goat rearing
கோழி வளர்ப்பு அல்லது மாடு வளர்ப்பு இது இரண்டையும் விட குறுகிய காலத்தில் (ஓன்றை முதல் இரண்டு) அதிக லாபம் தரக்கூடியது இந்த ஆடு வளர்ப்பு . வறட்சியான பகுதிகளில் கூட நம்மால் ஆடுகளை வளர்க்க முடியும் இதனால்தான் ஆடுகளை நம்மால் குறைந்த வருமானத்தில் வளர்த்து அதிக லாபம் அடைய முடியும் இந்த கட்டுரையில் ஆடு வளர்ப்பில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்
இடத்தேர்வு
இந்த இடைத்தேர்வை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் கோழி அல்லது மாடு வளர்ப்புபோல் ஒரு பெரிய அளவு இடம் இருக்காது என்றாலும் , ஆடு இருக்கும் இடம் கொஞ்சம் வார்ம் ஆக இருந்தால் நல்லது . ஆடு எப்பவுமே ஒரு கூட்டமாக வாழும் இயல்புடையது எனவே ஆட்டு பண்ணை ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் குறைந்தது 3 முதல் 5 ஆடு வரை வாங்கி வளர்க்கலாம் .
உணவு மற்றும் மேய்ச்சலுக்காக இடம்
ஆடு வளர்ப்பிற்கு அதிகம் இடம் தேவை இல்லை என்றாலும் , அதன் மேய்ச்சலுக்கான இடம் கொஞ்சம் அதிகம் தேவை படும் . புற்கள் மற்றும் களைகள் நிறைந்த பகுதிகளாக இருந்தால் நல்லது . ஆர்கானிக் இறைச்சிக்கு தனி மவுசு இருப்பதால் உணவு விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் . உங்களுக்கு எக்கனாமிகளாக முடியுமென்றால் கடைகளில் இருந்து உணவு வாங்கி கொடுக்கலாம் .
ஆடு இனம்
நீங்கள் தேர்ந்தெடுக்க போகும் இனம் உங்களுடைய விற்பனைக்கு மிக உதவியாக இருக்கும் . உங்களுடைய பகுதிகளில் எந்த வகையான ஆடுகளுக்கு அதிக தேவை உள்ளது என்பதை தெரிந்து அந்த இனத்தை வளர்க்கலாம் .மேலும் நீங்கள் வளர்க்கும் ஆட்டின் விவரங்கள் அணைத்து தெரியவேண்டும் உதாரணமாக நீங்கள் போயர் இன ஆடுகளை வாங்கி வளர்க்க நினைத்தால் அதன் வளர்ப்பு பற்றிய அணைத்து விவரங்களும் நீங்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம் .
கால்நடை மருத்துவர்
இது மிக முக்கியமான ஓன்று . உங்கள் பகுதிக்கு அருகிலோ அல்லது நீங்கள் சுலபமாக தொடர்புகொள்ளும் இடத்தில ஒரு கால்நடை மருத்துவர் இருப்பது நல்லது . ஆடுகளை பொறுத்தவரை காண்டாக்ட் டிசீஸ் அதாவது ஒரு நோய் ஆட்டிலிருந்து மற்றொரு ஆட்டிற்கு சுலபமாக பரவும் . முன்னெச்சரிக்கை நடவெடிக்கையாக தேவையான மருந்துகளை கைவசம் வைத்திருப்பது நல்லது .
எங்கே எப்படி விற்பனை
நீங்கள் ஆடு வளர்ப்பு மட்டுமல்ல எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது எப்படி விற்பனை செய்ய போகிறீர்கள் . ஊர் திருவிழாக்காலமாக இருந்தாலும் சரி கலயாணம் அல்லது காது ஆட்டு கறி இல்லாமல் நடப்பது என்பது அரிது , எனவே இந்த மாதிரி இடங்களை தேர்வு செய்யலாம் . அடுத்ததாக சந்தை, உங்கள் மாவட்டத்தில் உள்ள சந்தை சென்று நேரடியாக விற்பனை செய்யலாம் . அடுத்ததாக ஆன்லைன் விற்பனை facebook ,பேஜ் , வாட்ஸ் குரூப்களை அணுகலாம் . இவை எல்லாவற்றையும் விட பதப்படுத்தி வெளி மாநிலங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் இதற்காக கொஞ்சம் டெக்னாலஜியும், எப்படி பதப்படுத்தி பேக்கிங் செய்யலாம் என்பதை தெரிந்து வைத்திருக்கவேண்டும் . பதப்படுத்துவதை பற்றி அருகிலிருக்கும் கால்நடை துறையை அணுகலாம்
0 Comments
Smart vivasayi