விவசாய பயிர் காப்பீடு என்றால் என்ன ? விவசாய பயிர் காப்பீடு பற்றி தெரிந்து கொள்வோமா புயலாக இருந்தாலும் வறட்சியாக இருந்தாலும் விவசாயிகளின் மத்தியில் முக்கியமாக விவாதிக்கப்படும் வார்த்தை "விவசாய காப்பீடு" அதுவும் நிவர் மற்றும் புரெவி அதிகம் பேசப்படுகிறது வேளாண்மை அலுவலகங்களில் காப்பீடு செய்வதற்கு முன்பு அதை பற்றிய சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது ஒவ்வொரு விவசாயியும் கஷ்ட்டப்பட்டு உழைத்ததை இறுதியில் புயலோ வறட்சி போன்ற சேதமடைவது தொடர்கதையாக உள்ளது இப்படி சேதமடைவதிலிருந்து ஏற்படும் இழப்புகளை சரிக்கட்டுவதற்கு பயிர் காப்பீடு செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன . இதற்க்காக முன்னாள் இருந்த திட்டத்தை மேம்படுத்தி ''புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டமாக மாற்றியுள்ளது" இதை பற்றி பாப்போம் 1) இந்த காப்பீடு செய்வதற்க்கு முன் விவசாயி எந்தக்கடனும் வாங்கி இருக்கக்கூடாது ஒருவேளை நீங்கள் கடன் வாங்கியிருந்தால் அந்த வங்கியிலே நீங்கள் பயிர் பயிர் காப்பீடு செய்யலாம் . நீங்கள் பயிர் செய்வதற்கு முன்பே முதல் செலவாக பயிர் காப்...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்