ஒரு பயிர் மட்டும் விதைக்காமல், கூடவே ஊடுபயிராக மற்றொரு பயிரையும் சேர்த்து விதைக்கும்போது கூடுதல் வருமானம் மட்டுமில்லாமல் மண்ணின் வளத்தை கூட்ட முடியும். ஊடுபயிர் மூலம் விவசாயம் செய்பவர்கள் ஒரு பயிர் கைவிட்டாலும் மற்றொன்று காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலும் இருக்கலாம். சில ஊடுபயிர்களின் தழைகள் கால்நடைத் தீவனமாகவும் பயன்படும். களைகளையும் கூடவே கட்டுப்படுத்தலாம். ஊடுபயிராக வளர்க்க கூடிய சில மரங்கள், சாதரணமாக வளரும் மரத்தை காட்டிலும், உயரமாக வளர்ந்து லாபம் தரும். ஆனால் எந்த பயிரை ஊடுபயிராக விதைக்க வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும். #சரியான_ஊடு_பயிர்கள்: 🔸ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற சில கூட்டுப் பயிர்கள் உண்டு. உதாரணத்திற்கு கம்பு பயிர் செய்யும்போது, கூடவே துவரை, எள், தட்டைப் பயிர் கலந்து விதைக்கலாம். இப்பயிர் வகைகள் காற்றில் இருக்கும் தழைச்சத்தை இழுத்து மண்ணை வளப்படுத்தும். 🔸கரும்பு சாகுபடிக்கு ஏற்ற ஊடு பயிர்- உளுந்து, தட்டைப் பயிர். மூன்றே மாதத்தில் ஊடுபயிரிலிருந்து வருமானம் கிடைத்து விடும். 🔸தென்னை சாகுபடி செய்யும்போது, கூடவே பாக்கு மரம் நடலாம்.வாழை தோப்பில், கருணைக்கிழங்கு, வெ...