Skip to main content

Posts

Showing posts from June, 2021

சுவையான தக்காளி செடி வளர்ப்பு

tomato cultivation methods தக்காளி , வெங்காயத்திற்கு அப்புறம் நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் காய்கறி . நம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் சுவை நன்றாக இருக்கவேண்டுமென்றால் கெமிக்கல் விவசாயத்தை தவிர்த்து இயற்கை விவசாயத்தை செய்யலாம் . நமக்கு தேவையான தக்காளியை நாமே நம் வீட்டின் பின்புறத்திலோ அல்லது மாடியில வளர்க்கலாம் . நாம் இந்த கட்டுரையில் சுவையான தக்காளி செடியை எப்படி வளர்க்கலாம் என்று பார்க்கலாம் . நல்ல தக்காளி கன்று மற்றும் ரகத்தை  தேர்ந்தெடுங்கள்  மிகவும் ஒல்லியான கன்றை தேர்ந்தெடுக்க வேண்டாம் , உயரமான தக்காளி கன்றை தவிர்த்து கொஞ்சம் சின்ன தக்காளி நாற்றுகளை தேர்வுசெய்யலாம் . அதிக வேர்கள் உள்ள செடியையும் தவிர்த்துவிடுங்கள்  . அல்லது விதைகள் வாங்கி நேரடியாக கூட விதைக்கலாம் . தக்காளியை பொறுத்தவரை நூறுக்கு மேற்பட்ட ரகங்கள் உள்ளன உங்கள் தேவைக்கேற்ப அதை தேர்ந்தெடுக்கலாம் வெளிச்சம்  நீங்கள் வீட்டுத்தோட்டத்தில் தக்காளி செடியை வளர்க்க குறைந்தது 6 மணி நேரம் சூரிய வெளிச்சம் உள்ள பகுதியை தேர்ந்தெடுங்கள் . இதனால் அதிக தக்காளி பழங்கள் வருவதோடு நல்ல சுவையாகவும் இருக்கும் .  மண

காய்கறி தோட்டத்தில் எறும்பு கட்டுப்பாடு

ants control methods vegetable garden  விவசாயத்தை பொறுத்தவரை எறும்புகள் நல்லவனா இல்லை கெட்டவனா என்று கேள்வி கேட்டால் பதில் சில நேரங்களில் நல்லவன் சில நேரங்களில் கெட்டவன் என்றுதான் பதில் சொல்ல முடியும் . எறும்புகள் நல்லவன் என்பதற்கு உதாரணம் சொல்லணுமுனா , உங்களுக்கு ஜாதவ் பயேங் பற்றி தெரியுமா , அவர்தான் பிரம்மபுத்திரா நதி வறண்ட தீவுகளில் தனி ஒரு ஆளாக பெரிய காட்டை உருவாக்கியவர் . அந்த வரண்ட இறுகிய நில மண்ணை பண்படுத்த அவர் பயன்படுத்தியது சிவப்பு எறும்புகளைத்தான் , இதிலிருந்து புரிந்திருக்கும் ஒரு மண் வளமாக்க எறும்பு எவ்வளவு முக்கியம் என்று . சில சமயங்களில் எறும்புகள் சிறந்த பால்லினேட்டராகவும் செயல் படுகிறது . அப்ப எறும்புகளால் என்ன பாதிப்பு ? இப்ப ஒரு தேனியை எடுத்துக்கொண்டால் பறந்து சென்று மகரந்தத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடும் . அதுவே எறும்பு ஊர்ந்து சென்று எடுக்கும் அதன் கால்களில் ஓட்டும் தேன் செடிகளில் பரவி பூஞ்சை நோயை உருவாக்கும் . மண் பகுதியில் இருக்கும் போது செடிகளின் வேர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் , சில சமயம் பழங்களுக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தும். நாம் இந்த கட்டுரையில்

நம் வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய இயற்கை பூச்சி விரட்டிகள்.

natural pesticides ஒரு பூச்சி கொல்லி பயன்படுத்துவதால் தீமை செய்யும் பூச்சிகளை அழித்துவிட முடியுமென்றால் முற்றிலுமாக முடியாது , அதிலிருந்து தப்பும் பூச்சிகள் பூச்சிகளை அழிக்க நாம் மறுபடியும் தெளிக்க வேண்டிவரும் , இப்படியே செய்தால் பூச்சிகள் எதிர்ப்பு சக்தி உருவாக்கிக்கொண்டு அழிக்கமுடியதாகிவிடும் . இப்படி பூச்சிக்கொல்லிகளை அடிக்கடி தெளிப்பதால் , மண் மலடாகிவிடும் ,நன்மை செய்யும் உயிரினங்கள் இருக்காது, சுற்றுசூழல் பாதிக்கப்படும் , மேலும் அதில் விளைந்த காய்கறிகளை சாப்பிடும் நமக்கும் கேடு வரும் . இது வீட்டு  மற்றும் மாடி தோட்டத்திற்கும் பொருந்தும் . இதையெல்லாம் தவிப்பதற்கு நாம் இயற்கை விவசாயத்திற்கு மாறலாம் , இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம் . நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுலபமாக எப்படி பூச்சி விரட்டி தயாரிக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம் , வேப்ப இலை  இயற்கை பூச்சி விரட்டி என்றவுடன் முதலில் நமக்கு தோன்றுவது வேப்பமரம்தான் , இது மருத்துவரீதியாகவும் , பூச்சி மற்றும் புழுக்களை விரட்டவும் பயன்படுகிறது . இது விலங்குகள் , பறவைகள் , செடிகளுக்கு எந்த ஒரு பாதிப்பைய

உலகின் மிக விலையுயர்ந்த 6 மலர்கள்

expensive flowers in the world இயற்கை  கொடுத்த பெரிய பரிசு தாவரங்கள் , அந்த தாவரங்கள் நமக்கு கொடுத்த பரிசு பூக்கள் , இந்த பூக்கள் அழகான வடிவமைப்பை கொண்டது , தாவரங்களை பொறுத்தவரை அதுதான் மறு உற்பத்தி செய்வதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது . ஆதி காலத்திலிருந்தே பூக்களின் அழகு, நிறம் , வாசணை , தோற்றத்திற்காக பயன்படுத்தப்படுகிறது . பூக்கள் எப்பொழுதுமே அன்பின் அடையாளம் , கடவுள் சார்ந்த நம்பிக்கை ஆக பார்க்கப்படுகிறது . இன்றய நாட்களில் காய்ந்த பூக்கள் கூட வருமானம் கொடுக்கிறது . பூக்கள் எதர்க்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது  பொக்கே செய்வதற்காக நாம் பூக்களை பயன்படுத்துகிறோம்  ( expensive flowers bouquet) நாம் வீட்டில் பூக்கள் நிறைந்த தோட்டத்தை பார்க்கும்போது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் , நம் வீட்டிற்கு பறவைகள் , பட்டாம்பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் . காய்ந்த மலர்களை வைத்து நம் வீட்டில் நீண்டநாள் வரும்படியான அலங்காரம் செய்யலாம் . வண்ண சாயங்கள் தயாரிப்பதற்கு பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன   பண்டைய காலத்திலிருந்தே பூக்கள் இருந்து மருந்துகள் தயாரிக்க படுகின்றன . சில பூக்கள்  தொண்டை வலி

காய்கறி பயிர்களில் மூடாக்கு

mulching helps in vegetables crops  மூடாக்கு ஏன் அவசியம் - impotance of mulching  நம்மிடம் இருக்கும் பொருட்களை கொண்டு உதாரணமாக வைக்கோல் , இலை தலைகள் கொண்டு மண்ணை மூடி வைப்பதை மூடாக்கு என்போம் , தோட்டக்கலை பயிரிகளில் மரங்களை சுற்றி உயிர் மூடாகும் போடப்படுகிறது . நம் நாடு நான்கு விதமான பருவ நிலைகளை கொண்டது மழை காலங்களில் அதிகமான களைகள் வளரும் அதுவே வெயில் காலங்களில் வரட்சி ஏற்பட்டு அதிக படியான நீர் ஆவியாகும் , நீர் மட்டும் ஆவியாகாது அதனுடன் சேர்ந்து நாம் கொடுத்துள்ள உரங்களும் ஆவியாகி சென்றுவிடும் மண் புழு பூமிக்கு அடியில் சென்று விடும் , சரியான நுண்ணுயிர் பெருக்கம் இருக்காது . இதை எல்லாம் தவிர்க்கவே மூடாக்கு செய்யப்படுகிறது. நாம் இந்த கட்டுரையில் எந்த பொருட்களை பயன்படுத்தி காய்கறி பயிர்களில் முடக்கு போடலாம் என்று பார்க்கலாம்  வைக்கோல் மூடாக்கு - straw mulching  இந்த மூடாக்கு பொதுவா எல்லாரும் பயன்படுத்துவது . இது அதிக சூரிய வெளிச்சம் போகவிடாது . மண் நன்றாக வளப்படுத்தும் , நெல் அல்லது கோதுமையில் இருந்து பெறப்படும் வைக்கோல்களை பயன்படுத்தலாம் . ஆனால் இந்த வைக்கோல்லை உங்களுக்கு மி

மாடித்தோட்டத்தில் அதிக விளைச்சலுக்கு 7 நாள் கவனிப்பு

terrace farming at home இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சின்னதா மாடிதோட்டம் வைக்கவேண்டும் என்று எல்லாரிடமும் ஆசை உள்ளது . அடுக்கு மடியில் உள்ளவர்கள் கூட பால்கனியில் சின்னதாக தோட்டம் வைக்க ஆசை படுகின்றனர் . இது ஆசைக்காக மட்டுமில்லாமல் இயற்கையாக விளைந்த காய்கறிகளை உன்ன வேண்டும் என்ற விழிப்புணர்வையே காட்டுகிறது . நாம் இந்த கட்டுரையில் மாடி தோட்டத்தில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் மற்றும் அதிக மகசூல் எடுக்க 7 நாள் கவனிப்பு பற்றியும் பார்ப்போம் . புதிதாக மாடி தோட்டம் ஆரம்பிப்பவர்களுக்கு  - terrace farming  குரோ பேக் - Grow bag புதுசா ஆரம்பிக்க போரிங்கான முதலில் குரோ பேக் கவனம் செலுத்துங்கள் எந்த செடி வைக்கபோகிறீர்களோ அதற்கேற்றாற்போல் தேர்ந்தெடுங்கள் , அடுத்ததாக சரியான மண் கலவை இடுங்கள் , குரோ பேக்ல் போட்டவுடன் நடுவதை விட இரண்டு நாட்கள் நீர் ஊற்றி பின்பு நட்டால் நன்றாக இருக்கும் . இந்த குரோ பேக்கை நேரடியாக தரையில் வைக்காமல் மரப்பலகை , செங்கல் வைத்து அதன் மேல் வைக்கலாம்  ஷேடு நெட்  - shade net  மாடித்தோட்டம் வைக்கும் பெரும்பாலோர் வெயில் அதிகம் இருக்கும் என்று ஷேடு நெட் வைப்பார்கள்