Skip to main content

Posts

Showing posts with the label ஆடு

ஆடுகளின் பல்வேறு பருவங்களில் தீவனம் அளிக்கும் முறைகள்

Methods of feeding goats in different seasons ஆடு வளர்ப்பு தொழில் நிலமற்றவர்களில் தொடங்கி பெரிய பண்ணையாளர்கள் வரை மேற்கொள்ளக் கூடிய ஓர் எளிய தொழிலாகும் . ஆடு வளர்ப்பில் இலாபம் அதிகரிக்க தீவன மேலாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது . உற்பத்தி செலவில் 65 - 70 சதவீதம் தீவனத்திற்காக மட்டும் செலவிட நேரிடுகிறது . ஆகையால் , தீவனத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் . ஆடுகளின் வயது , உற்பத்தித் திறன் , அதன் பல்வேறு பருவங்களின் வளர்ச்சி வீதம் போன்றவைகளை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்துகளின் தேவைக்கேற்ப தீவனத்தில் மாற்றம் செய்து சரிவிகித தீவனம் அளிக்கும் பொழுது உற்பத்தி செலவு குறைந்து ஆடு வளர்பினால் இலாபம் அடையலாம் .  ஆடுகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்:   ஆடுகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு எரிசக்தி , புரதச்சத்து , நார்ச்சத்து , கொழுப்புச்சத்து , உயிர்ச்சத்து , தாது உப்புக்கள் மற்றும் தண்ணீர் மிக முக்கியமானவையாகும் . ஆடுகளின் வளர்ப்பு முறைக்கேற்ப அதன் வளர்ச்சி மற்றும் உற்பத்தி வேறுபடுகிறது . உதாரணமாக , மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு தேவையான அளவிற்கு புரதச் சத்துக்கள் , தா...

ஆடு வளர்ப்பு - ஆடுகளை சந்தையில் வாங்கப்போறீங்களா இதையெல்லாம் கட்டாயம் கவனிங்க

Goat rearing  -    If you are going to buy goats in the market, you must pay attention to all these       விவசாய உப தொழில்களில் முக்கியமானது ஆடு வளர்ப்பு. நீங்களும் , ஆடு வாங்கி வளர்க்கலாம்னு ஆசை இருந்தா சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் . நீங்கள் சந்தையில் ஆடுவாங்க முடிவு செய்துவிட்டால் வாங்க வேண்டிய அட்டை சற்று தூரத்தில் நின்று கவனிக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆடுகள் நன்றாக நடக்கிறதா அல்லது காலில் ஏதாவது அடிபட்டு இருகிறதா என்று தெரியும் . ஆடுகள் மேயும் போது முற்களோ அல்லது குச்சியோ குத்தி கண்பார்வை குறைவாக உள்ள வாய்ப்புள்ளது இதனை கண்டறிய உங்கள் ஆல்காட்டி விரலை ஆட்டின் கண்களை குத்துவதுபோல் செல்லுங்கள் ஆடு கண்களை திருப்பிக்கொண்டாள் கண்கள் நல்ல நிலையில் உள்ளன . ஆடுகளின் உதட்டில் கொப்புளங்கள் இருந்தால் அது ஆட்டம்மையின் அறிகுறிகளாக இருக்கலாம் , மருவா கொப்பளமா என்று சரியாக பார்த்து வாங்கவேண்டும் .ஆடுகள் முடியை தடவி பார்க்கும்பொழுது சொறி சிரங்கு போன்றவை இல்லாமல் இருக்கவேண்டும் . ஆடு வாங்கும் போது அதன் கழிவு எப்படி இருகின்றது...

ஆடு வளர்ப்பில் வெற்றி பெற என்ன செய்யலாம்

                            goat rearing கோழி வளர்ப்பு அல்லது மாடு வளர்ப்பு இது இரண்டையும் விட குறுகிய காலத்தில் (ஓன்றை முதல் இரண்டு)  அதிக லாபம் தரக்கூடியது இந்த ஆடு வளர்ப்பு . வறட்சியான பகுதிகளில் கூட நம்மால் ஆடுகளை வளர்க்க முடியும் இதனால்தான் ஆடுகளை நம்மால் குறைந்த வருமானத்தில் வளர்த்து அதிக லாபம் அடைய முடியும் இந்த கட்டுரையில் ஆடு வளர்ப்பில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்  இடத்தேர்வு இந்த இடைத்தேர்வை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் கோழி அல்லது மாடு வளர்ப்புபோல் ஒரு பெரிய அளவு இடம் இருக்காது என்றாலும் , ஆடு இருக்கும் இடம் கொஞ்சம் வார்ம் ஆக இருந்தால் நல்லது . ஆடு எப்பவுமே ஒரு கூட்டமாக வாழும் இயல்புடையது எனவே ஆட்டு பண்ணை ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் குறைந்தது 3 முதல் 5 ஆடு வரை வாங்கி வளர்க்கலாம் .  உணவு மற்றும் மேய்ச்சலுக்காக இடம்  ஆடு வளர்ப்பிற்கு அதிகம் இடம் தேவை இல்லை என்றாலும் , அதன்  மேய்ச்சலுக்கான இடம் கொஞ்சம் அதிகம் தேவை படும் . புற்கள் மற்றும் களைகள் நிறைந்த ப...

வெள்ளாட்டை ஐந்து முறைகளில் வளர்க்கலாம்

Goats can be reared in five ways இந்தியாவில் 97 சதவீத கிராமங்களில் அவசியம் வெள்ளாடு இருக்கும். வெள்ளாடு வளர்ப்புக்கு குறைந்த முதலீடு போதுமானது. விரைவில் வருமானம் தரக்கூடியது. வெள்ளாட்டுக் கறி எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது.  வெள்ளாட்டை ஐந்து முறைகளில் வளர்க்கலாம் 1. தானே மேய்ந்து வரும் சுய மேய்ச்சல் ( *Uncontrolled Grazing* ) 2. கொட்டகையும் மேய்ச்சல் இணைந்த முறை ( *Semi Intensive* ) 3. கயிறு கட்டி மேய்ச்சல் ( *Tatnering* ) 4. கொட்டகை முறை வளர்ப்பு ( *Stall Fed System)*  5. ஆழ்கூள முறை வளர்ப்பு ( *Deep Litter System)* 1. சுய மேச்சல்   இதுதான் தமிழ்நாட்டில் இயல்புக்கு ஏற்ற வளர்ப்பு முறை அதிகமான ஆடுகளை இந்த முறையில்தான் வளர்க்கப்படுகின்றன. அதிகாலையில் பட்டியலில் இருந்து வெளியில் விடப்படும் ஆடுகள் காடு, மேடுகள் வயல்வெளிகளில் பரவலாக மேய்ச்சல் விடுபட்ட பட்டியில் அடைக்கபடும். 2. கொட்டகையும் மேய்ச்சல் இணைந்த முறை இந்த முறையில் பகல் நேரங்களில் மேய்ச்சல், இரவு நேரங்களில் கொட்டகையில் அடைத்து  புல், உலர் தீவனம், அடர் தீவனம் கொடுக்கப்படும். 3.கயிறு கட்டி மேய்ச்சல் குறைந்த எண்ணிக்...

ஆடு வளர்ப்பு கேள்வி - பதில்

Goat breeding question and answer ஆட்டின் காலில் புண் உள்ளது? செருமல் இருக்கிறது தீர்வு என்ன? பதில் : புண் உள்ள காலில் மஞ்சள், வேப்பிலையை அரைத்து தடவவும். ஈக்கள் உட்காராதவாறு புண்ணை சுற்றி வேப்பண்ணெயை தடவவும். இருமல் இருப்பதற்கு குடற்புழு நீக்கம் செய்வது நல்லது. குடற்புழு நீக்கம் செய்ய அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை அணுகி மருத்துவரின் அறிவுரைபடி குடற்புழு நீக்கம் செய்யுங்கள். கேள்வி  தலச்சேரி ஆடுகள் எங்கே கிடைக்கும்? பதில்  கேரளாவில் உள்ள தலச்சேரி என்னும் இடத்தில் இந்த இன ஆடுகள் கிடைக்கும் மற்றும் சென்னையில் உள்ள காட்டான் குளத்து¡ர் கால்நடை பண்ணையில் கிடைக்கும். முகவரி : கிருஷி விக்யான் கேந்திர (KVK), காட்டுப்பாக்கம் – 603 203, காஞ்சிபுரம் மாவட்டம், தொலைபேசி எண்: 044-27452371 கேள்வி  ஆட்டிற்கு நாக்கில் கொப்பளம் போல் உள்ளது, காய்ச்சல் மற்றும் தீனி எடுக்கவில்லை? பதில்  ஆட்டின் உதட்டில் கொப்பளம் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். அது அம்மை நோயா என்று கால்நடை மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெற்று கொள்ளவும். மேலும் நாக்கில் கொப்பளம் இருப்பின் போரிக் ஆஸிட் பவுடர்யைய...

வெள்ளாடுகளுக்கும் செம்மறியாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?

What are the differences between goats and sheep? 1. வெள்ளாடுகள் நீண்ட கால்களுடனும், மெலிந்த உடலுடனும் உயரமாகக் காணப்படும். ஆனால் பொதுவாக செம்மறி ஆடுகள் குட்டையான கால்களுடனும், தடித்த உடலமைப்புடனும் இருக்கும். 2. செம்மறிக் கடாக்களுக்கு வெள்ளாட்டுக் கடா போன்று கெட்ட நாற்றம் இருக்காது. 3. வெள்ளாடுகளுக்குத் தாடி இருக்கும். செம்மறி ஆடுகளுக்கு இருக்காது. 4. வெள்ளாடுகளின் வால் தூக்கி இருக்கும். செம்மறி ஆடுகளின் வால் தொங்கிக் கொண்டு இருக்கும். 5. வெள்ளாடுகள் நிமிர்ந்து நடந்து செல்லும். செம்மறி ஆடுகள் குனிந்து செல்லும். 6. செம்மறி ஆடுகளுக்குப் பக்க வாட்டில் திருகிய கொம்புகள் உள்ளன. வெள்ளாடுகளுக்கு நேரான அல்லது பின்னோக்கி வளைந்த கொம்புகள் உள்ளன. இனப் பெருக்கமும் - Goat breeding வெள்ளாடுகளில், பிட்டியூட்டரி என்னும் நாளமில்லாச் சுரப்பி, வெள்ளாடுகள் குட்டி போடுவதை முறைப்படுத்துகின்றது. பிறந்த குட்டிகள் நன்கு உயிர்வாழ ஏற்றக் கால நிலை இருக்க வேண்டும். நமது இந்திய நாட்டின் சமுனாபாரியுத் பீட்டல் இன வெள்ளாடுகளும் சூலை முதல் செப்டம்பர் வரை சினைப் பருவத்திற்கு வரும். பார்பாரி, வங்காளக் கறுப்பு, நம் த...

ஆடு ரகங்கள் மற்றும் வளர்ப்பு - வீடியோ