பால் காய்ச்சல் நோயானது விவசாயியின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய நோய்களில் ஒன்றாகும். கறவை மாடுகளின் நலனை காக்கவும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை தடுக்கவும் பால் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். *ஏன் பால் காய்ச்சல் நோய் கறவை மாடுகளுக்கு வருகிறது.* கன்று போட்டவுடன் மாடுகளில் இருந்து பெறப்படும் சீம்பாலில் அதிக அளவு கால்சியம் சத்து வெளியேறுகிறது.( ஓரு லிட்டர் சீம்பாலில் - 3 கிராம் கால்சியம் ) கறவை மாடுகளில் தினமும் கறக்கும் பால் ஒரு லிட்டரில் 0.2 கிராம் கால்சியம் உள்ளது. கறவை மாடுகளுக்கு நாம் கொடுக்கும் தீவனத்தில் உள்ள கால்சியத்தின் அளவு குறைவாகவும் மேலும் அதன் பாலில் இருந்து வெளியேற்றப்படும் கால்சியத்தின் அளவு அதிகமாகும் உள்ளபோது பால் காய்ச்சல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. *பால் காய்ச்சல் நோயை தடுப்பதற்கான எளிய வழிமுறைகள்* *1.கன்று போட்டவுடன் கறவை மாடுகளுக்கு கால்சியம் டானிக் கொடுத்தல்.* அ)பல கால்சியம் டானிக்-கள் மருந்து கடைகளில் ஜெல் ஆகவோ அல்லது Liquid ஆகவோ மருந்தகங்களில் கிடைக்கும். அதை இரண்டு முதல் மூன்று முறை மாடுக...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்