பயிர்களில் பெருமளவில் ஏற்படும், பூச்சித்தாக்குதலை இயற்கை முறையில் அழிப்பதில் ஆமணக்கு கரைசல் நல்ல பலனை அளிக்கிறது. பயிர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளும்போது, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை என்பது மிகவும் இன்றியமையாதது. நாம் வளர்த்தச் செடிகள் பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்படும்போது அவற்றைப் பாதுகாக்க ரசாயன உரங்களைப் பயன்படுத்துகிறோம். எனினும் இயற்கையான பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் பயிருக்கும் உயிரூட்ட முடியும், மண் வளத்தையும் பாதுகாக்க முடியும். அவ்வாறு பூச்சித்தாக்குதலில் இருந்து மண்ணைப் பாதுகாக்கப் பயன்படுத்தும் கரைசல்களில் ஒன்றே ஆமணக்கு கரைசல். தயாரிக்கும் முறை 5 கிலோ ஆமணக்கு விதைகளை நன்கு அரைத்து 5 லிட்டர் நீருடன் கலந்து மண் பானை அல்லது தொட்டிகளில் 10 நாட்கள் மூடி வைக்க வேண்டும். அதன்பின் கலவையிலிருந்து வாசனை தோன்றும். 5 லிட்டர் பானையில் 2 லிட்டர் நொதி வந்த கலவை மற்றும் 3 லிட்டர் நீர் சேர்த்து கலந்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 மண் பானைகள் தேவைப்படும். மண்பானையின் வாய்ப்பகுதி மட்டும் தெரியும் அளவு புதைத்து வைக்க வேண்டும். தென்னந்தோப்பு , பாக்...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்