Skip to main content

Posts

Showing posts with the label Smart vivasayi

மாடித்தோட்டத்துக்கு ஏற்ற மாம்பழ ரகங்கள் எவை, வளர்ப்பது எப்படி?

மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்துக்கு மக்களிடத்தில் எப்போதும் தாளாத ஈர்ப்பு உண்டு. இதோ, இந்த சீசனுக்கு வழக்கம்போல மாந்தோப்புகளில் மாம்பூக்கள், பிஞ்சுகளாக மாறி, காய்களாக உருவெடுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், எல்லோருக்குமே தோட்டத்தில் மாம்பழங்களை விளைவித்துச் சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதனால், சிலர் மாடித்தோட்டங்களில் மாம்பழங்களை விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் வளர்த்து வெற்றியும் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில், மாடித்தோட்டங்களில் என்ன விதமான மாம்பழங்களை விளைவிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம் . இந்த ரகங்கள் எல்லாம் சிறப்பு! ``இந்தியாவில் கிட்டத்தட்ட 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. இவற்றில் வணிக ரீதியாக 20 ரகங்கள் மட்டுமே அதிகமாக வளர்க்கப்படுகின்றன. வட இந்தியாவில் தஷேஹரி, லாங்கரா, பாம்பே கிரீன் வகைகள்; தென் இந்தியாவில் பங்கனப்பள்ளி, நீலம், காலாபாடி, ருமானி மற்றும் மல்கோவா வகைகள்; மேற்கு இந்தியாவில் அல்போன்சா, கேசர், மான்குராட், வன்ரான், லாங்க்ரா வகைகள்; கிழக்கு இந்தியாவில் சர்தாலு, சௌசா, மால்டா போன்ற வகைகள் வ...

நன்மை தரும் பூச்சிகள் -1

விவசாயத்தில் பயிர்களைச் சேதப்படுத்தி தீமை விளைவிக்கும் பூச்சிகளை அழித்து நன்மை தரும் பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் உள்ளன. பயிர்களை பாதிக்கும் பூச்சிகளை அழிக்கும் பூச்சிகள் இயற்கை எதிரிகள் என்ற பொதுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, இந்த நன்மை செய்யும் பூச்சிகளை விவசாயிகள் அறிந்து, அவற்றைப்பாதுகாப்பது அவசியம். தீமை செய்யும் பூச்சிகளை தாக்கி அழிக்கும் இயற்கை எதிரிப் பூச்சிகள் சிலவற்றை பற்றி இக்கட்டுரையில் காண்போம்    இரை விழுங்கி அல்லது ஊன் விழுங்கி காட்டில் புலி மானை வேட்டையாடி சாப்பிடுவது போல சில நன்மை செய்யும் பூச்சிகள் நம் விளை நிலங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் தீமை செய்யும் பூச்சிகளை வேட்டையாடி தன் உணவாக எடுத்துக் கொள்கிறது. இப்படிப்பட்ட நன்மை செய்யும் பூச்சிகள் இரை விழுங்கி அல்லது ஊன் உண்ணி என்று  அழைக்கப்படுகிறது. பின்வரும் பூச்சிகள் இரை விழுங்கி அல்லது  ஊன் விழுங்கிகளுக்கான சில உதாரணங்களாகும். கிரைசோபா: இவ்வகை பூச்சிகளில் ஆண் பூச்சிகள் 10 முதல் 12 நாளும், பெண் பூச்சிகள் 35 நாளும் உயிர்வாழும். 500 முதல் 600 முட்டைவரை இடும்....

கத்தரியில் குருத்து மற்றும் காய்துளைப்பான் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

  கத்தரி, சோலானம் மெலான்சினா தெற்காசியாவின்  மூன்று முக்கி ய காய்கறி பயிர்களில் ஒன்றாகும், இது உலகின் பரப்பளவில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் சாகுபடி செய்யப்படுகின்றது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக, கத்தரிக்காய் உற்பத்தியில்  இந்திய  இரண்டாவது இடம் வகிக்கின்றது  இது இந்தியாவில் வணிக மற் றும்தோட்டப்பயிராகவும் வளர்க்கப்படுகிறது. இது ‘ காய்கறிகளின் அரசன் ’ என்றும் ஏழைகளின் காய்கறி ’ என்றும்  அழைக்கப்படுகின்றது. 35 க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களால் கத்திரி பயிர்,நாற்றங்காலில் இருந்து அறுவடை வரை தாக்கப்படுகிறது. இவற்றில், கத்தரிக்காய் குருத்து மற் றும் காய் துளைப்பான் , லியூசினோடஸ் ஆர்போனாலிஸ், 50-90 % அளவில் கத்திரி பயிரில் பெரும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு பயிர்பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாத போது 90% மேல் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகிறது. கத்தரி பயிரின் இன்றியமையாமையை கருத்தில் கொண்டும், கத்தரியின் குருத்து மற்றும் காய் துளைப்பான் அந்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தாலும் இவற்றின் வாழ்க்கை  சுழற்சி மற்றும் எளிய ஒருங்கிண...

பணம் கொடுக்கும் விவசாயம் - 1

                                   நீங்கள் போய்  ஒரு விவசாயிடம் உங்களுடைய விவசாயம் உங்களுக்கு லாபகரமாக இருக்கிறதா என்று கேட்டால் நம்மை ஏற இறங்க பார்த்துவிட்டு ஒரு பெரு மூச்சு விட்டு விட்டு செல்வார் ஆனால் உண்மை நிலை இதைவிட மோசமாகத்தான் இருக்கும் . பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தில் கணக்கு பார்ப்பதில்லை ஏன் என்றால் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது விவசாயிக்கு தெரியும் . விவசாயம் கூட  ஒரு ஷேர் மார்க்கெட் மாதிரிதான் கொஞ்சம் கொஞ்சம் ஆக போட்டு பெரிய லாபம் எடுக்கலாம் . அதற்கு சரியான நுணுக்கம் தெரிந்திருக்க வேண்டும் . இல்லையென்றால் பாதாளத்தில் விழவேண்டியதுதான் . நீங்கள் 5 சென்ட் நிலம் வைத்திருந்தாலும் 50 ஏக்கர் வைத்திருந்தாலும் சரியான நுணுக்கம் தெரிந்திருந்தால் விவசாயமும் உங்களுக்கு பணம் கொடுக்கும் . விவசாயம் மட்டுமல்ல நீங்கள் எந்த ஒரு தொழிலை எடுத்துக்கொண்டாலும் முக்கியமாக மூன்று விஷயங்களை கவனிக்கவேண்டும் முதலாவது மூலதனம் எந்த ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டுமென்றால் பணம் தேவை என்பது மிக ...

Drumstick land part 1

                                   முருங்கை நிலம்  -1  தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏழைகளின் உணவு கீரை வகைகள் அதில் முக்கிய உணவு முருககீரை . கிராமத்து வீடுகளின் கொல்லைகளில் முருங்கை கட்டாயம் இடம் பிடிக்கும் . முருங்கையின் மருத்துவத்தை முந்தானை முடுச்சில் பாக்யராஜ் சொல்லியிருப்பார் . ஆனால் நாம் அறிந்து கொள்ளாத விஷயங்கள் வேர் முதல் விதை வரை முருங்கையில் உள்ளன . அதற்கான சந்தை வாய்ப்புகள் உலகம் முழுவது விரிந்து கிடைக்கின்றன . முருங்கையின் இலை , பூ  , பிஞ்சு ,பட்டை, விதை , பிசின் , வேர்  என அனைத்துமே விற்பனைக்குரிய பொருட்கள்தான் . ஆனால் தமிழ் நாட்டில்  முருங்கை வியாபாரம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை . நம்மை பொறுத்தவரை எளிதாக கிடைக்கும் எந்த ஒரு பொருளுக்கும் மதிப்பு குறைவுதான் அது முருங்கைக்கும் பொருந்தும் . எந்த மண்ணாக இருந்தாலும் , எப்படிப்பட்ட வறட்சியாக இருந்தாலும் சரி ஒரு முருங்கை குச்சியை நட்டுவிட்டால் போதும் வேகமாக துளிர்த்து வளர்ந்துவிடும் இந்த ஏழைக...

மரமும் மரம் சார்ந்த பயனும்

மரங்கள் மனிதன்  தோன்றுவதற்கு முன்னால் இருந்தது , தற்பொழுது  மனிதனோடு இருக்கிறது , மரம் மனிதனை கடந்தும் இருக்கும் . இன்று எல்லாம் நவீனமயம் ஆக்கப்பட்டாலும் ஒருகாலத்தில் மரங்கள் நமக்கு எல்லாம்முமாக இருந்தன .நாம் சமையலுக்கான எரிபொருளாக , வீடு கட்டுவதற்கான சட்டங்களாக , ஜன்னல்களாக , உணவுக்காக , கால்நடை தீவனங்களாக தேவைப்பட்டன . அவ்வளவு ஏன் , நாம்  பிறந்து தொட்டிலில் போடுவது முதல் நாம் இறந்து எரிக்கும் வரை மரங்கள் தேவைப்பட்டன. ஆனால் இப்பொழுது அப்படியல்ல பல்வேறு வகையான தொழிற்சாலைகளுக்காக  மரங்களை வேளாண் காடுகள் மூலமாக உற்பத்தி செய்கிறோம் .  விவசயிகளுக்கு பொருளாதார ரிதியாக பயனளிக்க கூடிய மரங்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு 30 லிருந்து 40  சதவீதம்  மரங்கள் இருக்கும் . காகிதம் தயாரிப்பதற்கான மரங்கள் , எரிசக்திக்கான மரங்கள் , தடிமரங்கள் எண்ணெய் வித்து மரங்கள் ( வேப்பமரம், புங்கமரம் ) ஒட்டு பலகை . இவைகள்  அனைத்தும் வணிகம் சார்ந்த தொழில்களாகும் இதற்காக வளர்க்கப்படும் காடுகளை . தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் என்கிறோம் நாம் இந்த பகுதியில் தடி மரங்கள் மற்றும் அத...

மரம் வளர்த்தால் பணம் விளையும்

மரங்கள்... நிழல் தரும், பூ தரும், காய் தரும், கனி தரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இன்று சர்வதேச சந்தையில் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் தொழில் ஆதாரமாகவும் மரங்கள் திகழ்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒருகாலத்தில் இந்தியாவிலிருந்துதான் மரங்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. முதுமலைத் தேக்கு, டாப்ஸ்லிப் தேக்கு, தஞ்சாவூர் தேக்கு என நம் மண்ணில் செழிப்பாக விளைந்த பல வகையான தேக்கு மரங்கள் உலகின் பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. ஆனால், இன்றைய நிலைமை என்ன தெரியுமா? கடந்த பத்து ஆண்டுகளாக, மர வேலைப் பாடுகளுக்கான மரங்கள், வெளிநாடு களிலிருந்துதான் இந்தியாவுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்போது உலகச் சந்தைகளில் நம்முடைய பாரம்பர்ய தேக்கு மரங்களைக் காண்ப தென்பது மிகவும் அரிதாகி வருகிறது. கானா தேக்கு, நைஜீரியா தேக்கு, கொலம்பியன் தேக்குகள்தான் அதிகம் கிடைக்கின்றன. இதன் காரணமாக மர வேலைப்பாடுகளுக்கான மரங்களின் விலை சகட்டுமேனிக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. மரங்களின் தேவை ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில்தான் மர வேலைப்பாடு...

Why should the palm tree grow

பனை மரம்  பனை மரம் என்று சொன்னவுடன் நமக்கு ஞாபகம்  வருவது கோடை காலத்தில் சாப்பிடும் நுங்கு சிலருக்கு சிறுவயதில் பனை மரம் ஏறியது  ஞாபகம் வரலாம் , சிலருக்கு அதன் மருத்துவ குணம் ஞாபகம் வரலாம் , சிலருக்கு தெய்வமாய் வழிபட்டது ஞாபகம் வரலாம் 90 - குழந்தைகளுக்கு ஒற்றை பனையில்  முனி பேய் இருந்தது ஞாபகம் வரலாம்  சிலருக்கு பனை விசிறி ஞாபகம் வரலாம் , சிலருக்கு பனை வெள்ளம் , சிலருக்கு பனை ஓலையில் செய்யப்பட்ட கொட்டான் கூட ஞாபகம் வரலாம் , ஏன் , பல நூற்றாண்டுகளாக நாம் பனை ஓலைகளில்தான் செய்திகளை பரிமாறி உள்ளோம் . அந்த அளவிற்கு  பனை நம் வாழ்வில் ஒன்றாக பின்னி பிணைந்தது , இந்த பனை மரத்தை பற்றி நாம் இந்த கட்டுரையில் பாப்போம் . பனை மனிதனோடு பயணம்  தமிழ் நாட்டின் மாநில மரமாக பனை இருக்கிறது , பனை பற்றி சற்று கூர்ந்து கவனித்தால் அது மனிதனின் வாழ்விட பகுதியை சுற்றியே காணப்படும் . தென்னையை போன்று காட்டு பகுதி அல்லது தீவு பகுதிகளிலோ இருக்காது அதே சமயம் இது பயிரிட படுவதில்லை , இயற்கையாகவே வளரக்கூடியது . ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட பனை ,அங்கு வாழ்ந்த ஆதி மனிதர்களால் பன...

You can easily set up a vegetable pandal in the terrace

மாடித்தோட்டத்தில் சுலபமாக காய்கறி பந்தல் அமைக்கலாம் . மாடித்தோட்டத்தில் நமக்கு , நமக்கு தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் விளைவித்து கொள்ளலாம் . மாடித்தோட்டத்தை பொறுத்தவரை கத்தரி , வெண்டை ,தக்காளி போன்ற செடி வகை பயிர்களையோ அல்லது கேரட் ,உருளை ,முள்ளங்கி போன்ற மண்ணுக்குள் அடியில் விளையும் பயிர்களைத்தான் அதிகம் பயிர் செய்வோம் . ஆனால் அவரை ,புடலை , பீர்க்கன் போன்ற கொடிவகை பயிர்களை நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை . இதற்கு பெரும்பாலும் பணம் அதிகம் செலவாகும் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் நம்மால் குறைந்த செலவில் பந்தல் அமைத்து நம்மால் அதிகம் காய்கறிகள் எடுக்க முடியும் அதேசமயம் நமக்கு செடி வகை காய்கறிகளுக்கு பயிர் செய்ய இடம் கிடைக்கும் . நாம் இந்த கட்டுரையில் குறைந்த செலவில் எப்படி பந்தல் அமைக்கலாம் என்று பார்க்கலாம் . குறைந்த செலவில் பந்தல்  மாடி தோட்டமாக இருந்தாலும் சரி அல்லது வீட்டில் பின்புறமாக இருந்தாலும் சரி இரண்டு வகைகளில் நாம் காய்கறி பந்தல் அமைக்கலாம் . ஓன்று மூங்கில்  மற்றும் மண் பைகளை வைத்து தாற்காலிகமாக காய்கறி பந்தல் அமைக்கலாம் அல்லது இரும்பு பைப் (L...

மருதாணி சாகுபடி சில ஆலோசனைகள்

மருதாணி சாகுபடி  மருதாணி நம் கைகளுக்கு அழகான சிகப்பு வண்ணத்தை கொடுக்க கூடியவை . கல்யாண வீடாக இருந்தாலும் சரி தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களாக இருந்தாலும் சரி நம் கைகளில் தவறாமல் இடம்பெற்றுவிடும் இந்த மருதாணி .  முக்கியமாக மருத்துவத்திற்கு மருதாணி பயன்படுத்தப்படுகிறது . உடலில் ஏற்படும் கருந்தேமல்லை குறைக்கும் , உடல் வெப்பத்தை குறைக்கும் , நகங்களில் எந்தவித நோயும் வராமல் தடுக்கும். முடிகளுக்கு டை அடிக்க மற்றும் வாசனை திரவியம் தயாரிக்க மருதாணி பயன்படுத்தப்படுகிறது . நாம் இந்த கட்டுரையில் மருதாணி சாகுபடி பற்றி பார்ப்போம் . ரகங்கள்  மருதாணியை பொறுத்தவரை அணைத்து வகையான நிலங்களிலும் வளரக்கூடியது . இந்தியாவை பொறுத்தவரை குஜராத் , மத்தியப்பிரதேஷ் , பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் அதிகம் வியாபாரரீதியாக   வளர்க்கப்படுகின்றன . MH 1,MH 2 போன்ற மருதாணி ரகங்கள் அதிகம் வளர்க்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்படுகின்றன . ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை வியாபாரத்திற்காக வளர்ப்பது மிக குறைவு . அதேசமயம் தமிழ்நாட்டில் 100க்கு 20 முதல் 30 வீடுகளில் மருத...

காளான் வளர்ப்பில் பூச்சி கட்டுப்பாடு

காளான் வளர்ப்பு சைவ பிரியர்கள் மட்டும் விரும்பி உண்னும் உணவல்ல காளான் சில பூச்சிகளும் நாம் குடில்களில் வளர்க்கும் காளான்களை சாப்பிட கூடியது . பொதுவா காளான் என்பது ஒரு பூசண வகையை சார்ந்த நுண் உயிரி இதில் பல்வேறு சுற்றுப்புற சூழல்களால் பூச்சி நோய்கள் தோன்றி காளான்களை அழிக்கும் எனவே சுற்றுப்புறங்களை நாம் சுத்தமாக வைத்திருந்தாலே நாம் இவற்றை கட்டுப்படுத்திவிடலாம் நாம் இந்த கட்டுரையில் காளான்களை தாக்கும் பூச்சிகளை பற்றி பார்ப்போம்  காளான் ஈ  போரிட் மற்றும் சியாரிட்  என இரு வகையான ஈக்கள் மற்றும் அதன் புழுக்கள் காளான்களை  சேதப்படுத்தும். இதன் தாக்குதலோட அறிகுறி என்றுபார்த்தால் இதன் புழுக்கள் காலன் இலைகளை தின்று திட்டு திட்டாக காணப்படும் மேலும் துர்நாற்றம் அடிக்கும் புழுக்கள் வெண்மை நிறமாக காணப்படும் . சிலசமயங்களில் இந்த ஈக்கள் காளாண்பூசனங்களை எல்லா படுக்கைகளிலும் செல்லும்போது ட்ரைக்கோடெர்மா, பாக்டீரியா, போன்ற நுண்ணுயிரிகளை பரவச்செய்து காளான் விளைச்சளை குன்றச்செய்கிறது . குடிலுக்கு வெளிய உள்ள குப்பைகளில் இனப்பெருக்கம் செய்து நாம் படுகைகளில் இடும் துளைகள் வழிய...

மாடித்தோட்டத்தில் அதிக விளைச்சலுக்கு 7 நாள் கவனிப்பு

terrace farming at home இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சின்னதா மாடிதோட்டம் வைக்கவேண்டும் என்று எல்லாரிடமும் ஆசை உள்ளது . அடுக்கு மடியில் உள்ளவர்கள் கூட பால்கனியில் சின்னதாக தோட்டம் வைக்க ஆசை படுகின்றனர் . இது ஆசைக்காக மட்டுமில்லாமல் இயற்கையாக விளைந்த காய்கறிகளை உன்ன வேண்டும் என்ற விழிப்புணர்வையே காட்டுகிறது . நாம் இந்த கட்டுரையில் மாடி தோட்டத்தில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் மற்றும் அதிக மகசூல் எடுக்க 7 நாள் கவனிப்பு பற்றியும் பார்ப்போம் . புதிதாக மாடி தோட்டம் ஆரம்பிப்பவர்களுக்கு  - terrace farming  குரோ பேக் - Grow bag புதுசா ஆரம்பிக்க போரிங்கான முதலில் குரோ பேக் கவனம் செலுத்துங்கள் எந்த செடி வைக்கபோகிறீர்களோ அதற்கேற்றாற்போல் தேர்ந்தெடுங்கள் , அடுத்ததாக சரியான மண் கலவை இடுங்கள் , குரோ பேக்ல் போட்டவுடன் நடுவதை விட இரண்டு நாட்கள் நீர் ஊற்றி பின்பு நட்டால் நன்றாக இருக்கும் . இந்த குரோ பேக்கை நேரடியாக தரையில் வைக்காமல் மரப்பலகை , செங்கல் வைத்து அதன் மேல் வைக்கலாம்  ஷேடு நெட்  - shade net  மாடித்தோட்டம் வைக்கும் பெரும்பாலோர் வெயில் அதிகம் இருக்கும் என்...