Ad Code

Ticker

6/recent/ticker-posts

வீட்டு தோட்டத்திற்க்கு இயற்கை பூச்சி விரட்டி பப்பாளி இலைக் கரைசல்

Natural insect repellent papaya leaf solution for home garden



பப்பாளி இலைக்  கரைசல் 

 நம் வாழ்க்கையில் விரும்பி சாப்பிட்ட பழங்களில் பப்பாளிக்கு எப்பவுமே ஒரு தனி இடம் உண்டு . பப்பாளியின் பச்சை இலை எப்பொழுதுமே நம் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் . பப்பாளியில் எப்பொழுதுமே வைட்டமின் A சத்து அதிகமாக காணப்படும் , இது நம் உடம்பிற்க்கு தேவையான ஒன்றாகும் ,  பப்பாளி அழுகு சாதன பொருளாகவும் பயன்படுகிறது. பப்பாளி சிறந்த பூச்சி விரட்டியாகவும், பயிர் வளர்ச்சியூக்கியாகவும்  செயல்படுகிறது . பப்பாளி சாற்றை தெளிப்பதால் வெள்ளை புள்ளி , ஏபிட்ஸ் , நத்தை , எறும்புகள் வராமல் தடுப்பதோடு like leaf blight, plant blight, leaf curling and rot போன்றவற்றையும் வராமல் தடுக்கிறது .

பப்பாளி இலைக் கரைசல் எப்படி தயாரிப்பது 



புதிதாக வந்த இலையை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது பெரிய இலையை சிறுதுண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளலாம் , அதில் அரை கப் தண்ணீரை ஊற்றி அதனுடன் 4 நறுக்கிய வெள்ளைப்பூண்டை போட்டு 12 மணிநேரம் வைக்கவேண்டும் .  பின்பு அதில் கொஞ்சம் நீரை ஊற்றி கையால் பிழிந்து வடிகட்டி பப்பாளி இலை சாற்றை எடுக்க வேண்டும் . இதனுடன் ஒரு கப் வடித்த கஞ்சி மற்றும் தண்ணீர் சேர்க்கவேண்டும் 


இந்த பப்பாளி கரைசலை பாதிக்கப்பட்ட செடிகளுக்கு 1வது நாள் மற்றும் 7 வது  தெளிக்கலாம் தெளித்த ஒருவாரத்தில் நல்ல பலன்தெரியும். மழை காலத்தில் தெளிப்பதை தவிர்த்து விடுங்கள் . காலை 8 மணிக்குள் தெளிப்பது நல்ல பலன்கள்தரும் .



 இந்த பப்பாளி கரைசல் பட்டாணியில் வெள்ளை ஈ மற்றும் அஸ்வினி தாக்குதலை குறைகின்றது  , தக்காளியின் இலைகள் மஞ்சளாக மாறுவதை தடுக்கும் கத்தரியில் இலை புள்ளி நோயை குறைக்கும் .


Post a Comment

0 Comments