தேவையான பொருட்கள்: 1. 100 ml வேப்பெண்ணை (neem oil). 2. பசு மாட்டு கோமியம். புதியதாக இருந்தால் 1 லிட்டர், பழைய கோமியமாக இருந்தால் 1/2 (அரை) லிட்டர். 3. பயிறுனுடைய வயதிற்கேற்ப கற்பூர வில்லைகள். உளுந்து போன்ற சிறிய இலைகள் உள்ள பயிர்களுக்கு, பயிர் ஒரு மாதத்திற்கு குறைவான வயதிருந்தால் 5 வில்லைகள். ஒரு மாதத்திற்கு மேலான பயிர்களுக்கு 8 வில்லைகள் வரை குடுக்கலாம். கத்தரி, வெண்டை போன்ற பெரிய பயிர் செடிகளுக்கு வெயில் காலங்களில் 8 வில்லைகள் கொடுக்கலாம். வெயில் குறைவான காலங்களில் 10 வில்லைகள் வரை கொடுக்கலாம். (இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கற்பூரம் கிடைத்தால் உபயோகிக்கவும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இல்லையெனில் சாமி கும்பிட உபயோகிக்கும் கற்பூரம் போதுமானது. ) செய்முறை: கற்பூரம் தண்ணீரில் கரையாது, கரும்பு ஆலைகளில் இருந்து கழிவாக கிடைக்கும் எத்தனால் கற்பூரத்தை கரைக்கும். எத்தனால் இயற்கையான ஒன்று அதனால் இதை உபயோகிக்கலாம். நீலகிரி தைலம் (யூகலிப்டஸ் ஆயில்) கற்பூரத்தை கரைக்கும் தன்மை கொண்டது இதனையும் உபயோகிக்கலாம். சர்ஜிக்கல் ஸ்பிரிட் கற்பூரத்தை கரைக்கும். அனால் இது கெமிக்கல் கலந்து தயாரிக்கப்ப...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்