Skip to main content

Posts

Showing posts with the label oil crops

சூரியகாந்தி பயிர் செய்வதற்க்கு நீங்கள் ஐந்து முக்கிய விஷயங்கள்

Sunflower plant cultivation More Income five important points  இந்தியாவில் 80 மற்றும் 90 வருடங்களில் சமையலுக்கு சூரியகாந்தி என்னை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் அதை பயிர் செய்யும் பரப்பளவு அதிகமானது. இதை விவசாயிகள் பயிரிடுவதற்க்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளன . 1) சூரியகாந்தி ஒரு குறுகிய காலப்பயிர் ஆகும்.80 முதல் 115 நாட்கள் ஆகும் .  ஜயத் பயிர் பருவதிற்க்கு ஏற்றது . ரபி மற்றும் கரிப் பருவத்திற்க்கு இடையில் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரக்கூடிய மாற்று பயிராக இருக்கும். 2) அடுத்ததாக இதன் ரகங்கள் பற்றி சொல்லலாம் PAC 36 சூரியகாந்தி ரகம் விவசாயிகளுக்கு சிறந்த வாழ்வாதாரமாக இருக்கிறது . சூரியனை விரும்பும் பயிர் என்பதால் மானாவாரியில் கூட பயிர் செய்யலாம் . 3) இது மாறுபட்ட மண் மற்றும் வேளாண் காலநிலை நிலைகளில் வளரக்கூடியது. 4) சூரியகாந்தியில் பூச்சி நோய் மேலாண்மை செய்வது எளிமை  5) இது விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை தருவதால் பணப்பயிர் என்றே அழைக்கப்படுகிறது . இது ஒரு லாபகரமான பயிராகும் . சூரியகாந்தி பயிர் செய்யும்போது  கவனிக்கவேண்டியவை   1) சரியான ரகங்கள...

இயற்கை முறை நிலக்கடலை சாகுபடியில் கவனிக்க வேண்டியவை

Natural methods to look out for in groundnut cultivation நிலக்கடலை சாகுபடி  அசோஸ்பைரில்லம் ,  ரைசோபியம் விளையக்கூடிய நிலக்கடலை பூமிக்கு கீழே இருக்கு . ஆரம்பத்தில் அசோஸ்பைரில்லம் பயன்படுத்தலாம்  40 நாட்களுக்கு பிறகு வேளாண் அலுவலகம் அல்லது கடைகளில் ரைசோபியம் கிடைக்கும் அதை வாங்கி பயன்படுத்தனும். அசோஸ்பைரில்லம் பவுடரடாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 4 கிலோ மணலோடு கலந்து தெளிக்கணும் . இதிலிருந்து 5 நாட்கள் கழித்து பாஸ்போ பாக்டீரியா ஏக்கருக்கு 2 கிலோ உங்கள் நிலைத்து மண்ணிலேயே கலந்து துவலாம் அல்லது தண்ணீர் வழியாக விடலாம். நிலக்கடலையின் வேர்களுக்கு இப்படி செய்வதால் நிலக்கடலையின் வேர்களுக்கு கிடப்பதை உறுதிப்படுத்தலாம் . இதில் சூடோமோனசை , விரிடி அல்லது பேசில்லஸ் சாப்ஸ்டில்ஸ்  தெளிச்சும் கொடுக்கணும் தரைவழியும் கொடுக்கணும் 15 நாட்களுக்கு அல்லது மாதம் ஒரு முறை கொடுக்க வேண்டும் . 10 லிட்டருக்கு 50 மில்லி அல்லது 100கிராம்  கலந்து தெளிக்கலாம் . தரை வழியென்றால் ஒரு ஏக்கருக்கு  ஒரு லிட்டர் கொடுக்க வேண்டும் . இப்படி நிலக்கடலைக்கு  செய்யும்போது  ஆரம்பத்துல ஒரு இரண்ட...

இயற்கை நிலக்கடலை சாகுபடி மேலாண்மை

Organic Groundnut Cultivation Management கடலை செடி  வெட்டுக்கிளி தாக்குதல்  இலைகள் ஓட்டை ஓட்டையாக இருந்தால் வெட்டுக்கிளி தாக்குதலாக இருக்கலாம் அல்லது கடலை இலைகளை கடிக்க கூடிய  சில பூச்சிகளோட  தாக்குதலாக இருக்கலாம். அந்த ஓட்டையை நாம் சரி பண்ணியாக வேண்டும் , இல்லையெனில் அது வைரஸ் தாக்குதல் அளவுக்கு கொண்டுபோய்விடும் . இதனால் பூக்காது அதனால் காய்கள் வராது. இதற்க்கு கரைசல்கள் எதாவது கொடுக்கலாம் வேப்பெண்ணை கரைசல் , ஐந்திலை , பத்திலை  கஷாயம் , அல்லது அக்னி அஸ்திரம் , கற்பூரக்கரைசலை எட்டு நாளைக்கு ஒரு முறை தெளிக்கலாம் கொஞ்சம் செலவானாலும் கடலை செடிக்கு இதை செய்வது முக்கியம்  பூஞ்சை தாக்குதல்  கடலை செடியின் இலைகள் மஞ்சளும் பச்சையுமாக இருந்தால் பூஞ்சாண தாக்குதலாக இருக்கலாம் இது அடுத்த கட்டமாக சிகப்பு புள்ளி  வரலாம் அல்லது கருப்பு புள்ளி வரலாம் இதுவும் வேர் மற்றும் காய் வளர்ச்சியை பாதிக்கும் இதற்க்கு சூடோமோனஸ் மற்றும் பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ் இது இரண்டையும் 10 லிட்டருக்கு ஐம்பது ஐம்பது மில்லி கலந்து தெளிக்கலாம். இரவை பயிர் தரைவழியும் கொடுக்க முடியும்மென்றால் ஒவ்...

இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி

இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி (105 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை அடியுரமாக ஒரு ஏக்கருக்கு நான்கு டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் , 2 கிலோ சூடோமோனஸ், 75 கிலோ சாம்பல் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு கொடுப்பது நல்லது *வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை*  3 மூன்றாம் நாள் உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம். 5 ம் நாள்  நடவு செய்த 12 ம் நாள் E.M 100 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் அரை லிட்டர் எம் கரைசல் கலந்து தரைவழி தரவும்.  நடவு செய்த 12 ம் நாள் பஞ்சகாவியா  200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 1 _2 லிட்டர் கொடுக்கலாம்.  நடவு செய்த 17 ம் நாள் ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தரைவழி தரவும்.  20ம் நாள்  மீன் அமிலம் 60 ml per 10 liter tank spray செய்யவும் .மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி தரவும்.  25ம் நாள்  கற்பூர கரைசல்  spray செய்யவும் .  30ம் நாள்  பஞ்சகாவிய...