Skip to main content

Posts

Showing posts with the label மண்புழு உரம்

நமக்கு தேவையான மண்புழு உரத்தை எப்படி வீட்டிலேயே தயாரிக்கலாம்

how make vermicompost at home விவசாயியோட ஒரு சிறந்த நண்பன்  யாருனு கேட்டா அனைவரும் சொல்லக்கூடிய முதல் பதில் மண்புழுதான் . விவசாயம் சார்ந்த தொழில்களில் குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடிய தொழில் மண்புழு தயாரிப்புதான் . ஒரு கிலோ மண் புழு தயாரிக்க 4 முதல் 6 ரூபாய் வரை ஆகும் , சந்தையில் கிலோ 10 முதல் 15 ரூபாய் வரை போகிறது .  பொதுவா உரத்தை தயாரிப்பதற்கு இரண்டு விதமான வழிமுறைகள் உண்டு ஹாட் மற்றும் கோல்டு . இதில் கோல்டு  முறை என்பது ஒரு குழியிலோ அல்லது தொட்டியிலோ நாம் தினமும் பயன்படுத்தும் உணவு பொருட்களான காய்கறி மற்றும் அதன் தோல்கள் , பழங்கள் , காப்பித்தூள் , முட்டை ஓடுகள் , போன்றவற்றை போட்டு மூடி வைத்துவிடலாம் . ஆனால் இது நன்றாக மக்கி உரமாக  குறைந்தது ஒருவருடமாகலாம் .  அடுத்ததாக ஹாட் முறை . இந்த முறையில் நுண் உயிர்கள் மூலம் வீட்டு கழிவு பொருட்களை மக்கச்செய்து உரமாக்குவது . இதற்கு மக்கச்செய்யும் நுண்கிருமிகள் (டீகம்போஸர்) நீர் நல்ல காற்றுவசதி தேவை .       இந்த முறையில் உரம் உருவாக மூன்று முதல் 4 மாதம் வரை ஆகும் . இந்த இரண்டு முறையையும் ...

மண்புழு உரம் தயாரிக்கும் முறை

பத்து சத்துக்கள் அடங்கிய பக்காவான இயற்கை உரம்… மகசூலும் அதிகரிக்க வேண்டும்; மண்வளமும் பாதுகாக்கப்பட வேண்டுமா? அதற்கு ஒரே வழி இயற்கை உரங்கள்தான். அந்த இயற்கை உரங ்களில் மிகச் சிறந்தது எது என்றால் மண்புழு உரம்தான். விவசாயிகளுக்காக இரவு பகல் என 24 மணி நேரமும் உழைக்கும் உயிரினம். அதனை நாம் பக்குவமாகப் பயன்படுத்தினால் பலமடங்கு பயன் அடையலாம். அதைத்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்து வருகிறார், திப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா மொடக்குபட்டியைச் சேர்ந்த திரு. எம். ஜெயபிரகாஷ். தமது தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்காக ஆரம்பித்து சுற்றுவட்டார பகுதிகளுக்கும் பயன்படும் விதத்தில் உற்பத்தியை அதிகரித்துள்ளார். மண்புழு உரம் தயாரிக்கும் முறை உரம் தயாரிப்பதற்கு ஏற்ற அளவு தொட்டி கட்டி அதில் ஒரு அடி உயரம் வரைக்கும் தேங்காய் மட்டைகள் அடுக்கப்படுகிறது. ஒரு அடி வரைக்கும் பண்ணைக்கழிவுகள், காய்கறிக் கழிவுகள், தென்னை நார்க் கழிவுகளில் ஏதாவது மக்கும் கழிவுகளை ஒன்றும், பின்பு அரையடி அளவுக்கு மாட்டுச் சாணமும் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு தொட்டியளவுக்கேற்றவாறு மாற்றி, மாற்றி மேலிருந்து அரையடியளவு இடை...