்டத்துக்குள் நுழைஞ்சா செடிகளே நம்மளோடு பேசும். செடிக்கு தண்ணி பற்றாக்குறையா, எந்தச் செடிக்கு என்ன நோய் தாக்கியிருக்கு, ஏன் வளர்ச்சி குறைவாக இருக்குங்கிற விஷயத்த சொல்லிடும். செடிக்குத் தேவையானதைச் செய்தாலே செடி வளர்ந்துவிடும். காலை 8 மணிக்குள்ளும், மாலை 4.30 மணிக்கு மேலும் தண்ணி விடணும். கோடைக்காலத்தில தண்ணீர் பற்றாக்குறை இருப்பவர்கள் ஆடிப்பட்டத்தில் மட்டும் மாடித்தோட்டம் அமைச்சு பிப்ரவரி வரை வெச்சு கோடைக் காலங்கள்ல வளர்ப்பதை தவிர்த்துவிடலாம். திரும்பவும் ஆடிப்பட்டத்தில் அமைத்துக் கொள்ளலாம். மாடித்தோட்டத்தில் பூச்சி நோய்  பராமரிப்பு  “இலையின் நிறத்தை வைத்தே அதில் என்ன நோய் தாக்கியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். செடியில் இலைப்பேன் தாக்குதல் இருந்தால் பூந்திக் கொட்டையைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி தெளித்தாலே போதும் கட்டுப்படும். பூஞ்சணத்தாக்குதல், பூச்சிகளுக்கு வராமல் தடுப்பதற்கும் 1 லிட்டர் தண்ணீருக்கு, 3 மி.லி வேப்ப எண்ணெய் என்கிற விகிதத்தில் கலந்து தெளித்தால் போதும். செடிகளின் அளவைப் பொறுத...

மாடித்தோட்டத்துக்கு ஏற்ற மாம்பழ ரகங்கள் எவை, வளர்ப்பது எப்படி?

மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்துக்கு மக்களிடத்தில் எப்போதும் தாளாத ஈர்ப்பு உண்டு. இதோ, இந்த சீசனுக்கு வழக்கம்போல மாந்தோப்புகளில் மாம்பூக்கள், பிஞ்சுகளாக மாறி, காய்களாக உருவெடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், எல்லோருக்குமே தோட்டத்தில் மாம்பழங்களை விளைவித்துச் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால், சிலர் மாடித்தோட்டங்களில் மாம்பழங்களை விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் வளர்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில், மாடித்தோட்டங்களில் என்ன விதமான மாம்பழங்களை விளைவிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் . இந்த ரகங்கள் எல்லாம் சிறப்பு! ``இந்தியாவில் கிட்டத்தட்ட 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. இவற்றில் வணிக ரீதியாக 20 ரகங்கள் மட்டுமே அதிகமாக வளர்க்கப்படுகின்றன. வட இந்தியாவில் தஷேஹரி, லாங்கரா, பாம்பே கிரீன் வகைகள்; தென் இந்தியாவில் பங்கனப்பள்ளி, நீலம், காலாபாடி, ருமானி மற்றும் மல்கோவா வகைகள்; மேற்கு இந்தியாவில் அல்போன்சா, கேசர், மான்குராட், வன்ரான், லாங்க்ரா வகைகள்; கிழக்கு இந்தியாவில் சர்தாலு, சௌசா, மால்டா போன்ற வகைகள் வ...

You can easily set up a vegetable pandal in the terrace

மாடித்தோட்டத்தில் சுலபமாக காய்கறி பந்தல் அமைக்கலாம் . மாடித்தோட்டத்தில் நமக்கு , நமக்கு தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் விளைவித்து கொள்ளலாம் . மாடித்தோட்டத்தை பொறுத்தவரை கத்தரி , வெண்டை ,தக்காளி போன்ற செடி வகை பயிர்களையோ அல்லது கேரட் ,உருளை ,முள்ளங்கி போன்ற மண்ணுக்குள் அடியில் விளையும் பயிர்களைத்தான் அதிகம் பயிர் செய்வோம் . ஆனால் அவரை ,புடலை , பீர்க்கன் போன்ற கொடிவகை பயிர்களை நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை . இதற்கு பெரும்பாலும் பணம் அதிகம் செலவாகும் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் நம்மால் குறைந்த செலவில் பந்தல் அமைத்து நம்மால் அதிகம் காய்கறிகள் எடுக்க முடியும் அதேசமயம் நமக்கு செடி வகை காய்கறிகளுக்கு பயிர் செய்ய இடம் கிடைக்கும் . நாம் இந்த கட்டுரையில் குறைந்த செலவில் எப்படி பந்தல் அமைக்கலாம் என்று பார்க்கலாம் . குறைந்த செலவில் பந்தல்  மாடி தோட்டமாக இருந்தாலும் சரி அல்லது வீட்டில் பின்புறமாக இருந்தாலும் சரி இரண்டு வகைகளில் நாம் காய்கறி பந்தல் அமைக்கலாம் . ஓன்று மூங்கில்  மற்றும் மண் பைகளை வைத்து தாற்காலிகமாக காய்கறி பந்தல் அமைக்கலாம் அல்லது இரும்பு பைப் (L...

மாடித்தோட்டமும் டீ தூளும்

மாடித்தோட்டத்தில் டீ தூளின் பயன்பாடு நம் வீட்டில் யாராவது ஒருத்தர் கட்டாயம் டீ குடிப்பவரா இருக்கலாம் அல்லது ஒரு வே ளையாவது டி குடிக்கலாம் . டீ தயாரித்து விட்டு பெரும்பாலும் அந்த டீத்தூளை நாம் வெளியே தூக்கி விட்டெறிந்து விடுவோம் . ஆனால் அதை தூக்கி எரியாமல் உங்கள் மாடித்தோட்டத்தில் பயன் படுத்தினால் என்ன நன்மைகள் என்று இந்த கட்டுரையில் பார்ப்போம் .  டீ பேக் முதலில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் டீ தூளை கொட்டும்போது மக்கிவிடும் அதே டீத்தூளை பேக் உடன் போடும்போது அது மக்குமா ? தாராளமாக 3 முதல் 4 மாதத்திற்குள் மக்கிவிடும் . பெரும்பாலும் இந்த பேக் Manila hemp எனப்படும் வாழை நாரிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது . இருந்தாலும் உங்கள் செடிக்கு போடுவதற்க்கு முன்பு டீ பேக் எதில் தயாரிக்கபட்டுள்ளது என்பதை பார்த்துவிட்டு பேக் உடன்பயன்படுத்தலாம்.   டீ இலைகளில் tannic acid மற்றும் இயற்கை சத்துக்கள் உள்ளன டீ தூளை தொட்டியில் போடும்பொழுது அது மக்கி செடிகளுக்கு தேவையான சத்துக்களை கொடுத்து ஆரோக்கியமாக வளர உதவுகிறது . வீட்டில் பயன்படுத்தும் காய்கறிக்கழிவுகளையோ மற்றும் டீ தூள் உரமாக பயன்பட...

மாடி தோட்டத்தில் ரோஜா செடி வளர்க்கும் போது கவனிக்க வேண்டியவை

மாடி தோட்டத்தில் ரோஜா செடி மாடி தோட்டத்தில் ரோஜா செடி வளர்க்கும் போது ஒரு சில சின்னச் சின்ன விஷயங்களை நீங்க கவனம் எடுத்து  செய்தால் செடியும் நல்லா வளரும் பூக்களும் வந்து நிறைய பூக்கும் பொதுவா மாடித்தோட்டத்தில் தொட்டியில் செடி வச்சிருக்கீங்க அப்படின்னா தண்ணீர்  அடிக்கடி கொடுக்கக்கூடாது ஒரு மூணு நாளைக்கு ஒரு தடவையோ அல்லது நாலு நாளுக்கு ஒரு தடவையோ டம்ளர்ல  தண்ணீர்   கொடுக்கணும் உங்களுக்கு ஒருவேளை தினசரி தண்ணீர்  கொடுக்கணும்  நினைச்சீங்கன்னா காலை வேளையில்  டம்ளரில் அரை டம்ளர் தண்ணீர் வந்து உங்களுடைய ரோஜா செடிக்கு  கொடுக்கலாம் . இதை மாலைவேளையில் செய்யக்கூடாது ஏன் எனில் காலைவேளையில் நீர் கொடுக்கும்போது செடி நீர் எடுத்து போக மீதம் ஆவியாக போய்விடும் . டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சை தொற்று மற்றும் செடிகளில் இருந்து இலைகள் வந்து படுகிறது போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கு சூடோமோனஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி. இதில் சூடோமோனஸ் ஒரு தொட்டிக்கு 20 கிராம் என்ற அளவில் 15 நாளைக்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ  தண்ணீரில் கலந்து வேர் பகுதிகள...

மாடித்தோட்டத்தில் அதிக விளைச்சலுக்கு 7 நாள் கவனிப்பு

terrace farming at home இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சின்னதா மாடிதோட்டம் வைக்கவேண்டும் என்று எல்லாரிடமும் ஆசை உள்ளது . அடுக்கு மடியில் உள்ளவர்கள் கூட பால்கனியில் சின்னதாக தோட்டம் வைக்க ஆசை படுகின்றனர் . இது ஆசைக்காக மட்டுமில்லாமல் இயற்கையாக விளைந்த காய்கறிகளை உன்ன வேண்டும் என்ற விழிப்புணர்வையே காட்டுகிறது . நாம் இந்த கட்டுரையில் மாடி தோட்டத்தில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் மற்றும் அதிக மகசூல் எடுக்க 7 நாள் கவனிப்பு பற்றியும் பார்ப்போம் . புதிதாக மாடி தோட்டம் ஆரம்பிப்பவர்களுக்கு  - terrace farming  குரோ பேக் - Grow bag புதுசா ஆரம்பிக்க போரிங்கான முதலில் குரோ பேக் கவனம் செலுத்துங்கள் எந்த செடி வைக்கபோகிறீர்களோ அதற்கேற்றாற்போல் தேர்ந்தெடுங்கள் , அடுத்ததாக சரியான மண் கலவை இடுங்கள் , குரோ பேக்ல் போட்டவுடன் நடுவதை விட இரண்டு நாட்கள் நீர் ஊற்றி பின்பு நட்டால் நன்றாக இருக்கும் . இந்த குரோ பேக்கை நேரடியாக தரையில் வைக்காமல் மரப்பலகை , செங்கல் வைத்து அதன் மேல் வைக்கலாம்  ஷேடு நெட்  - shade net  மாடித்தோட்டம் வைக்கும் பெரும்பாலோர் வெயில் அதிகம் இருக்கும் என்...

மாடி தோட்டத்தில் தக்காளியை வளர்ப்பதற்கான 8 டிப்ஸ்

        plants for balcony garden and planting Tomato  ஒரு  தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும்  செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில்  குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் .  அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட  பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் . சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்   தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே  ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம்  அவை 4 முதல் 6 அடி வளர...

மாடித்தோட்டமும் மண் கலவை வகைகளும்

Terrace and soil mix types மாடி தோட்டத்தை பொறுத்தவரை ஒரு மண் கலவை தேர்ந்தெடுத்தல் என்பது உங்கள் மாடித்தோட்டத்தை எவ்வளவு காலம் சரியாக கொண்டு செல்விர்கள் என்பதை முடிவு செய்யக்கூடியது . எனவே மாடித்தோட்டத்தில் சரியான மண் கலவை என்பது  உங்கள் விதையை விரைவாக முளைக்க செய்யும் , நன்றாக வளர செய்யும் , பூக்க செய்யும் , காய்க்க செய்யும் . நாம் இந்த கட்டுரையில் மண் கலவையில் உள்ள நன்மைகளும் மற்றும் என்ன வகையான மண் கலவைகள் பயன்படுத்தலாம் என்பதை நாம் பார்ப்போம் .   1) சிறந்த மாடி தோட்ட மண் கலவையென்பது களைகள் இன்றி இருப்பது . ஆனால் மண் , மணல் பயன்படுத்தும் போது களைகள் அதிகம் வரலாம் இதற்கு நீங்கள் மண் கலவையை தொட்டி அல்லது பையில் போட்டு மூன்று நாள் தொடர்ந்து தண்ணீர் விடுங்கள் களை விதைகள் இருந்தாள் முளைத்துவிடும் பின்பு நீங்கள் விதைகளை தூவலாம் . 2) மண் கலவைகள் மட்டுமே பயன் படுத்தும் போது சில விதமான பிரச்சனைகள் ஏற்படலாம் .   A ) ஆரம்பத்தில் மண்கலவை நன்றாக இருந்தாலும் போக போக மண் இறுகி போய்விடும் செடிகளால் சரியாக சுவாசிக்க முடியாது . வெண்டை , கத்தரி , முள்ளங்கி போன்ற ஒருபருவ பயிர்களுக்...

மாடி தோட்டத்தில் கீரை வளர்ப்பு - சில நுணுக்கங்கள்

Growing lettuce in the terrace garden - some tricks கட்டு பத்து ரூபாயில் கிடைக்கக்கூடிய மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவு பொருள் கீரை . கீரையை நம் தேவைக்கேற்ப வீட்டுத்தோட்டத்திலேயே வளர்க்கலாம் . மற்ற  காய்கறிகளை விட கீரை வளர்ப்பது கொஞ்சம் சுலபம் அதில் சில நுணுக்கங்கள் பற்றி பார்ப்போம் . பேக் -Bag மற்ற செடிகள் போல் இல்லாமல் கீரைகளை நாம் நெருக்கமாக வளர்க்க முடியும் . அதே சமயம் நாம் கொஞ்சம் பெரிய சைஸ் பைகளை தேர்தெடுப்பது நல்லது அப்பொழுதுதான் குறைந்த இடத்தில் அதிக கீரைகளை நாம் வளர்க்கமுடியும்  Bag size                      18 x 9 Inch                                     6 x 4 x 1 feet கீரை வகைகள்  கீரையை பொறுத்தவரை பல வகையான வகைகள் உள்ளன அதில் உங்களுக்கு எது தேவையோ அதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் . அதை நீங்கள் இரண்டு விதமாக செய்யலாம் அதில் ஒரு முறை மட்டும் அறுவடை செய்யக்கூடிய கீரைகள் (தண்டு கீரை) மற்றொன்று பலமுறை அறுவடை செ...

வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க மானியம்

Subsidy to set up a vegetable garden on the terrace of the house புதிய திட்டம் தொடக்கம்வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. "நீங்களே செய்து பாருங்கள்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது  இந்தத் திட்டத்தின் கீழ், வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கத் தேவையான காய்கறி விதைகள், உரங்கள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.  என்னென்ன காய்கறிகள்: கத்தரி, வெண்டை,தக்காளி, மிளகாய், அவரை, கொத்தவரை,முள்ளங்கி, கீரைகள், கொத்தமல்லி ஆகியவற்றை மாடி தோட்டத்தில் வளர்க்கலாம்.  இந்த செடிகள் அனைத்தையும் வளர்க்க மொட்டை மாடியில் 160 சதுர அடி இடம் இருந்தால் போதுமானது. இதற்கான மகசூல் காலம் 30 நாள்களில் இருந்து 6 மாதங்கள் வரை ஆகும். மாடித் தோட்டம் அமைப்பதன் மூலம் 1 கிலோ முதல் 15 கிலோ வரை காய்கறிகள் மற்றும் கீரைகளை மகசூலாகப் பெறலாம். இதற்கு தேவையான பொருள்கள் மானிய விலையில் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.  மானியமாக கிடைக்கும் பொருள்கள்: 2 கிலோ தேங்காய் நார் க...

வீட்டு தோட்டத்திற்க்கு இயற்கை பூச்சி விரட்டி பப்பாளி இலைக் கரைசல்

Natural insect repellent papaya leaf solution for home garden பப்பாளி இலைக்  கரைசல்   நம் வாழ்க்கையில் விரும்பி சாப்பிட்ட பழங்களில் பப்பாளிக்கு எப்பவுமே ஒரு தனி இடம் உண்டு . பப்பாளியின் பச்சை இலை எப்பொழுதுமே நம் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் . பப்பாளியில் எப்பொழுதுமே வைட்டமின் A சத்து அதிகமாக காணப்படும் , இது நம் உடம்பிற்க்கு தேவையான ஒன்றாகும் ,  பப்பாளி அழுகு சாதன பொருளாகவும் பயன்படுகிறது. பப்பாளி சிறந்த பூச்சி விரட்டியாகவும், பயிர் வளர்ச்சியூக்கியாகவும்  செயல்படுகிறது . பப்பாளி சாற்றை தெளிப்பதால் வெள்ளை புள்ளி , ஏபிட்ஸ் , நத்தை , எறும்புகள் வராமல் தடுப்பதோடு like leaf blight, plant blight, leaf curling and rot போன்றவற்றையும் வராமல் தடுக்கிறது . பப்பாளி இலைக் கரைசல் எப்படி தயாரிப்பது  புதிதாக வந்த இலையை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது பெரிய இலையை சிறுதுண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளலாம் , அதில் அரை கப் தண்ணீரை ஊற்றி அதனுடன் 4 நறுக்கிய வெள்ளைப்பூண்டை போட்டு 12 மணிநேரம் வைக்கவேண்டும் .  பின்பு அதில் கொஞ்சம் நீரை ஊற்றி கையால் பிழிந்து வடிகட்ட...