பப்பாளி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு தமிழகத்தில் பப்பாளி பொதுவாக செம்மண் செம்மண் சரளை மணல் பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமான நோய் தாக்குதலும் வைரஸ் தொல்லைகளாலும் பப்பாளியில் முழுமையாகவே விளைச்சல் எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இதனை தவிர்க்க பப்பாளி விவசாயம் செய்வோர் கீழ்க்கண்ட முறைகளை கடைப் பிடிக்கலாம். பப்பாளி நடுவதற்கு தயார் செய்ய குழி எடுத்து காய வைக்கும் காலத்தில் குறைந்தபட்சம் 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 10 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் உடன் 10கிலோ தொலுவுரம் அல்லது 200 கிராம் அசோஸ் பைரில்லம் கலந்து தண்ணீர் கொடுத்து வைக்கலாம். ஒவ்வொரு குழிகளிலும் குறைந்தபட்சம் 10 கிலோ அளவுள்ள மட்கிய தொழுவுரம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் மேற்கண்ட சூடோமோனஸ் தூளுடன் கலந்து அடியுரமாக இடலாம். ஒவ்வொரு மாதமும் பழம் பூ பூக்கும் ஏழாம் மாதம் முன்பு வரை ஒவ்வொரு மாதமும் தரைவழி அதிக அளவில் தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து அதிகமாகவும் மணிச்சத்து குறைவாகவும் இருக்குமாறு இடுபொருட்களை கொடுப்பது மிகவும் முக்கியம். முதல் மாதத்தில் வாரம் ஒருமுறை மீன்...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்