Ad Code

Ticker

6/recent/ticker-posts

சூரியகாந்தி பயிர் செய்வதற்க்கு நீங்கள் ஐந்து முக்கிய விஷயங்கள்

Sunflower plant cultivation More Income five important points 



இந்தியாவில் 80 மற்றும் 90 வருடங்களில் சமையலுக்கு சூரியகாந்தி என்னை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் அதை பயிர் செய்யும் பரப்பளவு அதிகமானது.


இதை விவசாயிகள் பயிரிடுவதற்க்கு 5 முக்கிய காரணங்கள் உள்ளன .


1) சூரியகாந்தி ஒரு குறுகிய காலப்பயிர் ஆகும்.80 முதல் 115 நாட்கள் ஆகும் .  ஜயத் பயிர் பருவதிற்க்கு ஏற்றது . ரபி மற்றும் கரிப் பருவத்திற்க்கு இடையில் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரக்கூடிய மாற்று பயிராக இருக்கும்.


2) அடுத்ததாக இதன் ரகங்கள் பற்றி சொல்லலாம் PAC 36 சூரியகாந்தி ரகம் விவசாயிகளுக்கு சிறந்த வாழ்வாதாரமாக இருக்கிறது . சூரியனை விரும்பும் பயிர் என்பதால் மானாவாரியில் கூட பயிர் செய்யலாம் .


3) இது மாறுபட்ட மண் மற்றும் வேளாண் காலநிலை நிலைகளில் வளரக்கூடியது.


4) சூரியகாந்தியில் பூச்சி நோய் மேலாண்மை செய்வது எளிமை 


5) இது விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை தருவதால் பணப்பயிர் என்றே அழைக்கப்படுகிறது . இது ஒரு லாபகரமான பயிராகும் .

சூரியகாந்தி பயிர் செய்யும்போது 
கவனிக்கவேண்டியவை 


 1) சரியான ரகங்களை தேர்ந்தெடுத்தல் 

 உங்கள் பகுதிக்கு எந்த ரகம் என்பதை அறிந்துகொண்டு பயிர் செய்தால் நல்ல அதிக விளைச்சல் வரும் , நல்ல விதைகள் வரும் ,எண்ணையின் அளவும் தரமும் நன்றக இருக்கும் TNAUSUF 7 (CO 4), TNAU Sunflower Hybrid CO 2, COSFV 5 போன்ற ரகங்கள் தமிழ்நாட்டில் பயிர் செய்யப்படுகிறது 


 2) பருவத்தே பயிர்செய் 


 பருவம் என்பது மிக முக்கியம் நீண்டகால ரகமாக இருந்தால் விரைவாகவும் குறுகியகால ரகமாக இருந்தால் கொஞ்சம் இறுதியாகவும் விதைக்கலாம் . கரிஃப் பருவத்தில் ஜூலை முதல் வாரமும் , ரபி பருவத்தில் அக்டோபர் 1 முதல் 14 நாட்களுக்குள்ளும் ஜயத் பயிர் பருவத்தில் ஜனவரி கடேசி அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலும் விதைக்கலாம்


 3) இயற்கை இடு பொருட்கள் 


 சரியான காலத்தில் இயற்கை இடுபொருட்கள் கொடுத்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் சூரியகாந்தியை பொறுத்தவரை சாம்பல் , மணி சத்து மற்றும் போரான் சத்து மிக முக்கியமாகும் .


 4) நீர் மேலாண்மை 


 9 முதல் 10 நாள் இடைவெளியில் நீர் விடவேண்டும் 10 முதல் 12 நாள் இடைவெளியில் பிப்ருவரியிலும் 8 முதல் 10 நாள் இடைவெளியில் மார்ச்சிலும் 6 முதல் 8 நாள் இடைவெளியில் ஏப்ரலில் 4 முதல் 6 நாள் இடைவெளியில் மே நீர் விடலாம் அதேசமயம் நீர் மேலாண்மை என்பது மண்ணின் தன்மையும் காலநிலையையும் பொறுத்து அமையும் . 


 5) பூச்சி நோய் மேலாண்மை


 இயற்கை வேளாண்மையை பொறுத்தவரை வருமுன் காப்பதே சிறந்தது சூரியகாந்தியில் என்னவகையான பூச்சி அல்லது நோய்கள் தாக்கும் என்பதை தெரிந்து வைத்துஇருக்க வேண்டும் அதற்கேற்ற ரகங்களை தேர்தெடுக்கலாம் அல்லது பூச்சி விரட்டிகளை கைவசம் வைத்திருக்கலாம் .

Post a Comment

0 Comments