goat rearing part - 1 ஆடு வளர்ப்பை ஒரு சரியான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் விவசாயிகளின் ATM மிஷின் என்று சொல்லலாம், அந்த அளவிற்க்கு விவசயிகளுக்கு வருமானத்தை கொடுக்கக்கூடியது . விவசாயத்தோடு உப தொழில்தான் கால்நடை வளர்ப்பு ஆனால் விவசாயத்தின் மகசூல் குறையும் போது நமக்கு கைகொடுத்து நல்ல லாபத்தை தருவது இந்த கால்நடை வளர்ப்பே . இன்றய இளைஞர்களில் கோழி வளர்ப்பு தொழிலுக்கு அப்புறம் அதிகம் இருப்பது ஆடு வளர்ப்புதான் ஆனால் 10 பேர் இந்த தொழிலை ஆரம்பித்தாள் 2 பேர்தான் தொடர்ந்து நடத்துகின்றனர் மற்றவர்களால் அது முடியவில்லை இதற்கான காரணம் என்று பார்த்தல் போதிய அனுபவம் இன்மை , எடுத்தவுடன் சரியான பயிற்சி மற்றும் ஆலோசகர்கள் இல்லாமல் பெரிய முதலீடு செய்வது போன்ற காரணங்களை சொல்லலாம் ஆடு வளர்ப்பை பொறுத்தவரை நல்ல லாபகரமான தொழில் இதில் நஷ்டம் வராமல் லாபம் பெற சில தொழில் நுட்பங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம் . எந்த ஆடு ரகத்தை தேர்ந்தெடுக்கலாம் ஆடு வளர்ப்பை பொறுத்தவரை முதலில் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது எந்த ரக ஆடுகள் வாங்கலாம் எந்த ஆடு வேகமாக எடைபோடும் , நம்முட...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்