Ad Code

Ticker

6/recent/ticker-posts

What is Agricultural Crop Insurance?

விவசாய பயிர் காப்பீடு என்றால் என்ன ?



விவசாய பயிர் காப்பீடு பற்றி தெரிந்து கொள்வோமா 



புயலாக இருந்தாலும் வறட்சியாக இருந்தாலும் விவசாயிகளின் மத்தியில் முக்கியமாக விவாதிக்கப்படும் வார்த்தை "விவசாய காப்பீடு" அதுவும் நிவர் மற்றும் புரெவி  அதிகம் பேசப்படுகிறது வேளாண்மை அலுவலகங்களில் காப்பீடு செய்வதற்கு முன்பு அதை பற்றிய சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது 

ஒவ்வொரு விவசாயியும் கஷ்ட்டப்பட்டு உழைத்ததை இறுதியில் புயலோ வறட்சி போன்ற சேதமடைவது தொடர்கதையாக உள்ளது இப்படி சேதமடைவதிலிருந்து ஏற்படும் இழப்புகளை சரிக்கட்டுவதற்கு பயிர் காப்பீடு செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன . இதற்க்காக முன்னாள் இருந்த திட்டத்தை மேம்படுத்தி ''புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டமாக மாற்றியுள்ளது"  இதை பற்றி பாப்போம் 

1) இந்த காப்பீடு செய்வதற்க்கு முன் விவசாயி எந்தக்கடனும் வாங்கி  இருக்கக்கூடாது ஒருவேளை நீங்கள் கடன் வாங்கியிருந்தால் அந்த வங்கியிலே நீங்கள் பயிர் பயிர் காப்பீடு செய்யலாம் . நீங்கள் பயிர் செய்வதற்கு முன்பே முதல் செலவாக பயிர் காப்பீடு இருக்கவேண்டும் .

2) உங்களுடைய ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கபட்டிருக்க வேண்டும் மேலும் மின்னணு பரிமாற்றத்திற்கு ஏற்ற வகையில் உங்கள் கணக்கு இருப்பது அவசியம் 

3) காப்பீட்டில் இணைவதற்கான படிவம் , உங்களுடைய வங்கி   பாஸ்புக்கின் முதல் பக்கத்தோட நகல் ( வங்கி கணக்கு எண் மற்றும் I f s c கோடு  இருப்பது அவசியம் ) ஆதார் அட்டை நகல் , சிட்டா  அடங்கல் போன்றவற்றையும் இணைக்க வேண்டும் 



4)  இந்த காப்பீட்டு திட்டத்தில் இனைய உங்கள் ஊரில் அருகில் உள்ள வேளாண் துறை அலுவலகம் அல்லது பொதுசேவை மையம் அல்லது  கிராம வங்கிகள் , தொடக்க வேளாண்மை கூட்டுறவு  வங்கிகள் , மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும்  தேசியமயமான வங்கிகளின் வழியாக இந்த திட்டத்தில் சேரலாம் .

5) ஒருவேளை விதைப்பதற்கு முன்பு நீங்கள் பயிரை காப்பீடு செய்ய நினைத்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் விதைப்பு சான்றிதழ் பெற்று கொடுக்கவேண்டும் அது காப்பீட்டு திட்டத்தை உள்ளடங்கியதாக இருப்பது அவசியம் , அதேசமயம் நீங்கள் விதைத்த ஒரு மாதத்திற்குள்  அடங்கலை சமர்பித்தாகவேண்டும்  .




6) ஒரு சில பயிர்களுக்கு சில மாவட்டங்களில் , சில குறு வருவாய் உள்ள வட்டங்களில் மட்டும் செயல்படுகிறது. எனவே உங்கள் பகுதிகளில் எந்த மாதிரியான காப்பீட்டு திட்டங்கள் இருகிறது என்பதை தெரிந்து கொண்டு காப்பீடு செய்வது நல்லது. ஒருவேளை உங்கள் பகுதியில் காப்பீடு செய்யல்படுத்தாத பகுதியாக இருந்தால் நீங்கள் நீங்கள் காப்பீடு செய்திருந்தாலும் , காப்பீட்டு  அல்லது நிவாரண தொகையோ கோரா முடியாது .


7) என்ன வகையான காப்பீட்டு  திட்டம் உங்கள் பகுதியில் உள்ளது என்பதை அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசாங்கம் காப்பீட்டுக்கான தொகையை வரையறுத்துள்ளது ஒரு ஏக்கருக்கு 32,950 ரூபாய் காப்பீட்டுத் தொகையாக நெல்லிற்கும் ,494 ரூபாய் அதற்கான ப்ரீமியமாகவும் செலுத்தவேண்டும் .

8) எண்ணெய் வித்து மற்றும் உணவுதானிய பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகையிலிருந்து ஒன்னரை சதவீதம் ப்ரீமியமும் , பணப்பயிர் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ஐந்து சதவீதமும் பிரிமியம் செலுத்த வேண்டும் .





 9) பயிர் காப்பீடு செய்தவுடன் இருந்துவிடாமல் , பயிர் செய்வதற்காக  கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் மற்றும் கிராம நிர்வாக அலுவலக பதிவேட்டில்லும் பதிவது முக்கியம் ஒருவேளை இந்த இரண்டையும் நீங்கள்  செய்யவில்லையெனில்  காப்பீட்டுத் தொகையும், நிவாரணமும் பெற முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


10) வறட்சியாலோ அல்லது புயலால் பயிர்கள் சேதமடைந்திருக்கிறது என்பதை வேளாண்மை அலுவலர்கள் சம்பத்தப்பட்ட ஊரில் விசாரித்து அவர்கள் சம்பந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்களுக்குத் தகவல் அனுப்புவார்கள். இதன் அடிப்படையில்தான் பயிர் நிவாரணமும், காப்பீட்டு தொகையும் கிடைக்கும் . ஒரு குறிப்பிட்ட விவசாயி மட்டும் பாதிக்கப்பட்டார் என்பதற்காக காப்பீடு வாங்கமாட்டார்கள் . மற்றும் எவ்வளவு காப்பீடு வழங்குவது என்பதும் முன்பே  முடிவு செய்யப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் 500 ஹெக்ட்ர் என்று வரையறுக்கப்பட்டிருந்தால்  அந்த பரப்பளவுக்கு மட்டுமே காப்பீடு கிடைக்கும்.

11) என்ன வகையான பேரிடர்  பாதிப்பு என்பதையும் முன்னரே வரையறுத்து இருக்கிறார்கள். பயிரிடும்  காலத்தில், கடுமையான வறட்சிமற்றும்  வெள்ளம், புயல், சூறாவளிக் காற்று, அதிக பரப்பளவில் பூச்சி நோய் தாக்குதல், நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஏற்றவாறு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

11) என்ன வகையான பேரிடர்  பாதிப்பு என்பதையும் முன்னரே வரையறுத்து இருக்கிறார்கள். பயிரிடும்  காலத்தில், கடுமையான வறட்சிமற்றும்  வெள்ளம், புயல், சூறாவளிக் காற்று, அதிக பரப்பளவில் பூச்சி நோய் தாக்குதல், நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஏற்றவாறு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

12) தற்போது சம்பா பருவத்தில் மக்காச்சோளம், பருத்தி, நெல்,  பயிர் செய்தவர்கள் மட்டுமின்றி, தோட்டக்கலை பயிர்களான  தக்காளி, வாழை, தென்னை போன்ற  பயிர் செய்தவர்களுக்கும் காப்பீடு செய்யலாம் . வேளாண் காப்பீட்டுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், கூடுதல் விவரங்கள் போன்றவற்றையும் முன்னரே படித்துத் தெரிந்துகொண்டு காப்பீடு செய்வது நல்லது.

Post a Comment

0 Comments