Skip to main content

Posts

Showing posts from April, 2023

மரம் வளர்த்தால் பணம் விளையும்

மரங்கள்... நிழல் தரும், பூ தரும், காய் தரும், கனி தரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்று சர்வதேச சந்தையில் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் தொழில் ஆதாரமாகவும் மரங்கள் திகழ்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒருகாலத்தில் இந்தியாவிலிருந்துதான் மரங்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. முதுமலைத் தேக்கு, டாப்ஸ்லிப் தேக்கு, தஞ்சாவூர் தேக்கு என நம் மண்ணில் செழிப்பாக விளைந்த பல வகையான தேக்கு மரங்கள் உலகின் பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. ஆனால், இன்றைய நிலைமை என்ன தெரியுமா? கடந்த பத்து ஆண்டுகளாக, மர வேலைப் பாடுகளுக்கான மரங்கள், வெளிநாடு களிலிருந்துதான் இந்தியாவுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்போது உலகச் சந்தைகளில் நம்முடைய பாரம்பர்ய தேக்கு மரங்களைக் காண்ப தென்பது மிகவும் அரிதாகி வருகிறது. கானா தேக்கு, நைஜீரியா தேக்கு, கொலம்பியன் தேக்குகள்தான் அதிகம் கிடைக்கின்றன. இதன் காரணமாக மர வேலைப்பாடுகளுக்கான மரங்களின் விலை சகட்டுமேனிக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. மரங்களின் தேவை ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில்தான் மர வேலைப்பாடு