Skip to main content

Posts

Showing posts with the label அகத்தி மற்றும் வேலி மசால் செடி விதை நேர்த்தி செய்தல்

அகத்தி மற்றும் வேலி மசால் செடி விதை நேர்த்தி செய்தல்

Agathi and Veli Masaal Seed Treatment அகத்தியில் விதை நேர்த்தி அகத்தியில் சாதாரணமாக விதை நேர்த்தி செய்யலாம் . அகத்தி விதைகளை ஒரு பேப்பர்ல போட்டுவிட்டு பாதிக்கப்பட்ட விதைகளை எடுத்து விட வேண்டும் பூஞ்சை வளைந்தது நெளிந்தது உடைந்தது எடுத்து விடவேண்டும்.  பின்பு நீர் ஊற்றி கழுவவேண்டும் கழுவிய ஈரத்தோடு 10 கிராம் அசோஸ் பயிரில்லம் , பாஸ்போ பாக்டீரியா 30 கிராம் போட்டு அதோடு தேவையான அளவு வடி கட்டிய அரிசிக்கஞ்சியை போட்டு மெதுவா பெரட்டி காயவைக்க வேண்டும். வேலி மசால் விதை நேர்த்தி வேலி மசால் விதையை 5 நிமிசம் இளம் பதத்தில்  சூடு உள்ள நீரில் ஊறவைக்க வேண்டும், பின்பு அதை எடுத்து சாதாரண தண்ணீரில் குறைந்தபச்சம் மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊற வைக்கும் பொழுது 10 கிராம் அசோஸ் பயிரில்லம் , பாஸ்போ பாக்டீரியா 30 கிராம் போட்டு ஊறவைக்கலாம் . ஒரு 2 மணிநேரம் நிழலில் வைத்து பின்பு வடிகட்டி விதைக்கலாம் . முளைப்பு திறன் நன்றாக இருக்கும்  ஆரம்பத்தில் இரண்டு விதைகளையும் பயிர் செய்யும்போது அடி உரம் சரியாக இருக்கவேண்டும் . அடி உரம் இல்லையெனில் இடுபொருட்கள் சரியான முறையில் தெளித்த...