Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஆடு வளர்ப்பு - ஆடுகளை சந்தையில் வாங்கப்போறீங்களா இதையெல்லாம் கட்டாயம் கவனிங்க

Goat rearing  -    If you are going to buy goats in the market, you must pay attention to all these   

  

விவசாய உப தொழில்களில் முக்கியமானது ஆடு வளர்ப்பு. நீங்களும் , ஆடு வாங்கி வளர்க்கலாம்னு ஆசை இருந்தா சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் .


நீங்கள் சந்தையில் ஆடுவாங்க முடிவு செய்துவிட்டால் வாங்க வேண்டிய அட்டை சற்று தூரத்தில் நின்று கவனிக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆடுகள் நன்றாக நடக்கிறதா அல்லது காலில் ஏதாவது அடிபட்டு இருகிறதா என்று தெரியும் .

ஆடுகள் மேயும் போது முற்களோ அல்லது குச்சியோ குத்தி கண்பார்வை குறைவாக உள்ள வாய்ப்புள்ளது இதனை கண்டறிய உங்கள் ஆல்காட்டி விரலை ஆட்டின் கண்களை குத்துவதுபோல் செல்லுங்கள் ஆடு கண்களை திருப்பிக்கொண்டாள் கண்கள் நல்ல நிலையில் உள்ளன .


ஆடுகளின் உதட்டில் கொப்புளங்கள் இருந்தால் அது ஆட்டம்மையின் அறிகுறிகளாக இருக்கலாம் , மருவா கொப்பளமா என்று சரியாக பார்த்து வாங்கவேண்டும் .ஆடுகள் முடியை தடவி பார்க்கும்பொழுது சொறி சிரங்கு போன்றவை இல்லாமல் இருக்கவேண்டும் .


ஆடு வாங்கும் போது அதன் கழிவு எப்படி இருகின்றது என்று கொஞ்சம் இருந்து பாருங்கள் நன்றாக இருந்தால் வாங்கலாம் ஒருவேளை கழிச்சலாக இருந்தால் அது பி .பி. ஆர் என்னும் ஆட்டுக்கொல்லி நோய்யாக இருக்கலாம் .அதேபோல் ஆடு சுறுசுறுப்பாக இல்லாமல் சோர்வாக இருந்தால் உன்னிக்காய்ச்சல் இருக்கலாம் .

ஆட்டின் மடியை தொட்டுப்பார்த்து வாங்கவேண்டும், மடி மிருதுவாக இல்லாமல் கல் போன்று இருந்தால் மடிநோயின் அறிகுறியாக இருக்கலாம் .

Post a Comment

0 Comments