கத்தரி என்ற பெயர் மென்மையாக இருப்பதாலும் சற்று சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாலும் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அதிகம் விரும்பக்கூடிய பயிராக இருக்கிறது. கத்திரி விவசாயம் செய்பவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியவை: 1) ஒவ்வொரு மாதமும் ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ஒரு டிராக் டர் லோடு ஊட்டமேற்றிய தொழு உரமாக மாற்றி வேர்வழி தூவி முக்கியமாக நீர் செல்லும் வழிகளில் தூவி அமுக்கி லாபம் பெறலாம். மாதம் ஒருமுறை தரை வழியும் மேலே தெளித்தும் சூடோமோனாஸ் மற்றும் விரிடி என்ற இரண்டு பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்தலாம். தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் தெளிப்பதற்கு 10 லிட்டருக்கு 50 மில்லி என கலந்து தெளிப்பது நல்ல பலன் தரும். 2) செம்மண் சரளை நிலம் என்றால் ஒரு ஏக்கருக்கு 75 கிலோ சாம்பல் நீர் செல்லும் பாதையில் தூங்கி விடுவது நல்லது. 3)பூ எடுப்பதற்கு அதிக அளவில் அதிக எண்ணிக்கையில் தேமோர் கரைசல் அல்லது இஎம் கரைசல் அல்லது பஞ்சகாவியம் கரைசலை பத்து லிட்டருக்கு அரை லிட்டர் கலந்து காலை 9 மணிக்கு முன் தெளிப்பதால் நல்ல பலன் தரும். இரண்டு முறை தெளிக்கலாம். 4)எருக்கு கரைசலை தெளிப்பதால் அடிஉரம் குறைவாக கொடுத்திருக்க...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்