Agriculture In India- Ragi / Finger millet களர் நிலத்தில் கூட நன்கு வளரக்கூடிய ஒரே பயிர் கேழ்வரகு மட்டுமே. கர்நாடகத்தில் மட்டுமே அதிகம் பயிரிடப்படுகின்றது. வறட்சியை தாங்கி வளரும். அதிக கால்சியம் சத்து இருக்கக்கூடிய தானியம் இது தான். ரகம் கோ 9, கோ 13, கோ.ஆர்.ஏ 14, டி.ஆர்.ஒய் 1, பையூர் 1, பையூர் 2 ஒரு வித்திலை தாவரங்களில் சத்து குறைவாக தேவைப்படும் பயிரும் இதுதான். தழை சத்து மட்டும் சற்று கூடுதலாக தேவை. அதிக பட்சம் மூன்று அடி உயரம் வரை வளரும். பட்டம் என்று பார்த்தால் அதிகமாக தை மற்றும் மாசி. சில பகுதிகளில் சித்திரை மற்றும் வைகாசி அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட்/ எக்டர் (600 கிராம்/எக்டர்) மற்றும் 3 பாக்கெட்/எக்டர் (600 கிராம்/எக்டர்) பாஸ்போபாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்யவும் அல்லது அசோபாஸ் (1200 கிராம்/எக்டர்) பயன்படுத்தவும் 3×8 அடி அளவில் மேட்டு பாத்திகளில் விதை தூவி நாற்று விடப் படுகிறது. ஏக்கருக்கு குறைந்தது ஒன்னரை கிலோ விதை போதுமானது. அதிக பட்சம் இரண்டு கிலோ . நேரடி விதைப்பாக இருந்தால் 3.5 கிலோ . பதினைந்து முதல் இருபது நாள் ந...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்