குறைந்த காலத்தில், அதிக வருமானம் தரும் மர வகைகளில் முக்கிய இடத்தில் இருப்பது குமிழ் மரம். இதை சாகுபடி செய்ய ஏக்கர் கணக்கில் இடம் தேவையில்லை. வரப்பு, வாய்க்கால், காலி இடம் என கைவசம் இருக்கும் எந்த இடத்திலும் நடலாம். இது, ஆணிவேர் தாவரம் என்பதால், பக்கவேர்கள் அதிகமாக வளராது. அதனால் குறைந்த இடைவெளியிலும் இந்த மரத்தை நடவு செய்யலாம். தேக்குக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரம், இழைப்பதற்கு இலகுவாகவும், அதேசமயம் உறுதியாகவும் உள்ளதால் கடந்த சில ஆண்டுகளாக குமிழ் மரத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக விற்பனையில் வீறுநடை போடுகிறது இம்மரம்! குமிழ் மரத்தை வணிகரீதியாக எப்படி சாகுபடி செய்வது? மறுதாம்பிலும் வருமானம் : குமிழ், நல்ல வடிகால் வசதியுள்ள ஆழமான மண்கண்டமுள்ள அனைத்து மண் வகைகளிலும் சிறப்பாக வளரும். சாகுபடி நிலத்தை உழவு செய்து 15 அடிக்கு, 15 அடி இடைவெளியில், இரண்டு அடி நீள, அகல, ஆழமுள்ள குழியெடுத்து, நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழியிலும் மட்கிய தொழு உரம் மற்றும் வண்டல் மண்ணைக் கலந்து முக்கால் பாகத்துக்கு நிரப்பி, மீதமுள்ள குழியை மேல் மண் கொண்டு நிரப்ப வேண்டும். ஏக்கருக்கு 200 கன்றுகள் த...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்