“நிலக்கடலை செடிகளில் எறும்புகளின் நடமாட்டம் தென்பட்டால், அதை அலட்சியமாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது. காரணம், அசுவினி பூச்சிகளின் தாக்குதல் நிகழ்ந்து கொண்டிருப்பதற்கான அறிகுறியே, எறும்புகளின் நடமாட்டம். இதனால், கணிசமான அளவு மகசூல் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே, எறும்புகளின் நடமாட்டம் தென்பட்டால், உடனடியாக செடிகளை உற்று நோக்க வேண்டும். குறிப்பாக, இலைகளின் அடிப்பாகத்தைப் பார்த்தால், அங்கு, அசுவினிப் பூச்சி குடிகொண்டிருக்கும். இது மிகவும் வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடிய பூச்சி இனமாகும். நிலக்கடலை செடிகளில் உள்ள இளம் தளிர்கள், முதிர்ந்த இலைகள், குருத்துகள் மற்றும் பூக்களிலும் அசுவினி பூச்சிகள் தங்கியிருந்து சாற்றை உறிஞ்சும். இதனால், செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். இலைகள் சுருங்குவதோடு, மஞ்சள் நிறத்துக்கு மாறத் தொடங்கும். பூக்கள் உதிரும். கறுப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும் அசுவினிப் பூச்சிகள், ஒரு வித திரவத்தைச் சுரக்கும். இனிப்புச் சுவை கொண்ட இத்திரவத்தை சுவைப்பதற் காகவே எறும்புகள் வரும். இத்திரவம் பட்ட பகுதிகளில் கறுப்பு நிறத்தில் பூ...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்